செய்திகள் :

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி; கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமார்

post image

சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி ஏமாற்றியதாக தனியார் பள்ளி சங்கத் தலைவர் பி.டி.அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளரான இளங்கோவன், சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பி.டி.அரசகுமார்
பி.டி.அரசகுமார்

அந்தப் புகாரில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் தனக்கு இருக்கும் அரசியல் மற்றும் அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி, தனியார் பள்ளிகளுக்குத் தேவையான நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்த்துதல், டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ அனுமதிகள் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பூர்வ சான்றிதழ்களைப் பெற்றுத் தருவதாகக் கூறியிருக்கிறார்.

இதை நம்பி தமிழகம் முழுவதிலும் உள்ள ஏராளமான தனியார் பள்ளி நிர்வாகிகள் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். ஆனால், உறுதியளித்தபடி எந்தவொரு அனுமதியையும் பெற்றுத் தராமலும், வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமலும் சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து அவர் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

பி.டி.அரசகுமார்
பி.டி.அரசகுமார்

இப்புகாரை அடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, சாலிகிராமம் மெஜஸ்டிக் காலனியில் வசித்து வந்த பி.டி.அரசகுமாரை போலீஸார் நேற்று அதிரடியாகக் கைது செய்திருக்கின்றனர்.

குரூப் 1: வெறும் 26 பணியிடங்களை அறிவித்த TNPSC; தேர்வர்கள் சந்திக்கும் விளைவுகள் என்ன?

தமிழ்நாட்டில் துணை ஆட்சியர் , துணைக் காவல் கண்காணிப்பாளர், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் போன்ற உயரிய அரசுப் பதவிகள் குரூப் 1 தேர்வு மூலமாகவே நிரப்பப்படுகின்றன. இந்த உயர் பதவிகளில் பெரும்பாலா... மேலும் பார்க்க

"செங்கோட்டையனின் அறிவிப்பு, சாதி வெறிக் கூட்டத்திற்கு தீனி" - பிரின்ஸ் கஜேந்திர பாபு காட்டம்

"பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதியை குறிப்பிடுவது சமூக இழுக்கை சுமந்துகொண்டு திரிய வேண்டிய அவசியத்தை உருவாக்குவது ஆகும்" என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாப... மேலும் பார்க்க

'2029-க்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு கல்வி'- அசோக் லேலண்ட் அறக்கட்டளையின் சிறப்பான முன்னெடுப்பு!

2029-ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் சுமார் 10 லட்சம் மாணவர்களை தனது கல்வி முயற்சிகள் மூலம் சென்றடைய அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சமூக பொறுப்பு பிரிவாக செயல்பட்டு வரும் அசோக் லேலண்ட் அறக்கட்டளையானது த... மேலும் பார்க்க

கோரிக்கை விடுத்த ராமநாதபுரம் ஆட்சியர்; ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய காவல் துணை ஆய்வாளர்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மேல்நிலை கல்வியை முடித்து பொருளாதார வசதி காரணமாக உயர் கல்வியில் சேர முடியாத மாணவ மாணவிகளுக்கு உதவி புரிவதற்கு நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் மாவட்ட ... மேலும் பார்க்க

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகை - கல்விக்குக் கரம்கொடுக்கும் வடிவேல் கிராக்கர்ஸ்!

1945 இல் துவங்கப்பட்ட சிவகாசியின் மிக பிரபலமான பட்டாசு நிறுவனமான வடிவேல் கிராக்கர்ஸ் ( vadivel crackers ) இல் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிறுவத்தின் மூலம் ... மேலும் பார்க்க

கடினமான Physics வினாத்தாள், காத்திருந்த மோடி, மீண்டும் வினாத்தாள் கசிவு? - நீட் மறுதேர்வு நிகழ்வுகள்

நேற்று (ஜூன் 21, 2026) நீட் மறுதேர்வு நடைபெற்றது. தேர்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ...> நேற்று நடந்த நீட் மறுதேர்வில் கிட்டத்தட்ட 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியிருக்கின்றனர். ஆனால... மேலும் பார்க்க