செய்திகள் :

அரசுப்பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி பலி: `இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது' - HM சஸ்பெண்டு

post image

ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், அறுந்து கிடந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் 6-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் யோகேஷ் துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார்.

பள்ளி வளாகத்திற்குள் மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பள்ளி நிர்வாகம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்ட காரணத்தினால் தான் யோகேஷ் உயிரிழந்ததாக அவரின் உறவினர்களும் உள்ளுர் மக்களும் நேற்று மாலை அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். முதல்கட்டமாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்‌ செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவர் யோகேஷ்

அலட்சியமாக செயல்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த நிலையில், உடலை வாங்க ஒப்புக் கொண்டனர். இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, " இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து முழுமையாக விசாரிக்க இரண்டு தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது" என்றார்.

ஈரோடு: அரசுப் பள்ளியில் அறுந்து கிடந்த மின்கம்பி; துடிதுடிக்க உயிரிழந்த 6- ம் வகுப்பு மாணவன்!

ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள குப்பிச்சிபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளியில் யோகேஷ் என்கிற 11 வயது மாணவர் 6 - ம் வகுப்பு பயின... மேலும் பார்க்க

கெத்தை மலைப்பாதையில் கவிழ்ந்த கார்- நிகழ்விடத்திலேயே பறிபோன 3 உயிர்கள்!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள குந்தா பகுதியைச் சேர்ந்தவர்கள் ராதிகா, ராஜ் கண்ணன், போஜன் ஆகியோர். கோவை மாவட்டம் மத்தம்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். உறவினரின் துக்க நிகழ்வு ஒன்றில் பங்கேற... மேலும் பார்க்க

குடிநீர்க் குழாய் சரிசெய்ய சென்றவர் புலிக்கு இரையான சோகம்; கை, கால்கள் தனித்தனியாக கிடந்த அதிர்ச்சி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள ஓவேலி லாரஸ்டன் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி பாலகிருஷ்ணன். வீட்டின் அருகில் உள்ள குடிநீர்க் குழாயில் தண்ணீர் வராத காரணத்தால் அதனைச் சீரமைப்பதற்காக தனியார் காபி தோ... மேலும் பார்க்க

மைதானத்தில் திடீரென தாக்கிய மின்னல்; சுருண்டு விழுந்த வீரர் மரணம்... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

தாய்லாந்தில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின்போது நடந்த துயர சம்பவம் உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்... மேலும் பார்க்க

தஞ்சை: வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது காஸ் வெடித்த விபத்து - 3 பேர் உயிரிழப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள சின்னஅம்மன்குடி, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையன் (51) விவசாயி. இவரது மனைவி செல்வி (41) இவர்களது மகள் அபிநயா 10ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டி... மேலும் பார்க்க

மழை வெள்ளத்தில் சென்ற கார்: மரத்தை பிடித்து உயிர் தப்பிய கணவர், இழுத்துச்செல்லப்பட்ட மனைவி, மகள்கள்

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. அஹில்யாநகர் மாவட்டத்தின் லோனி என்ற இடத்திற்கு அவினாஷ் என்பவர் தனது மனைவி ... மேலும் பார்க்க