செய்திகள் :

17 வயதில் ரூ.3.55 கோடி உதவித்தொகை! Brown பல்கலையில் சேரும் ஈரோடு மாணவர் பிரணவ்

post image

தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது மாணவர் பிரணவ் இளங்கோ, அமெரிக்காவின் புகழ்பெற்ற Brown பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பைத் தொடர ரூ.3.55 கோடி மதிப்பிலான முழு உதவித்தொகையைப் பெற்றுள்ளார்.

CS Academy, Erode பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து வரும் பிரணவ், அமெரிக்காவின் புகழ்பெற்ற Brown University-யில் Public Health மற்றும் Applied Mathematics துறைகளில் தனது உயர்கல்வியைத் தொடரவுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கான அவரது கல்விக் காலத்தில் கல்விக் கட்டணம் மற்றும் வாழ்வாதாரச் செலவுகளை உள்ளடக்கும் வகையில் இந்த உதவித்தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Brown பல்கலைக்கழகம்

கணிதம், தொழில்நுட்பம் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி சிக்கலான பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அதற்கான தீர்வுகளை உருவாக்குவதில் பிரணவ் ஆர்வம் கொண்டுள்ளார். குறிப்பாக, தரவுகளின் அடிப்படையில் பொது சுகாதாரத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரது எதிர்கால நோக்கமாகும்.

பிரணவின் LinkedIn அறிமுகத்தின்படி, பொறியியல் மற்றும் வணிகத் துறைகளின் இணைவில் உருவாகும் வாய்ப்புகள் மீது அவர் ஆர்வம் கொண்டவர். அத்தோடு மென்பொருள் உருவாக்குதல், நிறுவனங்களை கட்டமைத்தல் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் ஆகியவற்றிலும் அவர் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

17 வயதிலேயே உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றில் முழு உதவித்தொகையுடன் கல்வி பயிலும் வாய்ப்பை பிரணவ் இளங்கோ பெற்றிருப்பது, ஈரோட்டை மட்டுமல்லாமல் தமிழக மாணவர்களுக்கும், உயர்கல்விக்காக காத்திருக்கும் அனைவருக்கும் பெருமைக்குரியதாக அமைந்துள்ளது.

பாரம்பரியத் தமிழர் விளையாட்டுகளை மீட்டெடுக்கும் விஐடி சென்னை!

பாரம்பரியத்தையும் நவீன அறிவியலையும் இணைக்கும் தனித்துவ முயற்சியாக, விஐடி சென்னையில் மாணவர்களின் அறிவாற்றல், உடல் நலம் மற்றும் மனநலனை மேம்படுத்தும் நோக்கில் பாரம்பரிய தமிழர் விளையாட்டுகளை மீண்டும் அறிம... மேலும் பார்க்க

அப்பாவின் நம்பிக்கை... மகளின் உழைப்பு... NEET-ல் வெற்றிக் கதை எழுதிய சந்தியா!

NEET... இந்த நான்கு எழுத்து தேர்வு, லட்சக்கணக்கான மாணவர்களின் கனவையும், பல வருட உழைப்பையும் சோதிக்கும் ஒரு பெரிய பயணம். இந்த பயணத்தில் வெற்றி என்பது வெறும் மார்க் மட்டும் கிடையாது; தன்னம்பிக்கை, விடாம... மேலும் பார்க்க

சேலம்: ISO தரச்சான்று பெற்ற தமிழ்நாட்டின் முதல் அரசு தொடக்கப்பள்ளி! - சாதித்தது எப்படி?

தமிழ்நாட்டில் விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக அடித்தளம் அமைத்துக் கொடுத்த அரசுப் பள்ளிகள் பலவற்றில் தற்போது மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறைவு எனச்சொல்லி மூடப்பட்டு வருகின்றன. பொதுப் பள்ள... மேலும் பார்க்க

நீட் தேர்வில் வென்ற ஏற்காடு மலைவாழ் கிராம மாணவி நிவேதா; முதல்வருக்கு வைக்கும் கோரிக்கை என்ன?

ஏற்காட்டில் உள்ள குண்டூர் என்னும் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் மணிமேகலை தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் நிவேதா.இவர் இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில் 245 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்ச... மேலும் பார்க்க

திறன் மேம்பாடு டு சர்வதேச பணி: ஜெர்மனி கல்வி நிறுவனத்துடன் சென்னைஸ் அமிர்தா கைக்கோர்ப்பு!

இந்திய இளைஞர்களுக்கு சர்வதேச வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய முன்னெடுப்பாக, லாஜிஸ்டிக்ஸ் செக்டர் ஸ்கில் கவுன்சில் (Logistics Sector Skill Council - LSC), ஜெர்மனியின் பெர்லினில் அமைந்துள்ள BBW Hoch... மேலும் பார்க்க

2026 பட்டதாரிகளுக்கு சிறப்பு உதவித்தொகையை அறிவித்த வெராண்டா பையர்!

வெராண்டா லெர்னிங் நிறுவனத்தின் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் (BFSI) துறைக்கான திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பிரிவான வெராண்டா பையர், 2026 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவர்களுக்காக சிறப்ப... மேலும் பார்க்க