செய்திகள் :

"முக்கிய பங்குள்ள பத்திரிகையாளர்களை ஏன் அனுமதிக்கவில்லை?" - முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து TRB ராஜா

post image

இன்று தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு செய்தியாளர்கள் அழைக்கப்படாதது பேசுபொருளானது.

இதையடுத்து முன்னாள் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...

"எங்கள் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின், எங்கள் எதிர்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் மற்றும் என்னை பொறுத்தவரை, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, குறிப்பாகத் தொழில் துறை வளர்ச்சியை விட முக்கியமானது வேறு எதுவுமே இல்லை.

நம் மாநிலத்தில் வரக்கூடிய ஒவ்வொரு முதலீடும், அமைக்கப்படும் ஒவ்வொரு தொழிற்சாலையும், உருவாக்கப்படும் ஒவ்வொரு வேலைவாய்ப்பும் எங்களுக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகிறது.

ஆம், ஆட்சியில் எந்தக் கட்சி இருக்கிறது என்பதையெல்லாம் தாண்டி நாங்கள் இதை வரவேற்கிறோம்.

டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா

அதனால்தான், இன்று 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகக் கூறப்படும் உரிமைகோரலில் கூடுதல் வெளிப்படைத்தன்மை தேவை என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இன்றைய நிகழ்வில் பத்திரிகையாளர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது என்பதே பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது!

கடந்த பல தசாப்தங்களாகத் தமிழ்நாட்டின் முதலீட்டு வளர்ச்சியை உலகிற்கு எடுத்துரைப்பதில் சென்னையில் உள்ள தொழில் துறைப் பத்திரிகையாளர்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். அப்படிப்பட்டவர்களை இந்த நிகழ்விலிருந்து ஏன் ஒதுக்கி வைத்தீர்கள்? அந்த 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அதிகாரப்பூர்வப் பட்டியலை இதுவரை ஏன் வெளியிடவில்லை?

கிடைத்த தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, உண்மை நிலைமை தெளிவாகப் புரிகிறது:

* முதலீட்டு மதிப்பில் சுமார் 75% மற்றும் வேலைவாய்ப்புகளில் 83% பங்கைக் கொண்டுள்ள கிட்டத்தட்ட 70 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்கங்கள் அல்லது மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சிக் காலத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்ட முதலீட்டு முயற்சிகள் என்பது தெளிவாகிறது.

* டைட்டன் நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு என்பது, டிட்கோ அமைப்பு மூலம் அம்மாநில அரசுடன் அந்த நிறுவனத்திற்கு ஏற்கனவே இருக்கும் உறவின் அடிப்படையில் வந்ததாகும்.

முதலீட்டாளர்கள் மாநாடு
முதலீட்டாளர்கள் மாநாடு

* புதியது அல்லது புதிதாக வர வாய்ப்புள்ளது எனக் கருதப்படும் அனைத்து முதலீடுகளையும் நாம் தாராளமாகச் சேர்த்துக்கொண்டால் கூட, அது வெறும் 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே! இதன் முதலீட்டு மதிப்பு 23% மற்றும் வேலைவாய்ப்பு 15% மட்டுமே ஆகும்.

ஒன்றை நான் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்:

நிறுவனங்களின் விரிவாக்கம் வரவேற்கத்தக்கது.

முன்பு பேசப்பட்ட முதலீடுகள் இப்போது உறுதியாவதும் வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு வேலைவாய்ப்பும் வரவேற்கத்தக்கது.

ஆனால், முந்தைய ஆட்சிக் காலத்தில் ஏற்கெனவே வளர்த்தெடுக்கப்பட்டு, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அல்லது அறிவிக்கப்பட்ட ஒரு முதலீடு, ஒரு புதிய மாநாட்டில் காட்சிப்படுத்தப்படுகிறது என்பதற்காக மட்டுமே திடீரென்று 'புதிய சாதனை' ஆகிவிட முடியாது.

திமுக ஆட்சியில் இருந்த போதெல்லாம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி புதிய உச்சங்களைத் தொட்டிருந்தாலும், மாநிலத்தின் இந்தத் தொழில் வெற்றி என்பது எந்தவொரு தனிப்பட்ட அரசியல் கட்சிக்கும் சொந்தமானது அல்ல. திமுக எப்போதும் இதை மதித்து நடந்துள்ளது.

அதனால்தான், நமது பன்முகத் திறமை கொண்ட தொழில் சூழலின் பலத்தையும், நமது தொழிலதிபர்களையும், முதலீட்டாளர்களையும் நாம் எப்போதுமே முன்னிலைப்படுத்திப் போற்றினோம்.

