செய்திகள் :

"எங்களுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பிரச்னை இருக்கிறது" - எஸ்.பி. வேலுமணி ஓபன் டாக்

post image

கோவையில் கோவைப்புதூர் பகுதியில் உள்ள மண்டபத்தில் அ.தி.மு.க தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் புறநகர் மாவட்டச் செயலாளர் செ.ம. வேலுச்சாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய எஸ்.பி.‌வேலுமணி, "செ.ம.வேலுச்சாமி அண்ணன் தனக்கு பொறுப்பு வழங்கியது பற்றி வருத்தப்பட வேண்டாம் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை தலைமைக்கும் எங்களுக்கும், பொதுச்செயலாளருக்கும் எங்களுக்கும்தான் பிரச்னை. இது ஆரோக்கியமான பிரச்னை.

எஸ்.பி. வேலுமணி
எஸ்.பி. வேலுமணி

முதன் முதலில் பிரச்னை எங்கு வருகிறது என்றால், தி.மு.க-வுடன் அ.தி.மு.க செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கும் போதுதான், பிரச்னை வருகிறது. எங்களை த.வெ.க-விக்கு ஆதரவு ஓட்டு போட்ட துரோகி என்று கூறுகிறார்கள்.

தி.மு.க எதிர்ப்பு என்ற வகையில்தான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டு போட்டோம். எங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், தி.மு.க-வுடன் செல்லலாம் என்று கூறியவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?

எஸ்.பி. வேலுமணி
எஸ்.பி. வேலுமணி

பொதுக்குழு கூட்ட வேண்டும். கமிட்டி போட வேண்டும். மீண்டும் பழைய பதவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தான் நாங்கள் வைத்து வருகிறோம். நாங்கள் எல்லாம் இத்தனை ஆண்டுகள் பணியாற்றிவிட்டோம்.

அடுத்த தலைமுறை வரவேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அ.தி.மு.க நன்றாக இருக்க வேண்டும். ஆனால் சிலர் சுயநலமாகச் செயல்படுகிறார்கள். மனசாட்சி இல்லாமல் பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்" என்றார்.

"அமெரிக்காவுடன் நடப்பது பேச்சுவார்த்தை அல்ல; 'செய்தி பரிமாற்றம்'" - ஈரான் அமைச்சரின் விளக்கம் என்ன?

அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இதை மீண்டும் மீண்டும் கூறுவதே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான்.ஆனால், பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறுவதை ஈரான் ... மேலும் பார்க்க

காவல்துறை கௌரவங்களில் ஒன்றான 'வண்ணக்கொடி' அங்கீகாரம்; புதுச்சேரி காவல்துறைக்கு அளிப்பு| Photo Album

வண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச... மேலும் பார்க்க

"ரஷ்யாவுடன் கைகோர்க்கும் வடகொரியா; தென் கொரியாவிற்கும் ஆபத்து" - ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

ஈரான் போரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம், ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.தற்போது உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா என்னென்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை... மேலும் பார்க்க

உயிருடன் இருக்கிறாரா மொஜ்தபா‌ கமேனி? வெளியான வீடியோ; முடிவுக்கு வந்த கேள்வி|Video

ஈரான் போரின் முதல் நாளே ஈரானின் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.இதன் பிறகு, ஈரானின் தலைமை ஆட்டம் காணும் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் கணக்குப்போட்டன.ஆனால், ஈரானின் தலைமை அயோதுல்லா அல... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்கு ஏன் ஆபத்து? - மாணிக்கம் தாகூரின் 5 விளக்கங்கள்|MODI-LIMITATION

தொகுதி மறுவரையறை பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. கூடவே அதற்கான எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்துள்ளன.இந்த வேளையில் தொகுதி மறுவரையறையை 'மோடி-லிமிட்டேஷன்' என்றும், அது ஏன் கூடாது என்றும் தனது எக்ஸ் பக்... மேலும் பார்க்க

பழனி நில மோசடி வழக்கு: "அன்வர்தீன் சிறைக்குள் உயிரிழந்தது ஏன்?" - தவாக வேல்முருகன் கேள்வி

பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. குற்றவாளிகளைக் காப்பாற்ற நினைப்பது யார்?இந்நிலையில் ... மேலும் பார்க்க