செய்திகள் :

அமளி ஒருபக்கம், ஆனாலும் நிறைவேறும் மசோதாக்கள் - நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேறும் மசோதாக்கள்!

post image

ஜூலை 20-ம் தேதி தொடங்கி, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளையோடு (ஆகஸ்ட் 13) முடிவடைகிறது.

25 நாள்கள் கொண்ட இந்தக் கூட்டத்தொடரில் விடுமுறைகள் போக, 19 நாள்கள் அவை கூடியது... கூடுகிறது.

நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டே இந்தக் கூட்டத்தொடரின் முக்கால்வாசி நாள்கள் கடந்துவிட்டது.

ஆனால், இவற்றைத் தாண்டியும் நாடாளுமன்றத்தில் மிக எளிதாக பல மசோதாக்களைத் தாக்கல் செய்து, நிறைவேற்றி உள்ளது பாஜக அரசு.

மோடி - மத்திய அரசு
மோடி - மத்திய அரசு

எதிர்க்கட்சிகள் அமளி செய்துவிட்டு வெளியே சென்றுவிடுகின்றன. இதனால், எந்த விவாதமுமின்றி எளிதாக மசோதாக்களைத் தாக்கல் செய்துவிடுகிறது மத்திய அரசு.

வந்தே மாதரம் திருத்த மசோதா.

இந்த மசோதா எந்தவொரு விவாதங்களும் இல்லாமல் மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, நேற்று குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்றுவிட்டது.

இப்படி இந்தக் கூட்டத்தொடரில் இதுவரை 19 மசோதாக்கள் எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதில் ஏழு மசோதாக்கள் வெறும் 36 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தரவுகள் கூறுகின்றன.

ஒரு மசோதாவிற்கு 5 நிமிடங்கள் என்று கணக்கு வைத்துக்கொள்வோம். இந்தியா முழுவதும் பின்பற்ற வேண்டிய, நடைமுறையாக மாற வேண்டிய மசோதாக்கள் நிறைவேற்றுவதற்கான நேரம் வெறும் 5 நிமிடங்கள் தானா... அதுவும் எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டிருப்பது சரிதானா என்கிற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

அனைத்து மசோதாக்களும் எதிர்க்கட்சிகள் இல்லாமலே நிறைவேற்றப்பட்டன என்று நினைக்க வேண்டாம். சில மசோதாக்களைத் தாக்கல் செய்யும் போது, எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்தன. ஆனால், அதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய, மத்திய அரசுக்கு நிலைமை மிகவும் தோதாக மாறிவிட்டது.

ராகுல் காந்தி - எதிர்க்கட்சித் தலைவர்
ராகுல் காந்தி - எதிர்க்கட்சித் தலைவர்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு மசோதாவும் நாட்டிற்கு மிக முக்கியமானது. இதை உணர்ந்து விவாதமில்லாமல் மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு காய்களை நகர்த்தக்கூடாது.

அமளி செய்வதும்... வெளிநடப்பு செய்வதும் மட்டும் எதிர்க்கட்சிகளின் வேலை அல்ல. எவ்வளவு இடையூறுகள் வந்தாலும், ஒவ்வொரு மசோதாவிற்கான வலுவான விவாதங்களை எதிர்க்கட்சி முன்வைத்தே ஆக வேண்டும்.

இதை உணர்ந்து இரு தரப்புமே செயல்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.!

கோவை அருகே கொசு மருந்து அடித்ததால் இருவர் உயிரிழந்ததாக புகார் – நடந்தது என்ன?

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சி ஏழாவது வார்டுக்கு உட்பட்ட உப்புத்தோட்டம் பகுதியில் அடுத்தடுத்து 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நேற்று காலை அப்பகுதியில் கொசு மருந்து அடிக்க... மேலும் பார்க்க

‘மதத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளலாமா? அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்’ – வானதி காட்டம்

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், “தமிழ் படித்தவர்களுக்கு 'அன்பின் மொழி, அமைதியின் மொழி, இரக்கத்தின் மொழி' தெரியாது என்ற அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ்நாடு சட்டமன்ற... மேலும் பார்க்க

``ரஷ்யாவில் விரைவில் தேர்தல்; புதின் போடும் போர் பிளான் இது" - என்ன சொல்கிறார் ஜெலன்ஸ்கி?

ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. அடுத்த மாதத்தில் ரஷ்யாவில் தேர்தல் வேறு வர இருக்கிறது. இந்தப் போரை வைத்து உள்நாட்டில் ரஷ்ய அதிபர் ட்ரம்ப் 'கேம்' ஆடுவதாக தனது எக்ஸ் பக்கத்தில் சாடி... மேலும் பார்க்க

கேரள மாநில பெயர் 'கேரளம்' என மாற்றும் மசோதா மக்களவையில் நிறைவேறியது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

கேரள மாநிலத்தின் பெயரை `கேரளம்' என மாற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடங்கி பல்வேறு நடவடிகைகள் பூர்த்தியடைந்த நிலையில் நேற்று மக்களவையிலும... மேலும் பார்க்க

TN Assembly: தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானத்தை கொண்டுவரும் முதல்வர் விஜய்! திமுக-வின் முடிவு என்ன? | Live Updates

தனித் தீர்மானமும், திமுகவின் நிலைப்பாடும்!தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானத்தைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் ... மேலும் பார்க்க