முந்தைய அரசு ஒரு நல்ல தொழில் சூழலை உருவாக்கி, முதலீட்டாளர்களை ஈர்த்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, திட்டங்களை வளர்த்தெடுத்து நிறுவனங்கள் விரிவாக்கம் செய்ய வழிவகுத்தது.

தற்போதைய அரசு புதிதாக என்ன கொண்டுவருகிறது என்பதைக் கொண்டும், உண்மையில் எதைச் செய்து முடிக்கிறது என்பதைக் கொண்டும் மட்டுமே நியாயமாக மதிப்பிடப்பட வேண்டும்.

அதனால்தான், இந்திய தொழில் முனைவோர் சங்கம் இன்று எழுப்பியுள்ள கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது:

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் > முதலீடு > உற்பத்தி > வேலைவாய்ப்புகள் > குரு, சிறு & நடுத்தரத் தொழில் (MSME) வாய்ப்புகள்.

குரு, சிறு & நடுத்தரத் தொழில் (MSME) அளவில் உருவாகும் வேலைவாய்ப்புகள்... வேலைவாய்ப்புகள்... வேலைவாய்ப்புகள்...

அதுவே உண்மையான அளவுகோல்.

இன்று கையெழுத்தான நிறுவனங்களின் பட்டியலைப் பத்திரிகையாளர்களுக்கு உடனடியாக வெளியிடுங்கள். அவர்கள் அதை பரிசீலிக்கட்டும். அதில் எது உண்மையில் புதியது, எது நிறுவன விரிவாக்கம், எது ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்பதை மக்கள் அறிந்துகொள்ளட்டும்.

விளம்பரங்களில் சொல்வது போல எண்கள் உண்மையிலேயே பிரம்மாண்டமானவை என்றால், இந்த வெளிப்படைத்தன்மை அந்தச் சாதனையை இன்னும் பலப்படுத்துமே தவிர பலவீனப்படுத்தாது.

தமிழ்நாட்டிற்கு உண்மையைத் தெரிந்துகொள்ளும் உரிமை உண்டு.

தமிழ்நாட்டின் வளர்ச்சியில் எப்போதும் நம்பிக்கையோடு இருப்போம்!"

காவிரி விவகாரம்: பிசுபிசுத்த கன்னட அமைப்பினரின் போராட்டம் - ஆதரவு கொடுக்காத கர்நாடக மக்கள்!

மேகதாது அணை கட்டவும், காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் கன்னட அமைப்பினர் இன்று அறிவித்த மாநிலம் தழுவிய பந்த்-திற்கு கர்நாடக மக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்காமல் போயிரு... மேலும் பார்க்க

‘ஹார்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய தவறான கணக்கு!’ - ஈரான்

ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தினம் தினம், 'போர் தீவிரமடைகிறது...', 'ஈரான் பேச்சுவார்த்தை நடத்த கெஞ்சுகிறார்கள்', 'விரைவில் போர் முடிந்துவிடும்' என்று ஒவ்வொன்றைக... மேலும் பார்க்க

தேனி: சுகாதாரமற்ற கழிவறைகள்; முகம் சுளிக்கும் பயணிகள்... புதிய பேருந்து நிலைய அவலம்!

தேனி புதிய பேருந்து நிலையத்தில் பராமரிப்பு மற்றும் தண்ணீர் வசதியின்றி பொதுக்கழிப்பிடங்கள் காணப்படுகின்றன. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தின் முக்கியமான பேருந்து நிலையமாக ... மேலும் பார்க்க

``எடப்பாடியாருக்கு பின்புலமாக இருந்தவர்களே இன்றைக்கு எதிர்க்கிறார்கள்!"- சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.க-வில் சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி தலைமையில் தனி அணியாக செயல்பட்டுவரும் எம்.எல்.ஏ-க்கள் தினம் தினம் அதிரிபுதிரி கிளப்பிக்கொண்டிருக்க... எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வினரும் சி.வி... மேலும் பார்க்க

'தீட்டுப்பட்டுவிட்டது' - கார்கேவிற்கு நடந்த சம்பவம்; சத்தியாகிரகத்தை அறிவித்த மாணிக்கம் தாகூர்!

உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானி நகரில் தனக்கு நடந்த சம்பவம் குறித்து இன்று மாநிலங்களவையில் பகிர்ந்திருந்தார் மாநிலங்கலவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ப... மேலும் பார்க்க

தனுஷ்: `அனைவருக்கும் உரிமை இருக்கிறது; இன்று எங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்..!'- அமைச்சர் கருத்து

கோவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90 சதவிகிதம் முடி... மேலும் பார்க்க