செய்திகள் :

Claude-ன் கண்ணுக்குத் தெரியாத Watermark: “AI எழுதியதை இனி மறைக்க முடியாதா?”

post image

Anthropic நிறுவனம் தனது Claude AI மூலம் உருவாக்கப்படும் text-ல் மனிதர்களால் எளிதில் கண்டறிய முடியாத “Invisible Watermark” ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 2, 2026 முதல் Claude models-ல் இந்த watermark இடம்பெற்று வருவதாகவும், பழைய models-க்கும் support வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த watermark-ன் முக்கிய சிறப்பு, Claude உருவாக்கிய text-ஐ ஒருவர் copy-paste செய்தாலும் அந்த அடையாளம் தொடரும் என்பதுதான். இதைக் கண்டறிய Anthropic விரைவில் ஒரு detection tool-ஐ வெளியிட உள்ளது.

AI தற்போது social media posts, school assignments, job applications என பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு text மனிதனால் எழுதப்பட்டதா அல்லது AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை உறுதியாக கண்டுபிடிப்பது கடினம்.

இதனால் Claude-ன் watermark, transparency- க்கு உதவும் என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, மாணவர்கள் AI-யைப் பயன்படுத்தி assignment அல்லது academic work உருவாக்கிவிட்டு, அதை முழுவதும் தங்களுடையதாகக் காட்டுவதைக் கண்டறிய ஆசிரியர்களுக்கு இது கூடுதல் கருவியாக இருக்கலாம்.

ஆனால் இதில் இருக்கும் பிரச்னை என்னவென்றால், இந்த watermark, Claude அந்த content-ல் “likely involved” என்று மட்டுமே காட்டும்; முழு text-ஐ Claude தான் எழுதியது என்பதை உறுதியாக நிரூபிக்காது என்று Anthropic தெரிவித்துள்ளது.

உதாரணமாக, ஒருவர் தனது சொந்த கட்டுரையை Claude மூலம் grammar correction, translation அல்லது summary செய்ய வைத்தாலும் watermark சில நேரங்களில் தொடரலாம். இதனால் அந்த எழுத்து முழுவதும் AI-generated என்று தவறாக புரிந்துகொள்ளப்படும் அபாயம் உள்ளது.

AI-generated content அதிகமாக இணையத்தில் பரவி, அடுத்த தலைமுறை AI models-ன் training data-வில் மீண்டும் மீண்டும் சேரும்போது அதன் quality பாதிக்கப்படலாம் என்ற கவலை உள்ளது.

எனவே, AI-generated text-ஐ அடையாளம் காணும் watermark, எதிர்காலத்தில் AI content-ஐ training data- வில் பிரித்து அறிய உதவக்கூடும்.

Claude-ன் invisible watermark ஒருபுறம் AI பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கக்கூடிய தொழில்நுட்பம். மறுபுறம், AI-யை உதவிக் கருவியாக மட்டும் பயன்படுத்தியவர்களுக்கும் தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

AI பயன்படுத்தியதை தெரிந்துகொள்வது முக்கியமா? அல்லது AI பயன்படுத்தியதற்கான நிரந்தர அடையாளம் இருக்கக் கூடாதா? இந்த கேள்விதான் எதிர்கால AI உலகில் watermark-ன் முக்கியத்துவத்தை தீர்மானிக்கலாம்.

LED TV பழுதைச் சரிசெய்ய புதிய கருவி: "7 வினாடிகளில் பிரச்னையைக் கண்டறியும்"- அசத்திய கரூர் இளைஞர்கள்

கரூர் மாவட்டம், வெள்ளியணை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. டி.வி மெக்கானிக்கான இவரது மகன்கள் சுரேஷ், பிரசாந்த் இருவரும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரு... மேலும் பார்க்க

இனி டீனேஜர்களுக்குத் தனி ChatGPT! – ‘Quiet Hours’, ‘Study Mode’ என புதிய பாதுகாப்பு அம்சங்கள்!

AI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டீனேஜர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘ChatGPT for Teens’ என்ற புதிய அனுபவத்தை OpenAI அறிமுகப்படுத்தியுள்ளது.13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்க... மேலும் பார்க்க

`உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்' - காரைக்குடி அரசுப் பள்ளி மாணவர்களைப் பாராட்டிய நாசா விஞ்ஞானி!

13 அரசுப் பள்ளி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய VIGO செயற்கைக்கோள், கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி காலை 9.45 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியிலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் உயரத்தை நோக்கிப் ப... மேலும் பார்க்க

Makkal Bus: என்ன பஸ்... என்ன ரூட்? - மதுரை மக்களுக்காக கல்லூரி மாணவர் உருவாக்கிய அசத்தல் `செயலி'

மதுரை மாவட்டம், வில்லாபுரம் மீனாட்சி நகர்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராகுல்ராஜ் ஜெயராமன். மதுரை மக்களுக்காக பிரத்யேக நகர்ப்புற பேருந்து செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். இவர் மதுரையில் உள்ள அரசு உதவிபெறு... மேலும் பார்க்க

ஆகாயத் தாமரையிலிருந்து பேப்பர்... ஐ.நா சபை வரை அசத்தும் தமிழ்ப் பெண் சுஷ்மிதா கிருஷ்ணன்!

சுஷ்மிதா கிருஷ்ணன்நம் நாட்டை விட்டுப் போகும் போது, ஆங்கிலேயர், நிலத்தில் பார்த்தீனியத்தையும், நீரில் ஆகாயத் தாமரையையும் விட்டுச் சென்றதாக ஒரு சொல்வழக்கு உள்ளது. காரணம், இவை இரண்டும் மிக விரைவாகப் பரவக... மேலும் பார்க்க

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களில் மாற்றம்: ரூ.299 பிளான் ரத்து; பயனர்களுக்கு கூடுதல் செலவு!

இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களை உயர் மதிப்புள்ள திட்டங்களுக்கு மாற்றும் நோக்கில் பல பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களை அதிரடியாக நீக்கியுள்ளது. நேரடியாகக் கட்டண உயர்வ... மேலும் பார்க்க