``எடப்பாடியாருக்கு பின்புலமாக இருந்தவர்களே இன்றைக்கு எதிர்க்கிறார்கள்!"- சொல்கிற...
"6 மாதங்கள் விஜய்க்காக வேலை பார்த்திருக்கிறேன்; ஆனால்..." - குதிரை பேர வழக்கில் கைதான திருநாவுக்கரசு
தவெக கட்சியின் எம்எல்ஏ என்.இளையராஜாவிடம், ஐபிடிஎஸ் தேர்தல் கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்தி வந்த திருநாவுக்கரசு தொலைபேசியில் தொடர்புகொண்டு ரூ.35 கோடி பேரம் பேசியதாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து எம்எல்ஏ இளையராஜா, சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரின் பேரில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி, திருநாவுக்கரசு தினமும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
அந்த வகையில் கையெழுத்திட்ட பிறகு இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருநாவுக்கரசு, "மிகவும் சங்கடமாக இருக்கிறது. நான் ஜான் ஆரோக்கியசாமியிடம் எவ்வளவு முறை தொடர்புகொண்டு பேசியிருக்கிறேன், விஜய்யிடம் எவ்வளவு முறை தொடர்புக்கொண்டு பேசியிருக்கிறேன், ஆதவ் ஆர்ஜுனாவிடம் எவ்வளவு முறை தொடர்புகொண்டு பேசியிருக்கிறேன் என்று உண்மையைச் சொல்வதற்கான காலம் இருக்கிறது.
கட்டாயம் பேசுவேன். ஆறு மாதங்கள் விஜய்க்காக நான் வேலை பார்த்திருக்கிறேன். விஜய்யை முதலமைச்சர் என்று சொன்னதே நான்தான். நிறைய உண்மைகள் இருக்கின்றன. அதற்கு முன் யாரும் கற்பனைக் கதைகளை எழுத வேண்டாம்.

இந்த வழக்கு தள்ளுபடி ஆகும்போது நிச்சயம் பேசுவேன். எனக்கு ஏற்பட்ட அநீதிகளை மக்களிடம் கொண்டு செல்வேன். மன வலி இருக்கிறது. இரண்டு மாதம் காத்திருங்கள் பல உண்மைகளைச் சொல்கிறேன்" என்று ஆதங்கமாகப் பேசியிருக்கிறார்.
















