செய்திகள் :

மகாராஷ்டிரா TET வினாத்தாள் கசிவால் தேர்வு ரத்து; "இளைஞர்களின் எதிர்காலத்தையே திருடும் செயல்"- ராகுல்

post image

மகாராஷ்டிராவில் இன்று (ஜூன் 28) நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (TET), வினாத்தாள் கசிவு காரணமாக அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தானே பகுதியில் சில நபர்களிடம் தேர்வுக்கான வினாத்தாள் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய செய்தி கிடைத்தது.

இதன் அடிப்படையில், சனிக்கிழமை அதிகாலையிலேயே பிவாண்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மாணவர்கள்
மாணவர்கள்

சந்தேகம் எழுந்த ஒரு இடத்தில் நடத்தப்பட்ட இந்த ரெய்டில், சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மகாராஷ்டிரா மாநில தேர்வு கவுன்சில் உயர் அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட தாள்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, அசல் வினாத்தாளில் இடம்பெறவிருந்த பல கேள்விகள், அங்கு சிக்கிய தாள்களிலும் அப்படியே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த ராஜீவ் ஷா, ஆகாஷ் குமார் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த தீரஜ் குமார் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், முறைகேடு உறுதியானதால் இன்றைய தேர்வை ரத்து செய்வதாக தேர்வு கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு நீட் வினாத்தாள் கசிவு ஆனதால் மறுதேர்வு வைக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்நிலையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், "மீண்டும் ஒரு வினாத்தாள் கசிவு. மீண்டும் ஒரு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த முறை, மகாராஷ்டிராவின் TET தேர்வு.

நாட்டின் கல்வி மற்றும் தேர்வு முறையானது ஒட்டுமொத்தமாக ஒரு 'சுரண்டல் அமைப்பாக' மாற்றப்பட்டுள்ளது. இது நாட்டின் ஒவ்வொரு இளைஞரின் எதிர்காலத்தையும் பாதுகாப்பற்றதாக மாற்றியிருக்கிறது.

இது வெறும் வினாத்தாள் கசிவு மட்டுமல்ல, நம் இளைஞர்களின் எதிர்காலத்தையே திருடும் செயலாகும்" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

"ஈரான் நாடே இருக்காது" - மீண்டும் தாக்குதலைத் தொடங்கிய ஈரான்- அமெரிக்கா; எச்சரிக்கைக்கும் ட்ரம்ப்

அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த 17-ம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, ஹார்முஸ் ஜலசந்தியை கப்பல் போக்குவரத்துக்குத் திறக்கவும் முடிவு செய்யப்பட்டது... மேலும் பார்க்க

தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி.அரசகுமார் மீது வழக்கு பதிவு: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் (பதிவு செய்யப்படாத அமைப்பு) நிறுவனர் தலைவரான பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் மீது தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக கூறப்படும் புகாரின் ... மேலும் பார்க்க

`தவெக அரசு அமைய உழைத்தவர்கள் பொறுப்புகளில் இருப்பதில் என்ன தவறு?' - அமைச்சர் நிர்மல்குமார்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மல் குமார், நாடாளுமன்ற உ... மேலும் பார்க்க

Congress: மாணிக்கம் தாகூர் தலைவராக நியமனம்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதிரடி மாற்றம்!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் செல்வப்பெருந்தகை அப்பொறுப்பில் இருந்தார். அவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகக் கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்... மேலும் பார்க்க

`மாணவர்களுக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு' - சாதி பெயருடன் ஐ.டி கார்டு விவகாரம்; விளக்கமளித்த செங்கோட்டையன்

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சாதி பெயரையும் குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்க அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஈரோ... மேலும் பார்க்க

"மாணவர்கள் அனைவரும் சமம்!" - பள்ளி ID கார்டுகளில் சாதி பெயர் சர்ச்சை குறித்து செங்கோட்டையன் விளக்கம்

நேற்று (ஜூன் 26, 2026) ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், "பள்ளி மாணவர்களுக்கு சாதி பெயருடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்" என்று கூறியிரு... மேலும் பார்க்க