செய்திகள் :

கோவை அருகே ரயில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பு – யானைகள் தினத்தில் நடந்த சோகம்!

post image

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு – கேரளம் எல்லைப்பகுதியான வாளையார் வனப்பகுதி வழியாக கேரளத்திற்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியில் 4 யானைகள் கொண்ட ஒரு யானைக் கூட்டம் நேற்றிரவு 11.45 மணியளவில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளன. அப்போது அவ்வழியாக வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை என இரண்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

காட்டு யானைகள் உயிரிழப்பு
காட்டு யானைகள் உயிரிழப்பு

ரயில் என்ஜின் சக்கரங்களில் சிக்கி உடல்கள் நசுங்கிய நிலையில், காட்டு யானைகளின் உடல்கள் இருப்பது குறித்த தகவல் அறிந்த வாளையாறு  வனத்துறையினர் மற்றும் பாலக்காடு ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து ரயிலில் சிக்கி இருந்த  யானைகளின் உடல்களை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதன் காரணமாக  தமிழ்நாடு–கேரளம் இடையே இயக்கப்படும் ரயில் சேவை பாதிக்கப்பட்டன. அதிகாலை 4 மணிக்கு தாய் மற்றும் குட்டி யானையின் உடல்கள் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் மீட்கப்பட்டன. இதையடுத்து ரயில் என்ஜின் சரி செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டதை அடுத்து, ரயில் போக்குவரத்து சீரானது.

காட்டு யானைகள் உயிரிழப்பு
காட்டு யானைகள் உயிரிழப்பு

விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவிலேயே தமிழக எல்லை அமைந்துள்ளது. தமிழ்நாடு வனப்பகுதியில் ரயில் தண்டவாளங்களில் ரூ. 16 கோடி செலவில் ஏ.ஐ கேமரா மற்றும் ட்ரோன் கேமரா மூலம் யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதால், கடந்த சில ஆண்டுகளாக ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளை கேரள வனத்துறை மேற்கொள்ளாததால், ரயில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. உலக யானைகள் தினமான நேற்று தாய் மற்றும் குட்டி யானைகள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாலக்காடு வனத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புனித நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றம்... அமலைச் செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பழநி சண்முகநதி!

பழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதி மேலும் பார்க்க

ஒரு மனிதன், ஒரு லட்சம் மரங்கள் - விவேக் விதைத்த கனவை நனவாக்கும் விழுப்புரம் சசி ராஜா

ஒரு நாட்டின் உண்மையான செல்வம் என்பது பணமும் கட்டடங்களும் அல்ல; நம்மைச் சுற்றியுள்ள பசுமையும், நாம் சுவாசிக்கும் சுத்தமான காற்றும்தான். ஆனால், நவீன நாகரிகத்தின் வளர்ச்சி என்ற பெயரில் நாம் நாள்தோறும் வெ... மேலும் பார்க்க

Elephant Day: வாழிடமும், வழித்தடமும் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே இந்தப் பேருயிர்களைக் காக்க முடியும்!

சம காலத்தில் நிலத்தில் வாழ்ந்து வரும் மிகப்பெரிய உயிரினமான யானைகள் அழிந்து வரும் பட்டியலில் உள்ளன. சூழலியல் பாதுகாப்பில் அளப்பரிய பங்காற்றி வரும் யானை இனத்தைப் பாதுகாக்க உலக அளவில் பல்வேறு முயற்சிகளை ... மேலும் பார்க்க

`அகழியையே வழித்தடமாக மாற்றிக்கொண்ட வைரல் யானைகள், குழப்பத்தில் வனத்துறை!' என்ன நடக்கிறது கூடலூரில்?

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது நீலகிரி மாவட்டத்தின்‌ கூடலூர். அதேவேளையில் நாட்டில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளிலும் முக்கிய இடத்தில் இருக்கிறது.... மேலும் பார்க்க

பசிபிக் பெருங்கடலில் உருவான சூப்பர் எல் நினோ... நவம்பரில் வரலாறு காணாத அளவில் தீவிரம் ஆகலாம்!

இந்த ஆண்டு உலகம் முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியிருப்பது சூப்பர் எல் நினோ. பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 1.0°C-க்கு மேல் உயரும்போது எல்... மேலும் பார்க்க

மதுரை: தூங்கா நகரத்தின் துயரம்; துர்நாற்றம் வீசும் வைகை நதி | Photo Album

துர்நாற்றம் வீசும் வைகை நதிதுர்நாற்றம் வீசும் வைகை நதிதுர்நாற்றம் வீசும் வைகை நதிதுர்நாற்றம் வீசும் வைகை நதிதுர்நாற்றம் வீசும் வைகை நதிதுர்நாற்றம் வீசும் வைகை நதிதுர்நாற்றம் வீசும் வைகை நதிதுர்நாற்றம்... மேலும் பார்க்க