செய்திகள் :

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களில் மாற்றம்: ரூ.299 பிளான் ரத்து; பயனர்களுக்கு கூடுதல் செலவு!

post image

இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களை உயர் மதிப்புள்ள திட்டங்களுக்கு மாற்றும் நோக்கில் பல பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களை அதிரடியாக நீக்கியுள்ளது. நேரடியாகக் கட்டண உயர்வை அறிவிக்காமல், குறைந்த விலைத் திட்டங்களை ரத்து செய்வதன் மூலம் மறைமுகமாக ரீசார்ஜ் செலவை உயர்த்தியுள்ளது ஏர்டெல்.

ஏர்டெல் பயனர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற தினமும் 1.5GB டேட்டாவை 28 நாள்களுக்கு வழங்கி வந்த ரூ.299 திட்டம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனுடன் ரூ.579, ரூ. 619 மற்றும் ரூ. 649 ஆகிய இடைநிலை ப்ரீபெய்ட் திட்டங்களும் நீக்கப்பட்டுள்ளன.

இதனால், ரூ. 299 திட்டத்தைப் பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் இனி நேரடியாக ரூ.349 திட்டத்திற்கு மாற வேண்டும். இதன் மூலம் அதே 28 நாள்களுக்குக் கூடுதல் 0.5GB டேட்டாவுடன் தினமும் 2GB டேட்டாவைப் பெறலாம் என்றாலும், மாதத்திற்கு ரூ.50 கூடுதலாகச் செலவிட நேரிடும்.

airtel

அதேநேரத்தில் தினமும் 3GB டேட்டா விரும்பும் பயனர்களுக்காக 28 நாள்கள் வேலிடிட்டியுடன் ரூ.399 திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மேலும் குறைந்தபட்ச வரம்பற்ற குரல் அழைப்புகளுக்கான ரூ.199 அடிப்படைத் திட்டம் எந்த மாற்றமுமின்றித் தொடர்ந்து கிடைக்கிறது.

நேரடிக் கட்டண உயர்வைத் தவிர்க்கவே ஏர்டெல் இந்த மாற்றத்தைச் செய்துள்ளது. இருப்பினும், இந்த ஆண்டின் இறுதியில் தொலைத்தொடர்புத் துறையில் 12% முதல் 15% வரை பொதுவான கட்டண உயர்வு இருக்கக்கூடும் எனச் சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

ஸ்டைலான டிசைன்; ஸ்மார்ட்டான கேமரா... அசத்தலான AI அம்சங்கள் - அறிமுகமான vivo S2!

ஸ்டைல், கேமரா, பெர்ஃபார்மென்ஸ் என இன்றைய இளம் தலைமுறையினரின் ஸ்மார்ட்போன் எதிர்பார்ப்புகளை மனதில் வைத்து, vivo நிறுவனம் தனது S Series-ன் புதிய மாடலான vivo S2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியு... மேலும் பார்க்க

`கையில் ரூ.1.87 லட்சம்; 6 நண்பர்கள்; ஒரு மாடி அறை'- HCL நிறுவனம் உருவான கதையை பகிர்ந்த அஜய் சௌத்ரி!

'ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட்' (HCL) நிறுவனம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அதன் இணை நிறுவனர் அஜய் சௌத்ரி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் நிறுவனத்தின் ஆரம்பக்கால நினைவுகளைப் பகிர்ந்தி... மேலும் பார்க்க

Meta AI glasses: நாளைய தொழில்நுட்பமா... தனியுரிமைப் பிரச்னையா? விடை தேடுமா உலக நாடுகள்?

Meta உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ள AI Smart Glasses (செயற்கை நுண்ணறிவு கண்ணாடிகள்) உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் அதேவேளையில், பொதுமக்களின் தனியுரிமை, ப... மேலும் பார்க்க

YouTube Monetization : புதிய செக் வைக்கும் யூடியூப் - யூட்யூபர்ஸ் அறிய வேண்டிய முக்கிய அம்சங்கள்!

யூடியூப் நிறுவனம் தனது கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு YouTube Partner Program தகுதி விதிகளில் மிகப்பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. பிப்ரவரி 1, 2027 முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய விதிகளின்படி, வி... மேலும் பார்க்க

பறக்கும் கார்: பத்தே நிமிடங்களில் 40 கி.மீ கடக்கலாம்; உத்தரகாண்ட் இளைஞரின் அசத்தல் முயற்சி!

உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் ரவி தம்தா உருவாக்கிய ‘ஹபிடா ஸ்கைநெக்ஸ்’ (HAPIDA SKYNeX) என்ற மின்சாரப் பறக்கும் கார் தற்போது நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது... மேலும் பார்க்க

Victor Riparbelli: நோ சொன்ன 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள்; இன்று ₹38,000 கோடி AI சாம்ராஜ்யம்!

செயற்கை நுண்ணறிவு (AI) உலகம் முழுவதும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், ChatGPT அறிமுகமாகி Generative AI உலகளவில் பெரும் கவனம் பெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, 'Text மட்டும் பயன்படுத... மேலும் பார்க்க