செய்திகள் :

Doctor Vikatan: பஸ் பயணத்தின்போது தலைச்சுற்றல், வாந்தியா... மீள்வது ரொம்ப சிம்பிள்!

post image

Doctor Vikatan: எப்போது பஸ், கார், வேன் போன்றவற்றில் பயணம் செய்தாலும் எனக்கு சில நிமிடங்களிலேயே தலைச்சுற்றலும் வாந்தியும் வருவதை உணர்கிறேன். இதனாலேயே பெரும்பாலும் பயணங்களைத் தவிர்க்கிறேன். தவிர்க்க முடியாத பட்சத்தில் இந்தப் பிரச்னைகள் எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகின்றன. இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்... இதிலிருந்து மீளவே முடியாதா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்

பொதுவாகப் பயணங்களில் ஏற்படும்போது, நமக்கு ஏற்படும் தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி போன்ற  பிரச்னைகளை உணர்வதை  'மோஷன் சிக்னெஸ்' (Motion Sickness) என்று சொல்வோம்.  இது உங்கள் கண்கள், உட்காதுகள் மற்றும் உடலிலிருந்து மூளைக்கு முரண்பாடான வெவ்வேறு சமிஞ்கைகள் அனுப்பப்படும்போது ஏற்படுகிறது. குமட்டல், குளிர்ந்த வியர்வை மற்றும் தலைச்சுற்றல் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்.

காதுக்குள் இருக்கும் 'வெஸ்டிபுலார் அமைப்பு' (Vestibular System), வாகனம் நகர்வதையும் அதில் ஏற்படும் அசைவுகளையும் துல்லியமாக உணர்ந்து மூளைக்குச் செய்தி அனுப்புகிறது. ஆனால், காரின் உள்ளே புத்தகம் வாசிக்கும்போதோ அல்லது செல்போனைப் பார்க்கும்போதோ, கண்கள் அசைவற்ற பொருள்களை மட்டுமே பார்ப்பதால் 'நான் நகராமல் ஒரே இடத்தில்தான் இருக்கிறேன்' என்ற செய்தியை மூளைக்கு அனுப்புகிறது.

இவ்வாறு காதும் கண்ணும் ஒரே நேரத்தில் நேர்எதிரான, முரண்பாடான சமிக்ஞைகளை (Mixed Signals) அனுப்பும்போது, மூளையால் உண்மையை உணர்ந்து பிரித்தெடுக்க முடியாமல் குழப்பமடைந்து தலைச்சுற்றல் மற்றும் குமட்டலை ஏற்படுத்துகிறது. கார்கள், பேருந்துகள், ரயில்கள், விமானங்கள், படகுகள் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) ஹெட்செட்கள் பயன்படுத்தும்போது இந்த பாதிப்பு ஏற்படலாம்.

பயணத்தின் போது இஞ்சி மிட்டாய், புதினா போன்றவற்றை மெல்லலாம்

2 முதல் 12 வயதுடைய குழந்தைகள், கர்ப்பிணிகள், ஒற்றைத்தலைவலி (Migraine) உள்ளவர்கள் இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பாதிப்பைத் தவிர்க்க சில விஷயங்களைப் பின்பற்றுவது உதவும். 

அதன்படி, பயணத்தின்போது முன்னோக்கிப் பார்த்து நேராக அமரவும். காரில் முன் இருக்கையிலோ அல்லது ரயில், விமானத்தில் பயணம் செய்யும் திசையை நோக்கி இருக்கும் ஜன்னல் ஓர இருக்கையிலோ அமரலாம். வாகனத்தின் அசைவுகளோடு வெளியே வேகமாக ஓடும் பொருள்களையோ, நேராக அடிவானத்தையோ (Horizon) அல்லது தொலைவில் உள்ள ஒரு பொருளையோ பார்க்கும்போது தலைச்சுற்றல் வராது.

