செய்திகள் :

ஒடிசா: 5-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற ஐஸ்வர்யா ராய் பாடல்; வலுக்கும் கண்டங்கள்!

post image

ஒடிசா மாநிலத்தில் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பாடப் புத்தகத்தில், நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து 1999-இல் வெளியான 'ஹம் தில் தே சுகே சனம்' திரைப்படத்தின் பிரபலமான 'நிம்புடா நிம்புடா' பாடல் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

5-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ஐஸ்வர்யா ராயின் பாடல்
5-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற ஐஸ்வர்யா ராயின் பாடல்

ராஜஸ்தான் மாநில நாட்டுப்புறப் பாடலான இது, திரைப்படப் பாடலாகப் புத்தகத்தில் அப்படியே அச்சிடப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் கடும் கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளதுடன், கல்வியாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தகத்தைத் தொகுக்கும்போது ஏற்பட்ட கவனக்குறைவால் இந்தத் தவறு நடந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், ஒடிசா மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (SCERT) பாடப்புத்தகங்களில் மொத்தம் 1,600-க்கும் மேற்பட்ட பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, 8-ஆம் வகுப்புப் புத்தகங்களில் மட்டும் அதிகபட்சமாக 705 பிழைகள் உள்ளன.

SCERT
SCERT

இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, பாடப்புத்தகங்கள் அனைத்தும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவை விரைவில் திருத்தப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று ஒடிசா மாநில பள்ளி மற்றும் மக்கள் கல்வித்துறை அமைச்சர் நித்யானந்த கோண்ட் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தத் தவறு குறித்து முழுமையாக விசாரிக்க விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார்.

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி; கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமார்

சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி ஏமாற்றியதாக தனியார் பள்ளி சங்கத் தலைவர் பி.டி.அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.தமிழ்நாட... மேலும் பார்க்க

குரூப் 1: வெறும் 26 பணியிடங்களை அறிவித்த TNPSC; தேர்வர்கள் சந்திக்கும் விளைவுகள் என்ன?

தமிழ்நாட்டில் துணை ஆட்சியர் , துணைக் காவல் கண்காணிப்பாளர், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் போன்ற உயரிய அரசுப் பதவிகள் குரூப் 1 தேர்வு மூலமாகவே நிரப்பப்படுகின்றன. இந்த உயர் பதவிகளில் பெரும்பாலா... மேலும் பார்க்க

"செங்கோட்டையனின் அறிவிப்பு, சாதி வெறிக் கூட்டத்திற்கு தீனி" - பிரின்ஸ் கஜேந்திர பாபு காட்டம்

"பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதியை குறிப்பிடுவது சமூக இழுக்கை சுமந்துகொண்டு திரிய வேண்டிய அவசியத்தை உருவாக்குவது ஆகும்" என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாப... மேலும் பார்க்க

'2029-க்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு கல்வி'- அசோக் லேலண்ட் அறக்கட்டளையின் சிறப்பான முன்னெடுப்பு!

2029-ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் சுமார் 10 லட்சம் மாணவர்களை தனது கல்வி முயற்சிகள் மூலம் சென்றடைய அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சமூக பொறுப்பு பிரிவாக செயல்பட்டு வரும் அசோக் லேலண்ட் அறக்கட்டளையானது த... மேலும் பார்க்க

கோரிக்கை விடுத்த ராமநாதபுரம் ஆட்சியர்; ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய காவல் துணை ஆய்வாளர்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மேல்நிலை கல்வியை முடித்து பொருளாதார வசதி காரணமாக உயர் கல்வியில் சேர முடியாத மாணவ மாணவிகளுக்கு உதவி புரிவதற்கு நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் மாவட்ட ... மேலும் பார்க்க

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகை - கல்விக்குக் கரம்கொடுக்கும் வடிவேல் கிராக்கர்ஸ்!

1945 இல் துவங்கப்பட்ட சிவகாசியின் மிக பிரபலமான பட்டாசு நிறுவனமான வடிவேல் கிராக்கர்ஸ் ( vadivel crackers ) இல் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிறுவத்தின் மூலம் ... மேலும் பார்க்க