செய்திகள் :

திருச்செந்தூர்: சேவைக் கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு; பக்தர்கள் அதிர்ச்சி!

post image

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா போன்ற கட்டண சேவைகளின் தொகையை அதிகரிக்க திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக  பக்தர்களிடமிருந்து கருத்து கேட்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “அதிகளவு உயர்ந்துள்ள விலைவாசியைக் கருத்தில் கொண்டும், திருக்கோயிலுக்கான வருவாய் குறைவை ஈடு செய்யும் வகையிலும், நிர்வாகத்தின் நலன் கருதியும் தக்கார் தீர்மானத்தின் அடிப்படையிலும் தற்போதுள்ள சேவைக் கட்டணங்கள் மற்றும் அபிஷேக, சிறப்புத் தரிசனக் கட்டணங்களை உயர்த்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.  

திருச்செந்தூர்
திருச்செந்தூர்

தங்கரத உலா திட்டத்திற்கான ஒருநாள் கட்டணம் 2,500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாகவும், அதன் நிரந்தர வைப்பு நிதி 50,000 ரூபாயில் இருந்து 1 லட்ச ரூபாயாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சண்முகார்ச்சனைக்கான ஒருநாள் கட்டணம் 5,000 ரூபாயில் இருந்து 30,000 ரூபாயாகவும், மூலவர் அபிஷேகத்திற்கான ஒருநாள் கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

மேலும், ஒன்பது கால பூஜைக்கான ஒருநாள் கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 6,500 ரூபாயாகவும், அதன் நிரந்தர வைப்பு நிதி 20,000 ரூபாயில் இருந்து 90,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்படுகிறது.

சந்தனக்காப்பு செய்வதற்கான ஒருநாள் அனுமதி கட்டணம் தற்போதுள்ள 100 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான 1.5 கிலோ சந்தனக் கட்டை வழங்கும் நடைமுறையில் மாற்றமில்லை. அபிஷேக தரிசனக் கட்டணம் தற்போது சாதாரண நாட்களில் 500 ரூபாயாகவும், திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் 2,000 ரூபாயாகவும், இனி அனைத்து நாட்களுக்கும் பொதுவான முறையில் 2,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட உள்ளது.  

திருச்செந்தூர்

இந்தக் கட்டண உயர்வுகள் குறித்து பக்தர்கள் அல்லது பொதுமக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை எழுத்துப்பூர்வமாக வரும் 07.07.2026 மாலை 05.45 மணிக்குள் திருச்செந்தூர் கோயில் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், வருவாய் குறைவைக் காரணம் காட்டி சேவைக்கட்டணங்கள் மற்றும் அபிஷேகக் கட்டணங்களைப் பல மடங்கு உயர்த்த திருக்கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பக்தர்கள் கூறியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்ரமண்ய சுவாமி கோயில்: அஷ்டமா ஸித்திகளையும் அருளும் தலம்!

அருணகிரிப்பெருமான் வயலூரில் தரிசனம் செய்து வழிபாடுகள் செய்து முருகனை வேண்டிக்கொண்டார். அடுத்து செல்ல வேண்டிய தலம் குறித்து தியானம் செய்ய முருகப்பெருமான் வேடனாய் வந்து விராலிமலை செல்லுமாறு பணித்தாராம்.... மேலும் பார்க்க

மதுரை: மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் தொடக்கம் - Photo Album

ஆனி ஊஞ்சல் உற்சவம்ஆனி ஊஞ்சல் உற்சவம்ஆனி ஊஞ்சல் உற்சவம்ஆனி ஊஞ்சல் உற்சவம்ஆனி ஊஞ்சல் உற்சவம்ஆனி ஊஞ்சல் உற்சவம்ஆனி ஊஞ்சல் உற்சவம்ஆனி ஊஞ்சல் உற்சவம்ஆனி ஊஞ்சல் உற்சவம்ஆனி ஊஞ்சல் உற்சவம் மேலும் பார்க்க

திருநெல்வேலி: ராஜவல்லிபுரம் செப்பறை ஸ்ரீ அழகியகூத்தர் சுவாமி திருக்கோயில் ஆனித் தேரோட்டம் திருவிழா!

திருநெல்வேலி: ராஜவல்லிபுரம் செப்பறை ஸ்ரீ அழகியகூத்தர் சுவாமி திருக்கோயில் ஆனித் தேரோட்டம் திருவிழா.! மேலும் பார்க்க

மதுரை கூடலழகர் கோயில்: நினைத்த காரியத்தை முடிக்க அருளும் வியூக சுந்தரராஜ பெருமாள்!

மதுரை என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலும் அழகர்கோயிலும்தான். ஆனால் மதுரையின் நடுவே சிங்காரமாக அமர்ந்திருக்கும் ஓர் ஆலயம். அழகர்மலையில் இருப்பவர் கள்ளழகர் என்றால்... மேலும் பார்க்க

திருநெல்வேலி: நெல்லையப்பர் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம்! | Photo Album

திருநெல்வேலி: நெல்லையப்பர் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம்.! மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டமலை வேலாயுதசுவாமி : தீராத மனக் கவலை தீர்க்கும் திருக்கோயில்!

குன்றுதோறும் கோயில்கொண்டு அருளும் தெய்வம் முருகப்பெருமான். மலைமேல் இருக்கும் குமரனை சென்று தரிசனம் செய்தாலே வாழ்வில் மேன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட அற்புத பலன்களைக்கொடுத்து வாழ்வில் ம... மேலும் பார்க்க