செய்திகள் :

4 ஆண்டுகளாக தபாலை பதுக்கிய தபால்காரர்; வீட்டில் 6 மூட்டைகளில் சிக்கிய அஞ்சல் - திருப்பூர் அதிர்ச்சி!

post image

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அஞ்சல் துறையின் தபால் சேவைகள் முறையாக கிடைப்பதில்லை என உள்ளூர் மக்கள் தபால் அலுவலகத்தில் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்திருக்கிறார்கள். இது குறித்து விசாரணை மேற்கொண்ட தபால்துறை அதிகாரிகள், அஞ்சல்காரராக பணியாற்றி வரும் செந்தில்குமார் என்பவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் முறையாக தபால்களை விநியோகம் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். சந்தேகமடைந்த அஞ்சல்துறை அதிகாரிகள் செந்தில்குமார் வீட்டிற்குச் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்குச் சென்று சேரவேண்டிய தபால்களை விநியோகம் செய்யாமல் மூட்டை மூட்டையாக வீட்டில் குவித்து வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி பல தபால்களை தீயிட்டு கொளுத்தியும் குழிதோண்டி மண்ணிலும் புதைத்திருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

தபால்காரர் செந்தில்குமார்

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து தெரிவித்த அஞ்சல்துறை அதிகாரிகள், "வங்கிகளில் இருந்து வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்ட ஏ.டி.எம் கார்டுகள், ரேஷன் கார்டுகள், ஆதார் கார்டுகள், நீதிமன்ற ஆணைகள், நீட் தேர்வு தொடர்பான தபால்கள் உள்ளிட்ட பல முக்கியமான தபால்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு வினியோகம் செய்யாமல் கடந்த 4 ஆண்டுகளாக இப்படி செய்து வந்திருக்கிறார். 6 மூட்டைகளில் இருந்த தபால்களை அவரிடமிருந்து மீட்டுள்ளோம். செந்தில்குமார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

ஐ.டி ஊழியர்களின் குழந்தைகளுக்கான டே கேர் - வாஷிங்மெஷின் தொட்டியில் வைத்து கதவை அடைத்த பெண் ஊழியர்கள்

பெங்களூரு குண்டலஹள்ளி கேட் பகுதியில் உள்ள கேப்ஜெமினி டெக்னாலஜிக்கல் இந்தியா என்ற ஐ.டி கம்பெனியில் அங்கு பணியாற்றும் பெண்களின் குழந்தைகளை பகல் நேரத்தில் கவனிப்பதற்காக, `சொசைட்டி ஜெனரல் பேபி கேர்' என்ற ... மேலும் பார்க்க

`ஒரு இன்ஸ்டா ஸ்டோரி, 5 வருட தடை!' கேத்தன் கொலையை கிண்டலடித்த பெண் மருத்துவரால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கேத்தன் அகர்வால் கொலை வழக்கில், அவரது மரணத்தைக் கிண்டல் செய்து இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட்டதாகக் கூறப்படும் பல் மருத்துவர் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் த... மேலும் பார்க்க

மும்பை கனமழை: புறநகர் ரயில் போக்குவரத்து பாதிப்பு; இருவர் உயிரிழப்பு; தற்போதைய நிலவரம் என்ன?

மும்பையில் இந்த ஆண்டு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. கடந்த இரண்டு நாள்களாக பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மும்பை நகரின் இன்று காலை ... மேலும் பார்க்க

Reels மோகம்: சினிமா பாடலுக்கு இயேசு சொரூபத்தைக் கொஞ்சிய பெண்; வைரல் வீடியோவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு

நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே இருக்கிறது, புண்ணியவாளன்புரம் கிராமம். அங்கு பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தில், ஒரு பெஞ்சில் சாய்ந்தவாறு இயேசு உட்கார்ந்திருப்பது போன்ற சொர... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணம் திருட்டு: பண்ணை வீடு, கார் என ஆடம்பரமாக வாழ்ந்த ஊழியர்!

அயோத்தியில் உள்ள ராமர் கோயில் உண்டியல் பணத்தை திருடியது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டவர்கள் ஆவர். கைது... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ரஜபுத்திரர்களின் முதல் பெண் அரச வாரிசு; 13 வயதில் பொறுப்பேற்ற சிறுமி!

ராஜஸ்தான் மாநிலத்தில் சில இடங்களில் பெயரளவுக்கு மன்னர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு எந்த வித அதிகாரமும் இல்லாவிட்டாலும், தொடர்ந்து பல நூற்றாண்டாக பின்பற்றி வரும் அரச குடும்ப நடைமுறைகளைப் பின்பற்றி மன... மேலும் பார்க்க