செய்திகள் :

காவிரி விவகாரம்: பிசுபிசுத்த கன்னட அமைப்பினரின் போராட்டம் - ஆதரவு கொடுக்காத கர்நாடக மக்கள்!

post image

மேகதாது அணை கட்டவும், காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் கன்னட அமைப்பினர் இன்று அறிவித்த மாநிலம் தழுவிய பந்த்-திற்கு கர்நாடக மக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்காமல் போயிருக்கிறது.

கன்னட அமைப்பினர் போராட்டம்

காவிரி நீரைப் பங்கிடுவதில் கர்நாடகா அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்னை தொடர்ந்து வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், மேகதாதுவில் காவிரி நதியை தடுத்து புதிய அணை கட்டவும் கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது.

தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து உத்தரவிட்டு வருவதை கர்நாடக அரசு அலட்சியப்படுத்தி வரும் நிலையில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக அணைகளில் நிரம்பிய நீரை வேறு வழியில்லாமல் தமிழகத்திற்கு திறந்துவிட்டது, கர்நாடகா அரசு.

காவிரி ஆறு
காவிரி ஆறு

இந்நிலையில் கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய பந்த் நடத்த உள்ளதாகவும் அதற்கு பொதுமக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், பள்ளிக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஆதரவு தர வேண்டுமென்று அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு ஒரு சில அமைப்புகள் மட்டுமே அதரவு தெரிவித்தன.

கர்நாடகாவில் இன்று பள்ளி, கல்லூரிகள், கடைகள், நிறுவனங்கள் அனைத்தும் வழக்கம்போல இயங்கின. தமிழக எல்லையில சில இடங்களில் சிறிது நேரம் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. மைசூர், அத்திப்பள்ளி உள்ளிட்ட சில இடங்களில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. நீலகிரி மாவட்டத்திலிருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. அதே நேரம், கர்நாடகவிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்திலிருந்தும் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக பெங்களூருக்கு பேருந்துகள் சென்றன.

இந்த நிலையில், போராட்டம் நடத்திய வாட்டாள் நாகராஜ் ஆதரவாளர்கள் கர்நாடக காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

"முக்கிய பங்குள்ள பத்திரிகையாளர்களை ஏன் அனுமதிக்கவில்லை?" - முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து TRB ராஜா

இன்று தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு செய்தியாளர்கள் அழைக்கப்படாதது பேசுபொருளானது. இதையடுத்து முன்னாள் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவ... மேலும் பார்க்க

‘ஹார்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய தவறான கணக்கு!’ - ஈரான்

ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தினம் தினம், 'போர் தீவிரமடைகிறது...', 'ஈரான் பேச்சுவார்த்தை நடத்த கெஞ்சுகிறார்கள்', 'விரைவில் போர் முடிந்துவிடும்' என்று ஒவ்வொன்றைக... மேலும் பார்க்க

தேனி: சுகாதாரமற்ற கழிவறைகள்; முகம் சுளிக்கும் பயணிகள்... புதிய பேருந்து நிலைய அவலம்!

தேனி புதிய பேருந்து நிலையத்தில் பராமரிப்பு மற்றும் தண்ணீர் வசதியின்றி பொதுக்கழிப்பிடங்கள் காணப்படுகின்றன. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தின் முக்கியமான பேருந்து நிலையமாக ... மேலும் பார்க்க

``எடப்பாடியாருக்கு பின்புலமாக இருந்தவர்களே இன்றைக்கு எதிர்க்கிறார்கள்!"- சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.க-வில் சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி தலைமையில் தனி அணியாக செயல்பட்டுவரும் எம்.எல்.ஏ-க்கள் தினம் தினம் அதிரிபுதிரி கிளப்பிக்கொண்டிருக்க... எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வினரும் சி.வி... மேலும் பார்க்க

'தீட்டுப்பட்டுவிட்டது' - கார்கேவிற்கு நடந்த சம்பவம்; சத்தியாகிரகத்தை அறிவித்த மாணிக்கம் தாகூர்!

உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானி நகரில் தனக்கு நடந்த சம்பவம் குறித்து இன்று மாநிலங்களவையில் பகிர்ந்திருந்தார் மாநிலங்கலவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ப... மேலும் பார்க்க

தனுஷ்: `அனைவருக்கும் உரிமை இருக்கிறது; இன்று எங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்..!'- அமைச்சர் கருத்து

கோவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90 சதவிகிதம் முடி... மேலும் பார்க்க