வருமான வரி... மூலதன ஆதாய வரி... இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? தெளிவான விளக்கம்!
குளிர்பானத்தில் மயக்க மருந்து; 33 வயது நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த 73 வயது இயக்குநர்
பாலிவுட் படங்களான 'படே தில் வாலா' (Bade Dil Wala) மற்றும் 'ஜோரு கா குலாம்' (Joru Ka Ghulam) உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஷகீல் நூரானி (73).
திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான ஷகீல் நூரானி மீது 33 வயதுடைய நடிகை ஒருவர் தன்னை நூரானி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக புகார் செய்துள்ளார்.
அப்புகாரின் அடிப்படையில் இன்று அதிகாலையில் மும்பை போலீஸார் நூரானியை அவரது வீட்டில் கைது செய்துள்ளனர். அந்த நடிகை போலீஸில் கொடுத்துள்ள புகாரில், 2016-ஆம் ஆண்டு மும்பை லோகண்ட்வாலாவில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் நூரானியை முதன்முதலில் சந்தித்தார்.
அப்போது தான் தயாரிக்க இருக்கும் ஒரு படத்தில் நடிப்பது தொடர்பாக நடிகையிடம் நூரானி பேசி இருக்கிறார். அதோடு இது குறித்து மேற்கொண்டு பேச தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார்.
திரைக்கதை ஒன்று தொடர்பாக விவாதிக்க நூரானியின் மல்வானி இல்லத்திற்கு அந்தப் பெண் நடிகை சென்றுள்ளார். நூரானி அவருக்கு ஒரு பானத்தைக் குடிக்க கொடுத்ததாகவும், அதைக் குடித்த பிறகு அவர் சுயநினைவை இழந்ததாகவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து வைத்துகொண்டார். நடிகை சுயநினைவு திரும்பியதும், நூரானி தனது அலைபேசியில் இருந்த வீடியோவைக் காண்பித்து, நடந்த சம்பவம் குறித்து போலீஸாரிடமோ அல்லது அல்லது குடும்பத்தினரிடம் தெரிவித்தால் அந்தக் காணொளியை சமூக ஊடகத்தில் பரப்பிவிடுவேன் என மிரட்டி அனுப்பி வைத்தார்.
பின்னர், அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி தன்னை பல சந்தர்ப்பங்களில் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். அதோடு அடிக்கடி கருத்தடை மாத்திரைகளைக் கட்டாயப்படுத்தி கொடுத்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அந்தத் திரைப்படத் தயாரிப்பாளர் போரிவலி விடுமுறைக்கால நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கே, குற்றச்சாட்டுகள் குறித்து மேலும் விசாரணை நடத்தவும், சர்ச்சைக்குரிய காணொளியை மீட்டு ஆய்வு செய்யவும் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட செயல்கள் நடைபெற்ற இடங்களை உறுதி செய்யவும் அவரைத் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் போலீஸார் கேட்டுக்கொண்டது.
அதனைத் தொடர்ந்து, நூரானியை ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இக்குற்றச்சாட்டை நூரானியில் வழக்கறிஞர் விகாஷ் சிங் மறுத்துள்ளார்.





















