செய்திகள் :

Toxic: "பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன்; ஆனால்..." - யஷ்ஷைப் புகழ்ந்து பேசிய நயன்தாரா

post image

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’.

இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று (ஆகஸ்ட்.8) நடைபெற்றது.

டாக்ஸிக் படத்தில் நயன்தாரா
டாக்ஸிக் படத்தில் நயன்தாரா

இதில் கலந்துகொண்டு பேசிய நயன்தாரா, "நிறைய நடிகர்-நடிகைகள் நடிக்கும் படங்களை நான் ஏற்றுக் கொள்வதில்லை. அதுபோன்ற படங்களில் நடிப்பதற்கு நான் சற்று தயங்குவேன். கீது மோகன்தாஸ் இந்தப் படத்தில் நடிப்பதற்கு என்னை அழைத்தபோது நான் நடிக்க மறுத்தேன்.

ஆனால் கீது என்னிடம் 10 மில்லியன் கேள்விகளைக் கேட்டார். ஒரு வழியாக நான் அவரிடம், 'சரி, கதையைச் சொல்லுங்கள்' என்றேன். கதையைச் சொன்னதும் அதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

யஷ்
யஷ்

உடனடியாக அந்தப் படத்தில் நடிப்பதற்குச் சம்மதித்தேன். இது ஒரு சாதாரண படம் அல்ல. இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். அதற்கு காரணம் யஷ் என்று நினைக்கிறேன்.

பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளேன். அவர்கள் அனைவரில் இருந்தும் வேறுபட்டவர் யஷ். அவரைப் போல கடினமாக உழைக்கும் ஒருவரை நான் பார்த்ததில்லை. யஷ் உண்மையிலேயே ஒரு மான்ஸ்டர்" என்று பேசியிருக்கிறார்.

"அன்னைக்கு அழுதிட்டு இருந்தேன்; இன்னைக்கு சூர்யா சாரோட..." - நினைவுகளைப் பகிர்ந்த மமிதா பைஜூ

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது. 'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கி... மேலும் பார்க்க

Toxic: "அந்தப் பிரச்னையை நீங்கள் கையாண்ட விதம் எனக்கு பிடித்திருந்தது" - நயன்தாரா குறித்து யஷ்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க

Photographer Review: காட்டுக்குள் சாகசப் பயணம் மேற்கொள்ளும் போட்டோகிராபர்! சாதிக்கிறாரா?!

புகைப்படக்கலை மீது ஆர்வம் கொண்ட வீராவை (அஷ்ரஃப்), அவருடைய தந்தை (ஆடுகளம் நரேன்) தனது நிறுவனத்தின் முதன்மைப் பொறுப்பில் அமர வைக்க முயல்கிறார். ஆனால், வீராவின் கனவு வேறொன்றின் பக்கம் இருக்கிறது. கொடைக்க... மேலும் பார்க்க

Toxic: புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாதது ஏன்? - நயன்தாரா ஓப்பன் டாக்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க

Hip Hop Tamizha: கட்டுக்கடங்காத கூட்டம்; நிரப்பிய ஃபீனிக்ஸ் மால்; ரத்தான நிகழ்ச்சி; என்ன நடந்தது?

சென்னை ஃபீனிக்ஸ் மாலில் நேற்று மாலை 'மீசைய முறுக்கு 2' பட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சியை நேரில் காண கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.ஹிப் ஹாப் தமிழ... மேலும் பார்க்க

Jason Sanjay: "அதை என் அப்பாவிடம் சொன்னபோது, அவர் யோசிக்கக்கூட இல்லை" - ஜேசன் சஞ்சய்

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் புரோமோஷனு... மேலும் பார்க்க