பயணத்தின்போதோ அல்லது பயணத்திற்கு முன்போ புத்தகம் வாசிப்பது, போன், திரைகளைப் பார்ப்பது, அதிக உணவு உண்பது மற்றும் மது அருந்துவது ஆகியவற்றைத் தவிர்க்கவும். பயணத்தின் போது இஞ்சி மிட்டாய், புதினா  போன்றவற்றை மெல்லலாம். மணிக்கட்டில் அணிந்துகொள்ளும் அக்குபிரஷர்  பட்டைகளையும் (Acupressure wristbands) பயன்படுத்தலாம். பயணத்திற்கு முன் நன்றாகத் தூங்குபவர்களுக்கும் இந்த பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதிக பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பயணத்திற்கு முன்பு இதற்கான  மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

டாக்டர் அருணாசலம்:

32 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பொது மருத்துவரான டாக்டர் அருணாசலம், சென்னை கே.கே.நகரில் அருண் விஜயா மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார். 1994-ல் யு.எஸ்.எஸ்.ஆரின் மின்ஸ்க் அரசு மருத்துவக் கல்லூரியில் MD பட்டம் பெற்ற இவர், இந்திய மருத்துவக் கழகத்தின் (IMA) உறுப்பினராக இருக்கிறார். பொது மருத்துவம், வளரிளம் பருவத்தினருக்கான மருத்துவம் மற்றும் தடுப்பு மருத்துவம் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.

Doctor Vikatan: திருமணத்துக்கு முன்பு கருக்கலைப்பு, 8 வருடங்களாக குழந்தை இல்லை; இதுவே நிரந்தரமா?

Doctor Vikatan: எனக்கு இப்போது 30 வயதாகிறது. கல்லூரியில் படித்தபோது, காதல் வயப்பட்டு, கர்ப்பம் தரித்தேன். அந்தச் சமயத்தில் என் காதலர் வீட்டில் பெரிய பிரச்னை நடந்து, திருமணத்துக்கு சம்மதிக்காததால், பயத... மேலும் பார்க்க

Doctor Vikatan: உணவு உண்ணும்போது தொண்டையை அடைக்கும் உணர்வு... சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் வயது 40. எனக்கு கடந்த சில மாதங்களாக உணவு உண்ணும்போது தொண்டையில் உணவு அடைத்துக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தொண்டையிலிருந்து உணவு இறங்க சில நிமிடங்கள் ஆகின்றன. அதன் பிறகே இயல்... மேலும் பார்க்க

Doctor Vikatan: அக்குள் மற்றும் கழுத்துப் பகுதியில் கருமை... சர்க்கரைநோயின் அறிகுறியா?

Doctor Vikatan: எனக்குஅக்குள் மற்றும் கழுத்துப் பகுதியில் உள்ள சருமம் கறுப்பாக மாறியிருக்கிறது. இது சருமப் பிரச்னை என நினைத்துக்கொண்டிருந்தேன். இப்படி இருந்தால் சர்க்கரை நோய் இருக்கலாம் என்கிறார்கள் ச... மேலும் பார்க்க

ஈரோடு: ஒரே நாளில் 153 தாய்மார்கள் தாய்ப்பால் தானம் கொடுத்து சாதனை!

‘வரம் – தாய்ப்பால் வங்கி’, Rotary Club of Erode Nexus மற்றும் Lotus Hospital ஆகியவை இணைந்து இந்த மாபெரும் தாய்ப்பால் தான முகாமை ஏற்பாடு செய்து, Asia Book of Records சாதனையைப் படைத்துள்ளனர்.தாய்ப்பால் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: பல் மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கருவிகளால் ஹெச்ஐவி தொற்று பரவுமா?

Doctor Vikatan:பல் மருத்துவ சிகிச்சையின்போது ஒரே கருவி பலருக்கும் பயன்படுத்தப்படுவதால், ஹெச்ஐவி (HIV) அல்லது பிற நோய்த்தொற்றுகள் பரவ வாய்ப்பிருக்கிறதா.... இது குறித்து எனக்குத் தெளிவுபடுத்த முடியுமா?ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஒருவாரம் கவலை, ஒரு வாரம் மகிழ்ச்சி... மன அழுத்தமா, மனநல பாதிப்பா?

Doctor Vikatan: என் நெருங்கிய தோழிக்கு 28 வயதாகிறது. அவள் தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்கிறாள். அவளுக்கு எப்போதுமே சிந்தனைகள் அதிகம். ஒரு வாரம் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பாள். அடுத்த வாரமே சோகமாக... மேலும் பார்க்க