செய்திகள் :

’பதவி வேண்டாம், தொண்டராக தொடர்கிறோம் என கடிதம் கொடுத்தது ஏன்?’ – எஸ்.பி.வேலுமணி விளக்கம்

post image

கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கடிதத்திலேயே தெளிவாக உள்ளது. அந்தந்த மாவட்டத்தில் கட்சிக்காக உழைத்தவர்கள், எம்.ஜி.ஆர், அம்மா காலத்தில் இருந்து உழைத்தவர்கள், பொதுச்செயலாளர் எடப்பாடியார் முதலமைச்சராக உழைத்தவர்களுக்கு எல்லாம் பதவி வழங்கப்படவில்லை. அதனால்தான் நான் உட்பட நத்தம் விஷ்வநாதன், தங்கமணி எல்லாம் பதவி வேண்டாம். நாங்கள் உருவாக்கிய கட்சியில் நாங்கள் உறுப்பினராக தொடர்கிறோம் என சொல்லி உள்ளோம். ஆனால் நீங்கள்தான் பல விதமாக மீடியாவில் போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

அ.தி.மு.க. மகளிரணி கூட்டத்திற்கு வளர்மதி எப்போதும் கூப்பிடுவார். ஆனால் நேற்றைய கூட்டம் தொடர்பாக எங்களுக்கு தகவல் சொல்லவில்லை. அதற்கு முந்தைய நாளே கடிதம் கொடுத்துவிட்டோம். அதனால் கூட கூப்பிடாமல் இருந்திருக்கலாம். நான் சொன்ன ஜாம்பவான்களுக்கு அர்த்தம் வேறு. கட்சிக்காக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் உழைத்தவர்கள், எடப்பாடியாருக்காக களத்தில் உழைத்தவர்கள், கட்சியை வளர்த்தவர்கள் என்ற கருத்தில் சொன்னேன். கடந்த 4ம் தேதி பதவி எல்லாம் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் கொடுக்கவில்லை. ஏன் என அவர்களிடமே கேளுங்கள். எங்களை பொறுத்தவரை கடிதத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறோம். இன்னும் இந்த கட்சி நன்றாக இருக்க வேண்டும். பொதுச்செயலாளர் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்றார். விஜயபாஸ்கர்கள் த.வெ.க-வில் இணைந்தது குறித்த கேள்விக்கு எஸ்.பி.வேலுமணி பதிலளிக்க மறுத்துவிட்டார்.

”இனி சுடு தண்ணீருக்காக அலைய வேண்டாம்” - கோரிக்கை வைத்த கர்ப்பிணிகள்; நெகிழ வைத்த மாவட்ட ஆட்சியர்!

அரியலூர் மாவட்டம், அரசு மகப்பேறு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட தாய்சேய் நல மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மகப்பேறு உயர் கண்காணிப்புப் பிரிவு, மகப்பேறு தீவிர சிகிச்சைப் பிரிவு, வளர் இளம் பிள்ளை கவ... மேலும் பார்க்க

"தவெக வரலாற்றில் கரூர் ஒரு கரும்புள்ளி.!"- தவெக இணைப்பு விழாவில் பேசிய எம்.ஆர் விஜயபாஸ்கர்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தவெகவில் அதிகாரபூர்வமாக இணைந்திருக்கின்றனர். தவிர பல அதிமுக முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இணைந்திருக்... மேலும் பார்க்க

``திமுக எங்களை முதுகில் குத்தவில்லை, நெஞ்சில் குத்திவிட்டார்கள்!" - வைகோ காட்டாமான பேட்டி

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற்வுள்ள இடைத்தேர்தலில் ம.தி.மு.க போட்டியிடாது. அதே சமயம், முதல்வர்... மேலும் பார்க்க

’விரைவில் தேர்தல் வரும் என ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போது தெரிகிறது!’ - பெ. சண்முகம் காட்டம்

கோவை ஹோப் காலேஜ் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க அல்லாத கட்ச... மேலும் பார்க்க

உள்துறை அமைச்சரை சந்திக்க ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற CPM முன்னாள் அமைச்சர்; குவியும் புகார்!

கேரள தேவஸ்வம்போர்டு முன்னாள் அமைச்சரும், சி.பி.எம் முக்கியத் தலைவருமான கடகம்பள்ளி சுரேந்திரன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார்.... மேலும் பார்க்க