செய்திகள் :

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை: இன்று முதல் 22 ஆம் தேதி வரை முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

post image

தமிழக நிதிநிலை அறிக்கையை இம்மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

முதலமைச்சர் விஜய் துறை ரீதியான ஆலோசனை கூட்டங்களை இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரைமேற்கொள்கிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் துறையின் அமைச்சர்கள்,செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட `வெற்றி தமிழகம் தொலைநோக்கு' திட்டத்தில் இடம்பெற்றுள்ள திட்டங்களை ஓர் ஆண்டு, மூன்று ஆண்டு , 5 ஆண்டு என செயல்படுத்துவது, நிதிநிலை அறிக்கையில் இடம்பெறக்கூடிய திட்டங்கள் மற்றும் அதற்கு தேவையான நிதி தேவைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

துறை ரீதியாக வெளிப்படைத்தன்மையான நிர்வாகம், செயல்திறன் ஆகியற்றவை குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது

இன்று காலை 11 மணியளவில் உணவு , கூட்டுறவு மற்றும் நுகர்வோர் நலத்துறை சார்பில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

’பதவி வேண்டாம், தொண்டராக தொடர்கிறோம் என கடிதம் கொடுத்தது ஏன்?’ – எஸ்.பி.வேலுமணி விளக்கம்

கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கடிதத்திலேயே தெளிவாக உள்ளது. அந்தந்த மாவட்டத்தில் கட்சிக்காக உழைத்தவர்கள், எ... மேலும் பார்க்க

’விரைவில் தேர்தல் வரும் என ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போது தெரிகிறது!’ - பெ. சண்முகம் காட்டம்

கோவை ஹோப் காலேஜ் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க அல்லாத கட்ச... மேலும் பார்க்க

உள்துறை அமைச்சரை சந்திக்க ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற CPM முன்னாள் அமைச்சர்; குவியும் புகார்!

கேரள தேவஸ்வம்போர்டு முன்னாள் அமைச்சரும், சி.பி.எம் முக்கியத் தலைவருமான கடகம்பள்ளி சுரேந்திரன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார்.... மேலும் பார்க்க

'பா.ம.க உங்கள் குடும்ப சொத்து அல்ல' டு `உறுதிக்கொடுத்த த.வெ.க; திருமா விரைவில்.!' |கழுகார் அப்டேட்ஸ்

அணி திரளும் பா.ம.க-வினர்!எதிர்க்கட்சியா... ஆளும்கட்சியா..?கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பா.ம.க-வில் நிலவிவந்த தந்தை - மகன் மோதல் ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ராமதாஸும் அன்புமணியும் ஆரத்தழுவி ஒன்றிணைந... மேலும் பார்க்க

`தொகுதிக்கு 20 கோடி; 25 கட்சிகள்; ஆனாலும் திமுக-வை நிராகத்துவிட்டார்கள்!' - துரை வைகோ ஓப்பன் டாக்

முதல்வர் விஜய் தலைமையில் தவெக நடத்திய தோழமை கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, மதிமுக-வின் முதன்மைச் செயலாளரும் எம்.பியுமான துரை வைகோவிடம் பேசினோம்.``தவெகவின் ஆதரவு கட்சிகளின் முதல் கூட்டம் இது.... மேலும் பார்க்க