செய்திகள் :

கெத்தை மலைப்பாதையில் கவிழ்ந்த கார்- நிகழ்விடத்திலேயே பறிபோன 3 உயிர்கள்!

post image

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள குந்தா பகுதியைச் சேர்ந்தவர்கள் ராதிகா, ராஜ் கண்ணன், போஜன் ஆகியோர். கோவை மாவட்டம் மத்தம்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். உறவினரின் துக்க நிகழ்வு ஒன்றில் பங்கேற்க நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள எடக்காடு கிராமத்திற்கு நேற்று காரில் மூவரும் சென்றிருக்கிறார்கள். துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு கெத்தை மலைப்பாதை வழியாக மீண்டும் மத்தம்பாளையம் நோக்கி திரும்பியிருக்கிறார்கள். இவர்கள் பயணித்த கார் முள்ளி வனத்துறை சோதனைச்சாவடி அருகில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிந்திருக்கிறது.

பள்ளத்தில் கவிழ்ந்த கார்

பல அடி பள்ளத்தில் கவிழ்ந்தால் காரில் இருந்த மூவருக்கும் படுகாயங்கள் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த கோரமான விபத்தைக் கண்ட சக வாகன ஓட்டுநர்கள், வனத்துறையினர், காவல்துறையினர் என களத்தில் இறங்கி மூன்று பேரின் உடல்களையும் மீட்டு கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 3 பேரும் கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குடிநீர்க் குழாய் சரிசெய்ய சென்றவர் புலிக்கு இரையான சோகம்; கை, கால்கள் தனித்தனியாக கிடந்த அதிர்ச்சி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள ஓவேலி லாரஸ்டன் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி பாலகிருஷ்ணன். வீட்டின் அருகில் உள்ள குடிநீர்க் குழாயில் தண்ணீர் வராத காரணத்தால் அதனைச் சீரமைப்பதற்காக தனியார் காபி தோ... மேலும் பார்க்க

மைதானத்தில் திடீரென தாக்கிய மின்னல்; சுருண்டு விழுந்த வீரர் மரணம்... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

தாய்லாந்தில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின்போது நடந்த துயர சம்பவம் உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்... மேலும் பார்க்க

தஞ்சை: வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது காஸ் வெடித்த விபத்து - 3 பேர் உயிரிழப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள சின்னஅம்மன்குடி, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையன் (51) விவசாயி. இவரது மனைவி செல்வி (41) இவர்களது மகள் அபிநயா 10ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டி... மேலும் பார்க்க

மழை வெள்ளத்தில் சென்ற கார்: மரத்தை பிடித்து உயிர் தப்பிய கணவர், இழுத்துச்செல்லப்பட்ட மனைவி, மகள்கள்

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. அஹில்யாநகர் மாவட்டத்தின் லோனி என்ற இடத்திற்கு அவினாஷ் என்பவர் தனது மனைவி ... மேலும் பார்க்க

மும்பை: 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; 9 பேர் உள்ளே சிக்கி உயிரிழந்த சோகம்!

மும்பை அருகில் உள்ள பீவாண்டி என்ற இடத்தில் 4 மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. ஏற்கெனவே பீவாண்டி மாநகராட்சியால் ஆபாயகரமான கட்டடம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் ... மேலும் பார்க்க

நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து; சிலிண்டர் வெடித்ததில் தீயை அணைத்தவர்கள் உட்பட 10 பேர் காயம்!

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள சின்னஅம்மன்குடி, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையன் (51) விவசாயி. இவர் மனைவி செல்வி (41), இவர்களது மகள் அபிநயா 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள... மேலும் பார்க்க