செய்திகள் :

வாடகை வீடு பார்க்கச் சென்ற தம்பதி: பிட்புல் நாய் தாக்கியதில் தம்பதிக்கு தீவிர சிகிச்சை!

post image

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள குமான் நகர் பகுதியில் பிட்புல் (Pitbull) ரக நாய் தாக்கியதில் தம்பதியர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டியாலாவைச் சேர்ந்த அங்கித் சபர்வால் மற்றும் அவரது மனைவி ஷிபாலி ஆகியோர் வாடகைக்கு வீடு பார்ப்பதற்காக குமான் நகருக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்த வீட்டின் கதவு திறக்கப்பட்டபோது, உள்ளிருந்து பாய்ந்து வந்த பிட்புல் நாய் ஷிபாலியைத் தாக்கியது. நாயின் கடியால் அவரது கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மனைவியைக் காப்பாற்ற முயன்ற அங்கித்தின் கால்கள் மற்றும் முதுகிலும் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியில், நாய் தம்பதியைத் தாக்கும் போது, சுற்றுப்புற மக்கள் அதை விரட்ட தீவிர முயற்சி செய்வதைக் காண முடிகிறது. வீட்டிலிருந்து வந்த பெண் ஒருவர் குச்சியால் நாயைக் கட்டுப்படுத்த முயன்றும் அது பலனளிக்கவில்லை. பின்னர், கூடுதல் நபர்கள் குச்சிகளுடன் வந்து நாயை விலக்கி தம்பதியை மீட்டுள்ளனர். நாய் சுதந்திரமாகச் சுற்ற அனுமதிக்கப்பட்டதே இதற்குக் காரணம் எனக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையில் அங்கித் புகாரளித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாட்டியாலா மேயர் குந்தன் கோகியா, ``நகரத்தில் ஆக்ரோஷமான நாய் வகைகளைச் செல்லப் பிராணிகளாக வளர்க்கத் தடை விதிக்கப்படும். இது தொடர்பாக மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற பரிசீலிக்கப்படும்" என்றார். ஏற்கனவே ஆகஸ்ட் 9 அன்று குரு நானக் நகர் பகுதியில் ஒரு சிறுமியைத் தெருநாய் கடித்த நிலையில், அடுத்தடுத்து நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

``மாணவர்களுக்காக குரல் கொடுத்தேன்; இப்போது துன்புறுத்தப்படுகிறேன்" - வைரல் பெண் ரியா அஹிர்

நீட் தேர்வு உள்ளிட்ட அரசுத் தேர்வுகள் குளறுபடிகளைக் கண்டித்து இந்தியா முழுவதும் மாணவர்கள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, காவல்துறையின் வாகனத்தை வழி... மேலும் பார்க்க

`18 வயதில் கல்லூரி பேராசிரியர்'- 300 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளைஞர்! - யார் இவர்?

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது பொறியியல் பட்டதாரியான நாதன் தாமஸ், உலகின் மிக இளம் வயது ஆண் பேராசிரியர் என்ற பெருமையைப் பெற்று கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் ... மேலும் பார்க்க

``ராகுலை கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்க வையுங்க" - இர்பானிடம் கலகலப்பாகப் பேசிய பிரியாங்கா காந்தி

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, ஊடகங்களிடம் போராட்டத்தில் கலந்துகொண்ட பலரும் உரையாற்றினர். அதில் ஒருவர்தான் இர்பான். பள்ளி சென்று கல்வியறிவை பெறாத இவர், தன் அனுபவம், ஆர்... மேலும் பார்க்க