செய்திகள் :

வருமான வரி... மூலதன ஆதாய வரி... இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? தெளிவான விளக்கம்!

post image

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வரும் முதலீட்டாளர்கள் அனைவரும் குழம்புவது இந்த ஒரு விஷயத்தில்தான். ''நான் ஏற்கெனவே வருமான வரி கட்டிக்கொண்டு இருக்கிறேன். அப்படி இருக்கும்போது, மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கிடைக்கும் லாபத்துக்கும் தனியாக வரி கட்ட வேண்டுமா?'' எனப் பல முதலீட்டாளர்கள் கேட்பார்கள்.

இன்னும் சிலர், ''நான் என் மனைவியின் பெயரில்தான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் போகிறேன். அவர் குடும்பத் தலைவிதான். அவர் பெயரில் எந்த வருமானமும் இல்லை என்பதால், ஏன் வரி கட்ட வேண்டும்?'' என்று கேட்பார்கள்.

வருமான வரி (Income Tax) என்பது வேறு, மூலதன ஆதாய வரி (Capital Gain Tax) என்பது வேறு என்பது தெரியாததால்தான், இந்தக் கேள்வி பல முதலீட்டாளர்களுக்கும் வருகிறது.

அண்மையில் ஒரு முதலீட்டாளரிடம் பேசினேன். கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய்க்கு மேல் அவர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருக்கிறார். ஆனால், அவருக்கும் வருமான வரி என்பது வேறு, மூலதன ஆதாய வரி என்பது வேறு என்கிற வித்தியாசம் தெரியவில்லை. எனவே, பலருக்கும் இருக்கும் இந்தச் சந்தேகத்தை இந்தக் கட்டுரை மூலம் எளிதாகத் தீர்த்துவிடுவோம்.

Income Tax Filing | புரொஃபெஷனல் டாக்ஸ்
Income Tax Filing | புரொஃபெஷனல் டாக்ஸ்

வருமானம் என்பது, ஒருவர் சம்பளமாகவோ அல்லது வியாபாரம் செய்து லாபம் சம்பாதிப்பதாகும். இந்த வருமானத்துக்கு உரிய வரியை ஒவ்வொருவரும் கட்டித்தான் ஆகவேண்டும்.

உதாரணமாக, ஒருவர் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை சம்பாதிக்கிறார். அவர் புதிய வரிச் சட்டத்தின்படி வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்போது எந்த வரியும் கட்டவேண்டியதில்லை. (புதிய வரிச் சட்டத்தின்படி ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு எந்த வரியும் கட்ட வேண்டியதில்லை.)

ஆனால், பழைய வரிச் சட்டத்தின்படி உங்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்தால், வருமான வரம்புக்கேற்ப வரி கட்ட வேண்டும். பழைய வரிச் சட்டத்தின்படி, முதல் ரூ.2.50 லட்சத்துக்கு எந்த வரியும் இல்லை. ரூ.2.50 லட்சம் - ரூ.5,00,000 வரையிலான வருமானத்துக்கு 5%, ரூ.5 லட்சம் - ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20%, ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30% வரி கட்ட வேண்டும்.

இந்த வருமானத்துக்கான வரியை யாரும் கட்டாமல் இருக்க முடியாது. காரணம், இந்த வருமானத்துக்கான வரியைப் பெரும்பாலும் வேலை பார்க்கும் அலுவலகமே சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து வருமான வரி அலுவலகத்துக்குத் தந்துவிடும்.

INCOME TAX | வருமான வரி தாக்கல்
INCOME TAX | வருமான வரி தாக்கல்

ஆனால், மூலதன ஆதாய வரி என்பது ஒருவர் செய்யும் முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்துக்குக் கட்டவேண்டிய வரி ஆகும். இதற்கும் வேலை அல்லது பிசினஸ் செய்து சம்பாதிக்கும் பணத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

முதலீடு எந்த வகையானதாக இருந்தாலும் அதிலிருந்து கிடைக்கும் லாபத்துக்கு வரி கட்டவேண்டும். உதாரணமாக, ஒருவர் ஒரு மனை அல்லது வீடு வாங்குகிறார். சில ஆண்டுகளுக்குப்பிறகு அந்த மனையை அல்லது வீட்டை விற்கிறார். அப்போது கிடைக்கும் லாபத்துக்கு வரி கட்ட வேண்டும்.

இதே போல, தங்க நகைகளை விற்றால் கிடைக்கும் லாபத்துக்கும் வரி கட்ட வேண்டும். பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி விற்கும்போது லாபம் கிடைத்தாலும், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து லாபம் கிடைத்தாலும், கிடைக்கும் லாபத்துக்கேற்ப வரி கட்டியாக வேண்டும்.

Share Market
Share Market

பங்குச் சந்தையில் நேரடியாகவோ அல்லது பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூதலீடு செய்து கிடைக்கும் லாபத்துக்கு இரு விதமாக வரி விதிக்கப்படுகிறது. ஒன்று, குறுகிய காலம்; இரண்டாவது, நீண்ட காலம். குறுகிய காலம் என்பது ஓராண்டு ஆகும்.

உதாரணமாக, ஒருவர் பங்குச் சந்தையில் நேரடியாகவோ அல்லது பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலோ ரூ.10 லட்சம் முதலீடு செய்கிறார். ஒரே ஆண்டில் அது ரூ.12 லட்சமாக உயர்கிறது. ஓராண்டுக்கும் முதலீட்டைத் திரும்ப எடுத்தால், லாபமாகக் கிடைக்கும் ரூ.2 லட்சத்துக்கு 20% அதாவது, ரூ.40 ஆயிரம் மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும்.

