செய்திகள் :

பெரம்பலூர்: எம்.எல்.எம் பாணியில் மோசடி; ஒரு கிராமமே பல லட்சங்களை ஏமாந்த அதிர்ச்சி; என்ன நடந்தது?

post image

பெரம்பலூர் மாவட்டத்திலிருக்கிறது அன்னமங்கலம். இந்தக் கிராமத்தில் கியூநெட் பெயரில் அதிக லாபம் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரே கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் மேற்படி மோசடி குறித்து விசாரணை நடத்தினர். அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் அதிகமான மக்கள் ஆன்லைனில் வந்த விளம்பரத்தை நம்பி தனியார் நிறுவனத்தில் ரூ. 77.60 லட்சம் முதலீடு செய்து, ஏமாற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

அதனால், தொடர்ந்து பெரம்பலூர் குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் பன்னாட்டு நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, ஏஜென்டுகள் சிலர், பொதுமக்களிடம் எங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்டி தருவதாகக் கூறியுள்ளனர். இதை நம்பிய மக்களின் செல்போனில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் பணம் முதலீடு செய்யும்படி கூறினர்.

அதன்படி அன்னமங்கலத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் குறைந்தது ரூபாய் ஒரு லட்சம் முதல் ரூபாய் 20 லட்சம் வரை மொத்தம் ரூ.77.60 லட்சம் வரை தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அதாவது செயின் லிங்க் முறையில் ஒருவர் மற்றவரைச் சேர்த்துவிடும் எம்.எல்.எம் பாணியில் இந்த வலையில் சிக்கினார். அவ்வாறு ஆட்களைச் சேர்த்துவிடுபவர்களுக்குப் பல லட்சம் ரூபாய் மதிப்பிலானது எனக் கூறி, போலியான பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர், பணம் எதுவும் வழங்கவில்லை. ஆனால் அவ்வப்போது, நிறுவனத்தின் சார்பில் நடக்கும் கூட்டத்தில், மக்களைக் கலந்து கொள்ளும்படி கூறினர். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகள் ஆகியும், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஏஜென்டுகள், முதலீடு செய்த மக்களுக்கு லாபத்தொகையும் கொடுக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

அந்த நிறுவனம் தங்களை ஏமாற்றுவதை அறிந்த மக்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்த ஏஜென்டுகளிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை.

arrest

மேலும் பணம் செலுத்திய மக்களிடம் அலட்சியமாக நடந்து கொண்டதால் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் பெரம்பலூர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அதே கிராமத்தைச் சேர்ந்த ஏஜென்டுகளான வெங்கடேஷன் (வயது: 41), லட்சுமணன் (வயது: 39), அழகேசன் (வயது: 40) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், இந்த மோசடி வேளையில் தொடர்புடைய சுரேஷ் என்பவர் வெளிநாட்டில் வசித்து வருவதால், அவரை விசாரிக்க போலீஸார் முயற்சித்து வருவதாகச் சொல்கிறார்கள்.

எம்.எல்.எம் பாணியிலான மோசடி வலையில் சிக்கி ஒரே கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை பொறியியல் கல்லூரி மாணவர் கொலை வழக்கு: 5 மாணவர்கள் கைதான பின்னணி என்ன?

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன் (19) என்பவர், கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்து அமுதன் படித்து வந்... மேலும் பார்க்க

வேலூர்: இலவச முகாம்... இன்ஸ்டா விளம்பரம்... பெண்ணின் உயிரைப் பறித்ததா `அபூர்வ மூலிகைச் சாறு’?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள குடிபல்லி கிராமம் சென்னராயசுவாமி கோயில் வளாகத்தில் `ஆஞ்சநேயா ஜனசேவா அறக்கட்டளை’ சார்பாக மாதந்தோறும் 11-ம் தேதி கண் பாதிப்புகளுக்கு இலவசமாக மூலிகை சிகிச்சை முகா... மேலும் பார்க்க

கருவிலுள்ள பாலினம் அறிய சட்டவிரோத ஸ்கேன் சென்டர் - பொறிவைத்து பிடித்த மருத்துவக்குழு! பகீர் சம்பவம்

"கர்ப்பத்திலிருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என கண்டறிய ரூ 23 ஆயிரம்தான்" என ஊர் ஊராக கேன்வாஸ் செய்து சட்டவிரோத ஸ்கேன் சென்டர் நடத்திய கும்பலை மருத்துவக் குழுவினர் பொறி வைத்து பிடித்துள்ள சம்பவம... மேலும் பார்க்க

`மகள்களை என்னுடன் அழைத்துச் செல்கிறேன்' - மனைவியின் உறவு; மகள்களை கொன்று, தற்கொலைக்கு முயன்ற கணவர்

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கியவர், தன் இரண்டு மகள்களை கொலை செய்துவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. murderபெங்களூருவில் உள்ள பிலால் ந... மேலும் பார்க்க

கர்நாடகாவிலிருந்து டூவீலரில் குட்கா பொருள்கள் கடத்திவந்த நபர்; மடக்கிப் பிடித்த போலீஸ்!

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருள்களை அண்டை மாநிலங்களிலிருந்து கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.குட்கா, பான் மசாலா (ஃபைல் படம்)அ... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராமில் காதல், திருமணம்... மனைவி, மாமியார் என 2 பேரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கொடூரம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் உள்ள பச்சாபாளையத்தைச் சேர்ந்த 21 வயதான பூவரசி என்ற இளம்பெண் திண்டுக்கல்லைச் சேர்ந்த அக்ஷ்ய் என்ற 25 வயது இளைஞரை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்திருக்கிறார். கடந்த... மேலும் பார்க்க