செய்திகள் :

"அன்னைக்கு அழுதிட்டு இருந்தேன்; இன்னைக்கு சூர்யா சாரோட..." - நினைவுகளைப் பகிர்ந்த மமிதா பைஜூ

post image

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.

'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

'விஸ்வநாத் & சன்ஸ்'
'விஸ்வநாத் & சன்ஸ்'

அந்த வகையில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மமிதா பைஜூ, "2015-ல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சூர்யா சார் கேரளாவில் உள்ள லூலு மாலிற்கு வந்தார்.

அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் அண்ணன் 11-ம் வகுப்பு படித்துகொண்டிருந்தார். என் அண்ணனும், அவரது நண்பர்களும் லூலு மாலிற்குச் சென்று சூர்யா சாரைப் பார்த்தார்கள். என்னால் செல்ல முடியவில்லை.

நான் அழுதுகொண்டிருந்தேன். நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து அங்கு செல்வது அவ்வளவு சுலபம் இல்லை. அதனால் அம்மா, அப்பா என்னை விடவில்லை. என் அண்ணன் புகைப்படமெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்.

மமிதா பைஜூ
மமிதா பைஜூ

எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள லூலு மாலில் சூர்யா சாருடன்... அவருடைய படத்தில் நடித்து இங்கு வந்து நிற்கிறேன். இது எனக்கு ஒரு மிகப்பெரிய பாக்கியம்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Toxic: "அந்தப் பிரச்னையை நீங்கள் கையாண்ட விதம் எனக்கு பிடித்திருந்தது" - நயன்தாரா குறித்து யஷ்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க

Photographer Review: காட்டுக்குள் சாகசப் பயணம் மேற்கொள்ளும் போட்டோகிராபர்! சாதிக்கிறாரா?!

புகைப்படக்கலை மீது ஆர்வம் கொண்ட வீராவை (அஷ்ரஃப்), அவருடைய தந்தை (ஆடுகளம் நரேன்) தனது நிறுவனத்தின் முதன்மைப் பொறுப்பில் அமர வைக்க முயல்கிறார். ஆனால், வீராவின் கனவு வேறொன்றின் பக்கம் இருக்கிறது. கொடைக்க... மேலும் பார்க்க

Toxic: புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாதது ஏன்? - நயன்தாரா ஓப்பன் டாக்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க

Hip Hop Tamizha: கட்டுக்கடங்காத கூட்டம்; நிரப்பிய ஃபீனிக்ஸ் மால்; ரத்தான நிகழ்ச்சி; என்ன நடந்தது?

சென்னை ஃபீனிக்ஸ் மாலில் நேற்று மாலை 'மீசைய முறுக்கு 2' பட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சியை நேரில் காண கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.ஹிப் ஹாப் தமிழ... மேலும் பார்க்க

Jason Sanjay: "அதை என் அப்பாவிடம் சொன்னபோது, அவர் யோசிக்கக்கூட இல்லை" - ஜேசன் சஞ்சய்

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் புரோமோஷனு... மேலும் பார்க்க

மகுடம்: ``ஒரு வாரம் அந்த அனுபவத்திலிருந்து வெளியே வர முடியவில்லை" - நடிகை அஞ்சலி

நடிகர் விஷால் இயக்கி, நடித்திருக்கும் 'மகுடம்' திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை... மேலும் பார்க்க