செய்திகள் :

Salman: 50 ஆண்டுகளாக வசிக்கும் வீட்டைக் காலி செய்யும் நடிகர் சல்மான் கான்; காரணம் என்ன?

post image

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டின் மீது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சல்மான் கானுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக வேறு ஒரு வீட்டில் குடியேற சல்மான் கான் முடிவு செய்துள்ளார்.

புதிய வீடு குடும்பத்தினர் அனைவருக்கும் வசதியாக இருக்க வேண்டும் என்று கருதி அதற்கு தக்கபடி இடத்தைத் தேடி வந்தார்.

தற்போது வசிக்கும் கேலக்ஸி அபார்ட்மெண்ட்டிற்கு அருகில் 70 ஆண்டுகள் பழமையான இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இருக்கிறது. அந்தக் கட்டிடத்தை சல்மான் கான் குடும்பம் வாங்கி இருக்கிறது. அந்த இடத்தில் 6 மாடியில் புதிய வீடு கட்ட சல்மான் கான் முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பான திட்டத்திற்கு மகாராஷ்டிரா கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் கொடுத்து இருக்கிறது.

மொத்தம் 1014 சதுர மீட்டர் அளவுக்கு இந்த வீடு கட்டப்பட இருக்கிறது. இந்த வீட்டைக் கட்டும் ஒப்பந்ததாரர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டார். இத்திட்டத்திற்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டே ஒப்புதல் கொடுத்துவிட்டது.

நடிகர் சல்மான் கான்
நடிகர் சல்மான் கான்

ஒப்புதல் கொடுக்கும்போது ஏற்கனவே இருக்கும் மரங்களை வெட்டக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த இடத்தைச் சுற்றி நாட்டு மரக்கன்றுகளை நடவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. சல்மான் கான் தற்போது இருக்கும் வீட்டில் இருந்து சற்றி தள்ளி புதிய வீடு கட்டப்பட இருக்கிறது.

புதிய வீடு கட்டிய பிறகு குடும்பத்தோடு அந்த வீட்டில் சல்மான் கான் குடியேற இருக்கிறார். அதேசமயம் கேலக்ஸி அபார்ட்மெண்ட்ஸ் பல தசாப்தங்களாக சல்மான் கானுடன் நெருக்கமாகத் தொடர்புடையது.

சல்மான் கான் குறிப்பாக திருவிழாக்கள் மற்றும் அவரது பிறந்தநாளில் வீட்டின் பால்கனியில் இருந்து ரசிகர்களின் வாழ்த்துக்களைப் பெறுவது வழக்கம். மும்பையின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட பிரபல முகவரிகளில் ஒன்றாக கேலக்ஸி அபார்ட்மெண்ட் இருக்கிறது.

"சமைப்பதும், சுத்தம் செய்வதும் பெண்களின் வேலையில்லை" - பிரியங்கா சோப்ரா

வீட்டு வேலைகளைச் செய்வதில் ஆண் - பெண் பாகுபாடு பார்க்கக்கூடாது என்று பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். சமையல் மற்றும் சுத்தம் போன்ற வேலைகளை ஒரு பெண்ணின் கடமையாகப் பார்க்கக்கூடாது என்று... மேலும் பார்க்க

களைகட்டிய சரத் பவார் பேத்தியின் திருமணம்; நடனமாடிய 'பாலிவுட் பாட்ஷா' ஷாருக் கான்!

தேசியவாத காங்கிரஸ் நிறுவனத் தலைவர் சரத்பவார் மகள் சுப்ரியாசுலேயின் மகள் ரேவதிக்கு இன்று திருமணம் நடந்தது. அவர் தொழிலதிபர் சரங் லகானியைத் திருமணம் செய்தார். இதையொட்டி நேற்று இரவு சிறப்பு இசை நிகழ்ச்சிக... மேலும் பார்க்க

பாலிவுட் நடிகர் குடும்பத்திடம் ரூ.16 கோடி மோசடி; மும்பை மாநகராட்சி உதவி கமிஷனர் தலைமறைவு

மும்பை மாநகராட்சியில் உதவி கமிஷனராக இருந்தவர் மகேஷ் பாட்டீல். இவர் பாலிவுட் நடிகர் ஜாவேத் ஜாஃப்ரி குடும்பத்தினரிடம் ரியல் எஸ்டேட் திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி பிரிட்டன... மேலும் பார்க்க

Mouni Roy: ``நான் லெஸ்பியனா?" - விவாகரத்துக்குப் பிறகான வதந்தி குறித்து நடிகை மௌனி ராய்

நாகினி தொடர் மூலம் தமிழ் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றவர் நடிகை மௌனிராய். இவர் தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தொழிலதிபர் சூரஜ் நம்பியார் என்பவருக்கும் - நடிகை மௌனி ராய்-க்கும... மேலும் பார்க்க

"சச்சின், கோலியை விட சிறப்பாக விளையாட வேண்டும்" - சூர்யவன்ஷியை வாழ்த்திய கங்கனா ரனாவத்

நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயதுடைய இளம் வீரரான சூர்யவன்ஷி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.இந்த சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை ... மேலும் பார்க்க

Aamir Khan: ஷாருக்கான், சல்மான் கான் முன்னிலையில் திருமணம்; கௌரியை மணமுடிக்கும் ஆமீர் கான்!

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்துவிட்டார். ஆனால் விவாகரத்து செய்த பிறகு இரண்டு முன்னாள் மனைவிகளிடமும் சுமூக உறவை பேணி வரும் ஆமீர் கான் கடந... மேலும் பார்க்க