செய்திகள் :

"‘நாட்டாமை குடும்பம்’னு பச்சை குத்திக்கோங்க" - சரத்குமார் சொன்ன 'கிரீன் கார்டு' ஐடியா

post image

நடிகர் மற்றும் பாஜக நிர்வாகி சரத்குமார் தன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் சரத்குமாரின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், "எனது சிந்தனையில் திடீரென தோன்றியதுதான் பச்சைக் குத்தும் எண்ணம்.

'நாட்டாமை குடும்பம்' எனப் பச்சை குத்தினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.

இது நமது குடும்ப அடையாளமாக இருக்கும்.

நாட்டாமை குடும்பம் - பச்சை
நாட்டாமை குடும்பம் - பச்சை

என்னைச் சந்திக்க வருவோருக்கு கிரீன் கார்டு போல, கையில் பச்சைக் குத்தி இருந்தால் எளிதில் நேரடியாகவே சந்திக்கலாம்.

விரும்புபவர்கள் பச்சைக் குத்திக் கொள்ளலாம். வற்புறத்தவில்லை" என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலர், தங்களுடைய கையில் 'நாட்டாமை குடும்பம்' என்று பச்சைக் குத்தி கொண்டனர்.

சரத்குமாரின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்று 'நாட்டாமை'. இதைக் குறிக்கும் வகையிலேயே இந்தப் பெயரைத் தேர்வு செய்துள்ளார் சரத்குமார்.

ஆதரவாளர்களிடம் சரத்குமார் இப்படியொரு கோரிக்கையை வைத்துள்ளது சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.

"இங்கே ஜாதி சான்றிதழ் வாங்குவது எளிது; ஆனால்..." - சொல்கிறார் நடிகர் பார்த்திபன்

வித்தியாசத்தின் மறுபெயரான நடிகர் - இயக்குநர் பார்த்திபன், அண்மையில் 'சாதி, மதம் அற்றவர்' என்ற சான்றிதழ் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இதன் பின்னணியில் பல்வேறு சம்பவங்கள் வரிசைகட்டுகின... மேலும் பார்க்க

Toxic: "பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன்; ஆனால்..." - யஷ்ஷைப் புகழ்ந்து பேசிய நயன்தாரா

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க

"அன்னைக்கு அழுதிட்டு இருந்தேன்; இன்னைக்கு சூர்யா சாரோட..." - நினைவுகளைப் பகிர்ந்த மமிதா பைஜூ

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது. 'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கி... மேலும் பார்க்க

Toxic: "அந்தப் பிரச்னையை நீங்கள் கையாண்ட விதம் எனக்கு பிடித்திருந்தது" - நயன்தாரா குறித்து யஷ்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க

Photographer Review: காட்டுக்குள் சாகசப் பயணம் மேற்கொள்ளும் போட்டோகிராபர்! சாதிக்கிறாரா?!

புகைப்படக்கலை மீது ஆர்வம் கொண்ட வீராவை (அஷ்ரஃப்), அவருடைய தந்தை (ஆடுகளம் நரேன்) தனது நிறுவனத்தின் முதன்மைப் பொறுப்பில் அமர வைக்க முயல்கிறார். ஆனால், வீராவின் கனவு வேறொன்றின் பக்கம் இருக்கிறது. கொடைக்க... மேலும் பார்க்க

Toxic: புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாதது ஏன்? - நயன்தாரா ஓப்பன் டாக்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க