செய்திகள் :

"Attendance போடணும்னு நினைக்கிற ஆள் நான் இல்ல" - படம் வெளியாகாமல் இருப்பது குறித்து அசோக் செல்வன்

post image

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள புதிய படத்துக்கு ‘அன்பில் அவன்’ என்று பெயரிடப்பட்டு டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் ராஜா, இந்தப் படத்தின் கதையை எழுதி இருக்கிறார்.

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட்.12) நடைபெற்றது.

‘அன்பில் அவன்’
‘அன்பில் அவன்’

இதில் கலந்துகொண்டு பேசிய அசோக் செல்வன், "என்னுடைய படம் வெளியாகி ரொம்ப நாள்களாகிவிட்டன. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டன.

'ப்ளூ ஸ்டார்'தான் கடைசியாக வந்தது. என்ன சார் படமே நடிக்கிறது இல்லையா? என்று முதலில் பார்க்கிறவர்கள் கேட்டார்கள். பிறகு நண்பர்கள் கேட்டார்கள்.

அதன் பிறகு வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் கேட்டார்கள். ஒரு கட்டத்தில் கண்ணாடிப் பார்த்து 'எப்போடா படம் வரும்?' என்று என்னை நானே கேட்க ஆரம்பித்துவிட்டேன். ஒவ்வொரு படமும் அதற்கான நேரத்தை எடுத்துக்கொள்ளும்.

அசோக் செல்வன்
அசோக் செல்வன்

ஏதோ ஒரு வெள்ளிக்கிழமை படம் வெளியாக வேண்டும் என்று Attendance போட வேண்டும் என்று நினைக்கின்ற ஆள் நான் இல்லை. ஒவ்வொரு படமும் புதிதாகப் பண்ண வேண்டும். புதிய முயற்சி எடுக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஆள் நான்" என்று பேசியிருக்கிறார்.

Vetri maaran: "அவர் என்னை நடிக்க வச்சது கொஞ்சம் வருத்தம்தான்" - வெற்றி மாறன்

'பியார் பிரேமா காதல்', 'ஸ்டார்' போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் இளன் தற்போது நடிகராகக் களமிறங்குகிறார். அவர் இயக்கி நடித்திருக்கும் 'பியார் பிரேமா கல்யாணம்' படம் வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியாகிறது.... மேலும் பார்க்க

Anupama : ``அந்த காதலால் மன ரீதியான கொடுமைகளுக்கு ஆளானேன்!" - மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்

மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இறுதியில் உங்கள் அமைதியைக் கண்டறிய, பயனற்ற முடிவுகளை நீங்கள் ... மேலும் பார்க்க

DC: "லோகேஷ் கனகராஜ் அண்ணனை ஏன் அப்படி ட்ரோல் செய்தார்கள் என்றே தெரியவில்லை!" - நடிகர் அவினாஷ் பேட்டி

லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கும் 'டி.சி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தில் தேவதாஸ் டீமில் ஒருவராக நடித்திருக்கும் நடிகர் அவினாஷை சந்தித்துப் பேட்டி கண்டோம். தொடர்ந்து அழுத்தமான கதாபாத... மேலும் பார்க்க

Wamiqa Gabbi: "எனக்கு ஒரு காலத்தில் தைரியம் கொடுத்த அந்த தேவதை!" - பகிரும் நடிகை ஜீவா சுப்ரமணியம்

லோகேஷ் கனகராஜ், வாமிகா கேபி நடித்திருக்கும் 'டிசி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பலரும் வாமிகா கேபி குறித்தும், அவருடைய உதவும் பண்பு பற்றியும் பகிர்ந்த... மேலும் பார்க்க

"நமக்கு அவார்டுலாம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்'னு நினைச்சுக்கிட்டேன், ஆனா..!"- விகடன் மேடையில் பிரதீப்

தமிழ் சினிமா கலைஞர்களைக் கொண்டாடும் 'ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025' விழா கடந்த மாதம் (ஜூலை.3) நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை 'டிராகன்', 'டியூட்' படங்களுக்காகப் பிரதீப் ரங்கநாதன் வென்... மேலும் பார்க்க

"டீஸர், ட்ரெய்லரைப் பார்த்தே முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்; ஆனால்..."- விமர்சனங்கள் குறித்து மாதவன்

திரைப்படங்கள் குறித்து ரசிகர்கள் தெரிவிக்கும் விமர்சனங்கள் பற்றி மாதவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'ஜிடிஎன்’ (GDN). ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வ... மேலும் பார்க்க