செய்திகள் :

தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்கு ஏன் ஆபத்து? - மாணிக்கம் தாகூரின் 5 விளக்கங்கள்|MODI-LIMITATION

post image

தொகுதி மறுவரையறை பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. கூடவே அதற்கான எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்துள்ளன.

இந்த வேளையில் தொகுதி மறுவரையறையை 'மோடி-லிமிட்டேஷன்' என்றும், அது ஏன் கூடாது என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்...

''‘மோடி-லிமிட்டேஷன்’ (MODI-LIMITATION) என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கின்ற ஒரு மிகப்பெரிய அரசியல் சதி.

தொகுதி மறுவரையறை
தொகுதி மறுவரையறை

கடந்த ஏப்ரல் 17 அன்று 'இந்தியா' கூட்டணியால் மக்களவையில் தோற்கடிக்கப்பட்ட இந்த ஆபத்தான மசோதாவை, 50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி மீண்டும் கொண்டுவர ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது.

ஏன் இந்த மசோதாவை நாம் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்?

- மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாட்டிற்குத் தண்டனையும், கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்குப் பரிசும் அளிப்பது அப்பட்டமான அநீதி!

- 50% உயர்வு மூலம் உத்தரப் பிரதேசம் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழ்நாடு 39-ல் இருந்து 59 ஆகவும் உயரும். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையேயான தொகுதி இடைவெளி 41-ல் இருந்து 61 ஆக விரிவடையும்!

- எண்களின் பலமே முடிவுகளைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தில், இந்த இடைவெளி அதிகரிப்பு தென்னக மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகப் பறித்துவிடும்.

- கடந்த காலத்தில் அன்னை இந்திரா காந்தி அவர்களும், 2001-ல் வாஜ்பாய் அவர்களும் கொண்டு வந்த திருத்தங்கள் மூலமாகவே மக்களவை எண்ணிக்கை முடக்கப்பட்டது. அந்தப் பாதுகாப்பைத் தகர்க்கவே பாஜக துடிக்கிறது.

- சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கும் முன்பே இதைச் செய்தால், பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளைச் சரியாகத் தீர்மானிக்க முடியாது.

இன்று (ஆகஸ்ட் 9 - வெள்ளையனே வெளியேறு நாள்) நடைபெறவுள்ள 'QUIT UNFAIR DELIMITATION MARCH' பேரணி என்பது செயல்முறைகளை விளக்குவதற்கான நிகழ்வு அல்ல; அது தமிழ்நாட்டின் அரசியல் இறையாண்மை, ஜனநாயக உரிமைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறையின் அதிகாரப் பாதுகாப்பிற்காக நாம் நடத்தும் உரிமைப் போராட்டம்!

நமது மாநிலத்தின் சுயமரியாதையையும் அரசியல் உரிமைகளையும் எவராலும் பறிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்லவே இந்தப் நடைப்பயணம்.

மேலும், இந்த அநீதியான தொகுதி மறுவரையறைக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 'Unfair Delimitation' பாடலை உருவாக்கிய தம்பி சலாம் மாஸ் அவர்களுக்கும், அவரது தொடர் முயற்சிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!

இது நம் அனைவரின் உரிமைக்கானப் போராட்டம்! தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைக்கும் இந்த மசோதாவை வீழ்த்த வாருங்கள்!''

பழனி நில மோசடி வழக்கு: "அன்வர்தீன் சிறைக்குள் உயிரிழந்தது ஏன்?" - தவாக வேல்முருகன் கேள்வி

பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. குற்றவாளிகளைக் காப்பாற்ற நினைப்பது யார்?இந்நிலையில் ... மேலும் பார்க்க

"திமுக அரசுக்குப் போட்டியாக தவெக அரசும் துரோகம் செய்திருக்கிறது" - மின் இணைப்பு குறித்து அன்புமணி

தட்கல் திட்டத்தில் வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 60 ஆயிரம் விவசாயிகளுக்கு 8 மாதமாக இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா? என்று கேள்வி கேட்டு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்... மேலும் பார்க்க

"தொகுதி மறுவரையறையில் திமுகவை பாஜக ஏமாற்றுகிறது" - கார்த்தி சிதம்பரம் சொல்லும் விளக்கம் என்ன?

தொகுதி மறுவரையறையில் திமுகவை பாஜக தவறாக வழிநடத்துவதாக மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கார்த்தி சிதம்பரம் பதிவிட்டிருப்பதாவது..."அனைத்து ... மேலும் பார்க்க

சி.விஜயபாஸ்கருக்கு வெறும் மாவட்டப் பதவி மட்டும்தானா? ஆதங்கப்படும் ஆதரவாளர்கள்

அ.தி.மு.க-வில் ஒரு காலத்தில் ‘பவர்’ஃபுல் அமைச்சராக வலம் வந்தவர் சி.விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் மட்டுமின்றி, தமிழக அளவிலும் தனக்கெனத் தனிச் செல்வாக்கை வைத்திருந்தவர். சமீபத்தில் அ.தி.மு.... மேலும் பார்க்க

அதிமுக டு தவெக; விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு முக்கிய பதவி வழங்கிய விஜய்

சில மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்களை தவெக நியமித்திருக்கிறது. அதன்படி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த அதிகவினர்களுக்கு பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா வினாடி-வினாவில் சாவர்க்கர் குறித்த கேள்வி; கேரள கல்வித்துறையில் சர்ச்சை

கேரள மாநிலம் காசர்கோடு, மஞ்சேஸ்வரம் மற்றும் கும்பளா ஆகிய கல்வித் துணை மண்டலங்களில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக கல்வித் துறை சார்பில் சுதந்திர தின விழா வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன. ​அதில்... மேலும் பார்க்க