செய்திகள் :

மும்பையில் உணவு கட்டுப்பாட்டு விதிகளை மீறிய டோமினோஸ் பிட்சா... சீல் வைத்த அதிகாரிகள்

post image

மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் கமிஷனராக இருக்கும் துகாராம் முண்டே என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மாநிலம் முழுவதும் பால் கலப்படத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். தற்போது மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் சுத்தம் மற்றும் உணவு பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ரெய்டு நடத்தி வருகிறார். துகாராம் முண்டே தலைமையிலான உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள உணவகங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.

மும்பை ஐ.ஐ.டி உளாகத்தில் இருக்கும் இரண்டு கேண்டீன்களுக்கு கூட இத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மும்பை முழுவதும் உள்ள பிட்சா உணவகமான டோமினோஸ் பிட்சா கடைகளில் இப்போது அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். கடந்த 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட இந்த ரெய்டில் மாநிலத்தில் உள்ள நான்கு டோமினோஸ் பிட்சா விற்பனை நிலையங்களின் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் மூன்று மும்பையில் அமைந்துள்ளன.

ஜூபிலியன்ட் புட்வொர்க்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விற்பனை நிலையங்களில், பல உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் விலே பார்லே (மேற்கு), போரிவலி (மேற்கு) மற்றும் ஆர்-சிட்டி மால், காட்கோபர் (மேற்கு) ஆகிய மூன்று மும்பை விற்பனை நிலையங்களின் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும், சதாராவின் கராட்டில் உள்ள டோமினோஸ் மல்காபூர் விற்பனை நிலையத்தின் வணிக உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இது தவிர உணவுப் பாதுகாப்பு ஆணையம் சதாராவின் கராட்டில் உள்ள ஷப்பிரே புட்ஸ் விற்பனை நிலையத்தின் உரிமத்தையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது, இந்த நிறுவனம் இந்தியாவில் கே.எப்.சி., பிட்சா கட், போன்ற பிரபல உணவகங்களை நடத்தி வருகின்றன.

`ஈரான் தாக்கலாம்' - துருக்கியிலிருந்து உணவு லாரியில் பதுங்கி விமானநிலையம் சென்ற அதிபர் ட்ரம்ப்?

கடந்த பிப்ரவரியில் இருந்து ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வந்தன. கடந்த மாதம் இஸ்ரேல் நேரடி தாக்குதலில் இருந்து ஒதுங்கிக்கொண்ட நிலையில் அமெரிக்கா மட்டும் ஈரான் மீது தாக்கியது. ஈரா... மேலும் பார்க்க

தனியாக 4 பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய தந்தை; முதியோர் இல்லத்தில் இறந்தபோது பார்க்கவராத பிள்ளைகள்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரைச் சேர்ந்த கன்ஷ்யாம் என்பவர் தனது மனைவி இளம் வயதில் 4 குழந்தைகளை விட்டுவிட்டு இறந்துவிட்ட நிலையில் தனியாக வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தனது குழந்தைகளைப் போராடி வளர்... மேலும் பார்க்க

`இந்தியாவிலேயே அதிக விலை' டெல்லியில் ரூ.271 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய தொழிலதிபர் மானவ் சர்தானா

டெல்லி மற்றும் அதன் அருகில் உள்ள குருகிராம் பகுதியில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பங்களாக்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ... மேலும் பார்க்க

குடும்பத்துக்கு பயந்து ரூ.5 லட்சத்தை புதைத்து வைத்த விவசாயி - அரித்து சேதப்படுத்திய கரையான்கள்

பொதுவாக பண்டைய காலத்தில் தங்கம் போன்ற உலோகங்களை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க பூமிக்கு அடியில் புதைத்து வைப்பது வழக்கம். ஆனால் ராஜஸ்தான் மாநிலம் லோத்ரா மாவட்டத்தில், விவசாயி ஒருவர் தனது பணத்தை தன... மேலும் பார்க்க

`குழந்தை பெறுவதற்கு மட்டுமா பெண்கள்?' மறுமணம் தவிர்த்து சொந்தகாலில் நிற்க போராடும் இளம் கைம்பெண்கள்

மகாராஷ்டிராவின் விதர்பா மற்றும் மராத்வாடா பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கின்றனர். மேற்கு விதர்பாவில் 2001 மற்றும் 2024 க்கு இடையில் அகோலா, அமராவ... மேலும் பார்க்க

சேரும் முன்பே சேட்டை; "லேப்டாப்பைத் தரவில்லை என்றால் சட்ட நடவடிக்கை" - கடுப்பான CEO-வின் பதிவு வைரல்

ஜெய்ப்பூரில் உள்ள 'வன்ஷிவ் டெக்' நிறுவனத்தின் சி.இ.ஓ கவுரவ் கதேர்பால், சமீபத்தில் பகிர்ந்த எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.அவரது நிறுவனத்தில் 15 LPA சம்பளத்தில் தேர்வான ஒரு பெண், 3 மாத நோட்டீஸ... மேலும் பார்க்க