செய்திகள் :

வீடு புகுந்து பெண் அடித்து கொலை – கோவையில் மீண்டும் அதிர்ச்சி

post image

கோவை பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (58). இவர் தனது மகனுடன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். மகன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சாந்தி வீட்டு வேலை செய்து வந்தார். இதற்கிடையே நேற்று காலையில் வழக்கம்போல சாந்தியின் மகன் வேலைக்கு சென்றுவிட்டார். அதுபோல சாந்தியும் வேலைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்றிரவு வேலை முடிந்து சாந்தியின் மகன் வீட்டுக்கு வந்தார். வீட்டின் முன்பக்க கதவு சாத்தப்பட்ட நிலையில் இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்றபோது, சாந்தி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது தாயின் உடலை பார்த்தபோது முகம், தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த பந்தயசாலை காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்க்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.  சம்பவம் நடந்த வீட்டில் இருந்து  மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் மோப்பநாய் ஓடியதுடன், மீண்டும் அங்கு திரும்பியது. இதனால் சாந்தியை கொலை செய்தது யார் என்பது குறித்த துப்பு துலங்கவில்லை. இதையடுத்து சம்பவ இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் கைபற்றி ஆய்வு நடத்தி வருகின்றனர். இது குறித்து பந்தயசாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த 58 வயதான பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் அடுத்தடுத்து நடைபெறும் கிரைம் சம்பவங்கள் மக்களை வீதி அடைய செய்துள்ளது.

உடல்நிலை சரியில்லாத மகள் தற்கொலை; துக்கம் தாளாமல் தந்தையும் தற்கொலை - பெரம்பலூர் சோகம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள காரை கிராமம், அண்ணா நகரை சேர்ந்தவர் முருகதாஸ் (53). இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், சோபனா (24) என்ற மகளும், முகேஷ் (22) மகனும் உள்ளனர். இந்நிலையில், சோபனா... மேலும் பார்க்க

திருச்சி: சமயபுரத்தில் தொடர் வாகனத் திருட்டு; 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்! - 4 பேர் கைது

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சமயபுரம் ஈச்சம்பட்டி பிரிவு சாலையில், சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர் முரளி தலைமையிலான போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந... மேலும் பார்க்க

கோவை பொறியியல் கல்லூரி மாணவர் கொலை வழக்கு: 5 மாணவர்கள் கைதான பின்னணி என்ன?

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன் (19) என்பவர், கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்து அமுதன் படித்து வந்... மேலும் பார்க்க

பெரம்பலூர்: எம்.எல்.எம் பாணியில் மோசடி; ஒரு கிராமமே பல லட்சங்களை ஏமாந்த அதிர்ச்சி; என்ன நடந்தது?

பெரம்பலூர்மாவட்டத்திலிருக்கிறது அன்னமங்கலம். இந்தக் கிராமத்தில் கியூநெட் பெயரில் அதிக லாபம் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரே கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மா... மேலும் பார்க்க

வேலூர்: இலவச முகாம்... இன்ஸ்டா விளம்பரம்... பெண்ணின் உயிரைப் பறித்ததா `அபூர்வ மூலிகைச் சாறு’?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள குடிபல்லி கிராமம் சென்னராயசுவாமி கோயில் வளாகத்தில் `ஆஞ்சநேயா ஜனசேவா அறக்கட்டளை’ சார்பாக மாதந்தோறும் 11-ம் தேதி கண் பாதிப்புகளுக்கு இலவசமாக மூலிகை சிகிச்சை முகா... மேலும் பார்க்க

கருவிலுள்ள பாலினம் அறிய சட்டவிரோத ஸ்கேன் சென்டர் - பொறிவைத்து பிடித்த மருத்துவக்குழு! பகீர் சம்பவம்

"கர்ப்பத்திலிருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என கண்டறிய ரூ 23 ஆயிரம்தான்" என ஊர் ஊராக கேன்வாஸ் செய்து சட்டவிரோத ஸ்கேன் சென்டர் நடத்திய கும்பலை மருத்துவக் குழுவினர் பொறி வைத்து பிடித்துள்ள சம்பவம... மேலும் பார்க்க