செய்திகள் :

பனியன், டவுசருடன் குறைகளைக் கேட்ட ஆம் ஆத்மி MLA; "பதவியைப் பறிக்கணும்" - டெல்லி முதல்வர் கண்டனம்

post image

டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள கிராரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அனில் ஷா. சமீபத்தில் அனில் ஷா தனது தொகுதியில் மக்களிடம் குறைகளைக் கேட்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது.

அந்த வீடியோவில் ஒரு பனியன் மற்றும் ஷார்ட்ஸ் (கால்சட்டை) அணிந்து கொண்டு மடியில் ஒரு காவி துண்டைபோட்டுக்கொண்ட படி தனது கால்கள் இரண்டையும் தான் இருந்த இருக்கையில் எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்து இருந்தார். அப்படி அமர்ந்து கொண்டே பெண்கள் மற்றும் தொகுதி மக்கள் கொண்டு வந்த கோரிக்கை மனுக்களில் கையெழுத்து போட்டு கொடுத்துக்கொண்டிருந்தார்.

மாநில அரசு பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கும் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க பெண்கள் கொண்டு வரும் விண்ணப்பத்தில் அனில் ஷா கையொப்பமிடும்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மக்கள் வரிசையாக வந்து அவரிடம் விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கி சென்றனர்.

அனில் ஷா
அனில் ஷா

அரை குறை ஆடையுடன் நடந்து கொண்ட அனில் ஷாவின் இந்த நடவடிக்கையை மாநில முதல்வர் ரேகா குப்தா கண்டித்துள்ளார். எம்.எல்.ஏ-வின் இச்செயல் வெட்கக்கேடானது என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ரேகா அளித்த பேட்டியில், "உங்கள் நடத்தை வெட்கக்கேடானது. பெண்கள் தங்கள் ஆவணங்களில் கையெழுத்து வாங்க வரும்போது நீங்கள் ஒழுங்காக உடை அணிய வேண்டும். பெண்கள் முன்னிலையில் இது போன்று நடந்து கொண்டதற்காக அனில் ஷாவை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

எம்.எல்.ஏ.வின் இந்த வகையான அநாகரீகமான நடத்தையைச் சகித்துக்கொள்ள முடியாது. சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆபாசமான சைகைகளைச் செய்தார். இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்" என்று தெரிவித்தார்.

ஆனால் இக்குற்றச்சாட்டை எம்.எல்.ஏ. மறுத்துள்ளார். இது குறித்து அனில் ஷா அளித்த பேட்டியில், "நான் ஏதேனும் தவறான சைகைகள் செய்திருந்தால் அதற்கான வீடியோவை அவர் காட்ட வேண்டும். மக்கள் பிரச்னைகளுக்கு அவரிடம் பதில் இல்லை. அதனால் அவர் இந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்," என்று அனில் ஷா தெரிவித்தார்.

‘ஹார்முஸ் எங்கள் கட்டுப்பாட்டில்’ ட்ரம்ப் சொல்கிறார்; இருந்தும், அங்கே போக்குவரத்தில் சிக்கல்!

ஈரான் போரில் எத்தனை முறை மீண்டும் மீண்டும் தாக்குதல் தொடங்கினாலும், அதன் வழி வந்து முடிவதும், மையமாக மாறுவதும் ஹார்முஸ் நீர்ச்சந்தி தான். ஈரானும், அமெரிக்காவும் போர்களத்தில் மோதிக்கொள்வதை விட, ஹார்முஸ... மேலும் பார்க்க

`சட்டமன்றத்தில் அதிமுகவை விழுங்க நினைக்கும் தவெக?' - எடுபடுமா விஜய்யின் மாஸ்டர் ப்ளான்?

தவெகவுக்கு கைகொடுக்குமா?மாஸ்டர் ப்ளான்தேர்தலுக்கு முன்பாக பொதுக்கூட்ட மேடைகளிலும் பிரசாரங்களிலும் அதிமுகவை விமர்சிக்காமல், அதிமுகவின் அடையாளமாக திகழும் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசிக் க... மேலும் பார்க்க

ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசை கூட்டம்; பூட்டிக் கிடந்த கழிப்பறைகள்; அவதிக்குள்ளான பக்தர்கள்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கல்யாண திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினந்தோறும் ஶ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலாவுடன் முக்கிய நாட்களில் அமாவா... மேலும் பார்க்க

அமளி ஒருபக்கம், ஆனாலும் நிறைவேறும் மசோதாக்கள் - நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேறும் மசோதாக்கள்!

ஜூலை 20-ம் தேதி தொடங்கி, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளையோடு (ஆகஸ்ட் 13) முடிவடைகிறது. 25 நாள்கள் கொண்ட இந்தக் கூட்டத்தொடரில் விடுமுறைகள் போக, 19 நாள்கள் அவை கூடியது... கூடுகிறது. நீட் வ... மேலும் பார்க்க

கோவை அருகே கொசு மருந்து அடித்ததால் இருவர் உயிரிழந்ததாக புகார் – நடந்தது என்ன?

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சி ஏழாவது வார்டுக்கு உட்பட்ட உப்புத்தோட்டம் பகுதியில் அடுத்தடுத்து 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நேற்று காலை அப்பகுதியில் கொசு மருந்து அடிக்க... மேலும் பார்க்க