ஆனால், ஓராண்டுக்குப் பிறகான நீண்ட காலத்தில் முதலீட்டைத் திரும்ப எடுத்தால், கிடைக்கும் லாபத்துக்கு 12.5% வரி கட்டினால் போதும். அதாவது, ரூ.25 ஆயிரம் மட்டும் மூலதன ஆதாய வரியாகக் கட்டினால் போதும்.

ஆனால், ஓராண்டுக்கு மேற்பட்ட காலத்தில் லாபத்தைத் திரும்ப எடுக்கும்போது, ஒரு ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை லாபமாகக் கிடைக்கும் தொகைக்கு மூலதன ஆதாய வரிச் சலுகை உண்டு என்பதால், ரூ.2 லட்சத்துக்கு மூலதன ஆதாய வரி கட்டுவதற்கு பதிலாக, ரூ.1.25 லட்சம் வரிச் சலுகை போக, வெறும் ரூ.75 ஆயிரத்துக்கு 12.5% மூலதன ஆதாய வரி அதாவது, வெறும் ரூ.9,375 வரி கட்டினால் போதும்.

ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.25 லட்சம் மூலதன ஆதாய வரிச் சலுகை உண்டு என்பது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்!

Mutual fund rules

ஆக, வீடு, தங்கம், பங்குச் சந்தையில் கிடைக்கும் லாபத்துக்கு விதிக்கப்படும் மூலதன ஆதாய வரி விகிதம் அளவுக்குத்தான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கும் விதிக்கப்படுகிறது. எனவே, மியூச்சுவல் ஃபண்டில் அதிகமான மூலதன ஆதாய வரி விதிக்கப்படுவதாகச் சொல்லவே முடியாது.

வருமான வரி என்பது வேறு, மூலதன ஆதாய வரி என்பது வேறு என்பதை இந்தத் தெளிவான விளக்கத்தைப் படித்த பிறகாவது குழப்பம் தீர்ந்ததா?

முதலீட்டு ஆலோசனை உங்களுக்கு வேண்டுமா?

வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...

வெளிநாட்டில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

இந்தியாவில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

Labham Youtube Channel: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!

60 வயசுல உங்களை யார் காப்பாத்துவா? பென்ஷன் பிளானிங் செய்யாதவங்க படிங்க..!

ரிட்டையர் ஆக கொஞ்ச வருடங்களுக்கு முன் எல்லாரும் கேட்கிற ஒரு கேள்வி: "60 வயசுக்கு அப்புறம் என்ன பிளான்?"இப்போ சம்பளம் வருது, ஈ.எம்.ஐ (EMI) ஓடுது, வாழ்க்கையும் ஜாலியா போகுது. ஆனா 60 வயசுல ஆபீஸ்ல இருந்து... மேலும் பார்க்க

50 வயதான NRI-களா? Lumpsum பணத்திற்கு Safety + Growth தரும் ரகசிய 60:40 பார்முலா!

வெளிநாட்டில் பல ஆண்டுகள் உழைத்து, 50 வயதை எட்டியுள்ள என்.ஆர்.ஐ (NRI) நண்பர்களுக்கு வணக்கம்!50 வயதில் எழும் மிகப்பெரிய கேள்வி: "சேர்த்து வைத்துள்ள பணத்தை (Lumpsum Amount) எங்கே முதலீடு செய்வது?"மொத்தப்... மேலும் பார்க்க

தின SIP, வார SIP, மாத SIP... எப்படி முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

மியூச்சுவல் ஃபண்டில் SIP மூலம் முதலீடு செய்கிறவர்கள் இன்றைக்கு ஏராளம் பேர். இந்தியா முழுக்க சுமார் 6 கோடி பேர் மாதந்தோறும் ரூ.32,000 கோடியை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறார்கள். குறைந்தபட்சம் ... மேலும் பார்க்க

'2026-ல் பணக்காரர் ஆகும் ரூட் இதுதான்!' - ஏஐ யுகத்தில் செல்வத்தைப் பெருக்குவது எப்படி?

ஒரு காலத்தில் நிலம் வைத்திருப்பவர்தான் ஊரிலேயே பெரிய பணக்காரர். அப்புறம் கடை/ஃபேக்டரி வச்சிருக்கறவங்க கைக்கு அதிகாரம் மாறுச்சு. நம்ம அப்பா காலத்தில் 'நல்லா படி, அரசு வேலைக்குப் போ... வாழ்க்கை செட்டில்... மேலும் பார்க்க

குறைந்தது வெளிநாட்டு முதலீடு வெளியேற்றம் - இந்தியப் பங்குச் சந்தை இறக்கம் இனி குறைந்து ஏற்றம் வருமா?

இந்தியப் பங்குச் சந்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்ற, இறக்கமாகவே இருந்து வருகிறது. இந்தியப் பங்குச் சந்தையின் முக்கியமான குறியீடான நிஃப்டி 26500 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமானது. ஆனால், பிற்பாடு அமெரிக்க... மேலும் பார்க்க

கிரெடிட் கார்டு, LPG, ITR, தட்கல் - ஆகஸ்ட் மாதத்தில் மாறும் முக்கிய நிதி விதிகள்!

நாளை புதிய மாதம் தொடங்குகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30-க்குள் நடக்க உள்ள நீங்கள் என்னென்ன நிதி நடப்புகள், நிதி மாற்றங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதைப் பார்க்கலாம். வருமான வரிக் கணக்குத் ... மேலும் பார்க்க