செய்திகள் :

'நீட் கலந்தாய்வில் தவறாகத் தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு' - உயர்நீதிமன்றம் உத்தரவு

post image

பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பிரஜித் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன்னிடம் செல்லுபடியாகும் ஓசிஐ (OCI) அட்டை உள்ளது. நீட் யூஜி 2026 தேர்வில் பங்கேற்று தகுதி பெற்றுள்ளேன். இதனால் அகில இந்திய இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளேன்.

ஆனால், கலந்தாய்வுக்கான ஆன்லைன் பதிவின்போது கவனக்குறைவாக ‘Foreign National (Other than OCI)’ என்ற பிரிவைத் தேர்வு செய்துவிட்டேன். அதற்கு பதிலாக ‘OCI’ பிரிவைத் தேர்வு செய்திருக்க வேண்டும்.

பின்னர் இந்தத் தவறைச் சரிசெய்ய முயன்றபோது, MCC இணையதளத்தில் OCI அட்டையைப் பதிவேற்றுவதற்கான வசதி இல்லை. எனவே, ‘Foreign National’ பிரிவை ‘OCI’ என மாற்றி, உரிய ஆவணங்களைப் பதிவேற்றும் வகையில் இணையதளத்தை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பேசும் போது, “மத்திய அரசு மற்றும் மருத்துவக் கலந்தாய்வுக்குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவர்கள் பதிவு செய்யும்போது தங்களது விவரங்களை அவர்களே பதிவு செய்வதால், மருத்துவக் கலந்தாய்வுக்குழு தன்னிச்சையாக ஒரு மாணவரின் பிரிவை மாற்ற முடியாது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

நீதிமன்றம் அனுமதித்தால், மாணவரின் பிரிவை மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். மேலும், OCI பிரிவைக் கோரும் மாணவர், MCC இணையதளத்தில் உரிய ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும், அவற்றை NRI ஆய்வுக்குழு பரிசீலித்த பின்னரே அடுத்தகட்ட கலந்தாய்வு நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்” என்று தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “இது ஒரு மாணவரின் கல்வி எதிர்காலம் தொடர்பான விவகாரம் என்பதைக் கருத்தில் கொண்டு, மனுதாரருக்கு உரிய வாய்ப்பு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, மருத்துவக் கலந்தாய்வுக்குழு இணையதளத்தைத் திறந்து, மனுதாரர் OCI பிரிவைக் கோருவதற்கான உரிய ஆவணங்களைப் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும். மாணவர் ஆவணங்களைப் பதிவேற்றிய பின்னர், அவற்றை NRI ஆய்வுக்குழு பரிசீலிக்க வேண்டும்.

உத்தரவு
உத்தரவு

எனவே, ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான இணையதள வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். MCC இணையதளத்தில் OCI அட்டையைப் பதிவேற்றுவதற்கான வசதி இல்லை. எனவே, ‘Foreign National’ பிரிவை ‘OCI’ என மாற்றி, உரிய ஆவணங்களைப் பதிவேற்றும் வகையில் இணையதளத்தை மீண்டும் திறக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

பழனி நிலமோசடி விவகாரம்: "அன்வர்தீன் மரணத்தை அரசியலாக்க வேண்டாம்"- நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வாதம்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபால், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் அறங்காவலர் அன்னபூரணி சிவக்குமார், திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி பிரதீப் ஆகியோர் மதுரை உயர்நீத... மேலும் பார்க்க

'தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா?' - வேதாந்தா நிறுவனத்தின் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணை

தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாகக் கூறி 2018-ம் ஆண்டு ஆலைக்கு எதிராக 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின் 100வது நாளான மே... மேலும் பார்க்க

நீட் போராட்டத்தில் போலீஸாரின் செயல்: `சட்டம் தன் கடமையைச் செய்யும்' - அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்

மாணவர்களுக்கு முழு உரிமை உள்ளது!அமைதியான வழியில் போராடநீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, காவல்துறையினர் மிதமிஞ்சிய பலத்தைப் பயன்படுத்தியதாக... மேலும் பார்க்க

கரப்பான் பூச்சி: ``என் பேச்சு தவறாகத் திரிக்கப்பட்டுவிட்டது" - தலைமை நீதிபதி சூர்யா காந்த் விளக்கம்

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் நடந்தது.போராட்டம் தீவிரமட... மேலும் பார்க்க

"எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்!" - டெல்லி தடியடி வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர் பேரணி நடத்தினர். இதனால் கடந்த சில நாள்களாக டெல்லியே ஸ்தம்பித்துப் ப... மேலும் பார்க்க

'கிராம மயானத்தை வேறு உள்ளாட்சியைச் சேர்ந்தவர்கள் உரிமை கோர முடியாது' - உயர்நீதிமன்றம் உத்தரவு

தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த அன்பழகன், தவராஜா, ரகுநாதன் ஆகியோர், மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.அதில். “எங்கள் கிராமத்தில் இறந்து போனவர்களின் உடல்களை சுக்குவாடன்... மேலும் பார்க்க