விண்வெளியில் இருந்து பூமிக்கு மின்சாரம்; சீனாவின் `வேற லெவல்' முயற்சி - இதுமட்டு...
கோரிக்கை விடுத்த ராமநாதபுரம் ஆட்சியர்; ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய காவல் துணை ஆய்வாளர்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மேல்நிலை கல்வியை முடித்து பொருளாதார வசதி காரணமாக உயர் கல்வியில் சேர முடியாத மாணவ மாணவிகளுக்கு உதவி புரிவதற்கு நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த வேண்டுகோளை ஏற்ற ராமநாதபுரம் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு சிறப்பு துணை ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன், மாணவ மாணவிகளின் கல்வி உதவிக்காக ருபாய் ஒரு லட்சத்தினை மாவட்ட ஆட்சியரிடம் நன்கொடையாக வழங்கினார்.

நன்கொடையாக வழங்கப்பட்ட அந்த தொகையினை பெற்றோர் இருவரையும் இழந்த 2 மாணவர்கள் மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்த 4 மாணவர்களின் உயர்கல்வி பெற உதவிடும் வகையில், மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பொருளாதார வசதியில்லா மாணவ மாணவிகளின் உயர் கல்விக்கு ரூபாய் ஒரு லட்சம் நன்கொடை வழங்கிய காவல் சிறப்பு துணை ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசனுக்கு, மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி ஆகியோர் உடனிருந்தனர்.

















