Quote of the day: 'நம்பிக்கையே முதல் வெற்றி!' - அமெரிக்க முன்னாள் அதிபர் சொல்வதை...
திறன் மேம்பாடு டு சர்வதேச பணி: ஜெர்மனி கல்வி நிறுவனத்துடன் சென்னைஸ் அமிர்தா கைக்கோர்ப்பு!
இந்திய இளைஞர்களுக்கு சர்வதேச வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய முன்னெடுப்பாக, லாஜிஸ்டிக்ஸ் செக்டர் ஸ்கில் கவுன்சில் (Logistics Sector Skill Council - LSC), ஜெர்மனியின் பெர்லினில் அமைந்துள்ள BBW Hochschule – University of Applied Sciences, மற்றும் சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனங்கள் (Chennais Amirta Group of Institutions) ஆகியவற்றுக்கிடையே முத்தரப்பு ஒப்பந்தம் (Tripartite Agreement) கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த முயற்சி, இந்திய மாணவர்களை உலகளாவிய கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுடன் இணைத்து, உலகத் தரத்திலான திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்க வேண்டும் என்ற இந்திய அரசின் நோக்கத்துடன் ஒத்துப்போகிறது.




குறிப்பாக, வேகமாக வளர்ந்து வரும் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் (Supply Chain) துறையில் மாணவர்களுக்கு சர்வதேச கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனங்கள், தகுதியான லாஜிஸ்டிக்ஸ் மாணவர்களை ஜெர்மனியின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான BBW Hochschule-இல் ஒரு ஆண்டு உயர்கல்வி பயில்வதற்காகத் தயார்படுத்தி வழிகாட்டும். 50 ஆண்டுகளுக்கும் மேலான கல்விச் சிறப்பும், தொழில்துறையுடன் வலுவான கூட்டாண்மையும் கொண்ட கல்வி நிறுவனம் இதுவாகும்.
கல்வித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்கள், அந்நாட்டின் நடைமுறையில் உள்ள விசா மற்றும் குடியேற்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஜெர்மனியிலேயே பணியாற்றும் வாய்ப்பைப் பெறலாம். இதன் மூலம் அவர்கள் சர்வதேச பணியனுபவத்தைப் பெற்று, உலகளாவிய அளவில் சிறந்த தொழில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள முடியும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒத்துழைப்பு, இந்தியாவில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறைத் தயார்நிலையை ஊக்குவிக்கும் லாஜிஸ்டிக்ஸ் செக்டர் ஸ்கில் கவுன்சில், ஜெர்மனியில் செயல்முறை சார்ந்த கல்வி மற்றும் தொழில்துறை இணைப்புக்காகப் புகழ்பெற்ற BBW Hochschule, மற்றும் சர்வதேச கூட்டாண்மைகள் மற்றும் தொழில்துறை சார்ந்த கல்வி மூலம் மாணவர்களை உலகளாவிய தொழில் வாய்ப்புகளுக்குத் தயார்படுத்தும் சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் வலிமைகளை ஒருங்கிணைக்கிறது.





இந்த முத்தரப்பு ஒப்பந்தம், இந்த கூட்டாண்மையின் முதல் கட்டமாகும். எதிர்காலத்தில் இது விரிவான புரிந்துணர்வு ஒப்பந்தமாக (Memorandum of Understanding – MoU) மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கல்வி பரிமாற்றத் திட்டங்கள், சர்வதேச பயிற்சிப் பணிகள் (Internships), மாணவர் பரிமாற்றம் (Student Mobility), ஆராய்ச்சி ஒத்துழைப்புகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் போன்ற பல்வேறு வாய்ப்புகள் உருவாகும்.
















