செய்திகள் :

மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8 வயது சிறுமி; கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி - போலீஸ் விசாரணை!

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி சென்று திரும்பி வந்த 8 வயது சிறுமி, அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமிக்கு பாலியல் கொடுமை

அப்பகுதியிலுள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு பயிலும் சிறுமி, பள்ளி சென்றுவிட்டு வீட்டுக்குத் தனியாக வந்து கொண்டிருந்தார். அப்போது அடையளம் தெரியாத நபர், சிறுமியின் கண், வாயைப் பொத்தி அருகிலுள்ள புதருக்குள் தூக்கிச் சென்றுள்ளார்.

அங்கு பாலியல் வன்கொடுமை செய்த அந்தக் கொடூரன், சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பித்துச் சென்றுள்ளான். பாதிக்கப்பட்ட சிறுமி அழுதபடியே வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.

பதறிய பெற்றோர், உடனே தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். பின்பு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

தேன்கனிக்கோட்டை மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இந்தக் கொடூரத்தை செய்த குற்றவளியை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நிலை சரியில்லாத மகள் தற்கொலை; துக்கம் தாளாமல் தந்தையும் தற்கொலை - பெரம்பலூர் சோகம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள காரை கிராமம், அண்ணா நகரை சேர்ந்தவர் முருகதாஸ் (53). இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், சோபனா (24) என்ற மகளும், முகேஷ் (22) மகனும் உள்ளனர். இந்நிலையில், சோபனா... மேலும் பார்க்க

வீடு புகுந்து பெண் அடித்து கொலை – கோவையில் மீண்டும் அதிர்ச்சி

கோவை பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (58). இவர் தனது மகனுடன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். மகன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சாந்தி வீட்டு வேலை செய்து ... மேலும் பார்க்க

திருச்சி: சமயபுரத்தில் தொடர் வாகனத் திருட்டு; 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்! - 4 பேர் கைது

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சமயபுரம் ஈச்சம்பட்டி பிரிவு சாலையில், சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர் முரளி தலைமையிலான போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந... மேலும் பார்க்க

கோவை பொறியியல் கல்லூரி மாணவர் கொலை வழக்கு: 5 மாணவர்கள் கைதான பின்னணி என்ன?

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன் (19) என்பவர், கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்து அமுதன் படித்து வந்... மேலும் பார்க்க

பெரம்பலூர்: எம்.எல்.எம் பாணியில் மோசடி; ஒரு கிராமமே பல லட்சங்களை ஏமாந்த அதிர்ச்சி; என்ன நடந்தது?

பெரம்பலூர்மாவட்டத்திலிருக்கிறது அன்னமங்கலம். இந்தக் கிராமத்தில் கியூநெட் பெயரில் அதிக லாபம் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரே கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மா... மேலும் பார்க்க

வேலூர்: இலவச முகாம்... இன்ஸ்டா விளம்பரம்... பெண்ணின் உயிரைப் பறித்ததா `அபூர்வ மூலிகைச் சாறு’?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள குடிபல்லி கிராமம் சென்னராயசுவாமி கோயில் வளாகத்தில் `ஆஞ்சநேயா ஜனசேவா அறக்கட்டளை’ சார்பாக மாதந்தோறும் 11-ம் தேதி கண் பாதிப்புகளுக்கு இலவசமாக மூலிகை சிகிச்சை முகா... மேலும் பார்க்க