செய்திகள் :

மைதானத்தில் திடீரென தாக்கிய மின்னல்; சுருண்டு விழுந்த வீரர் மரணம்... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

post image

தாய்லாந்தில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின்போது நடந்த துயர சம்பவம் உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தென் தாய்லாந்தின் நராதிவாத் (Narathiwat) மாகாணத்தில் நடைபெற்ற கோலோக் எஃப்ஏ கப் (Golok FA Cup) தொடரில் கனமழை பெய்துகொண்டிருந்தபோதும் போட்டி தொடர்ந்து நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் மைதானத்தின் நடுப்பகுதியை தாக்கியது. அந்த நொடியில் 24 வயதான வீரர் சஃப்வான் அவே (Sofwan Awae) மைதானத்திலேயே சரிந்து விழுந்தார். அருகில் இருந்த வீரர்களும் அதிர்ச்சியடைந்தனர். சிலர் உடனடியாக அவரை நோக்கி ஓடி உதவ முயன்ற காட்சிகளும் வைரலாகும் வீடியோவில் பதிவாகியுள்ளன.

உடனடியாக மருத்துவக் குழுவினர் வந்து முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சஃப்வான் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் மேலும் 12 வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் யாலா எஃப்சி (Yala FC) அணியில் இணைந்திருந்த சஃப்வான், திறமையான இளம் வீரராக அறியப்பட்டவர். அவரது மறைவுக்கு கால்பந்து ரசிகர்களும், விளையாட்டு அமைப்புகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், மோசமான வானிலை நிலவியபோதும் போட்டியை ஏன் நிறுத்தவில்லை என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் பலரும் எழுப்பி வருகின்றனர்.இந்த சம்பவம் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பது எவ்வளவு அவசியம் என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டியுள்ளது.

தஞ்சை: வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது காஸ் வெடித்த விபத்து - 3 பேர் உயிரிழப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள சின்னஅம்மன்குடி, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையன் (51) விவசாயி. இவரது மனைவி செல்வி (41) இவர்களது மகள் அபிநயா 10ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டி... மேலும் பார்க்க

மழை வெள்ளத்தில் சென்ற கார்: மரத்தை பிடித்து உயிர் தப்பிய கணவர், இழுத்துச்செல்லப்பட்ட மனைவி, மகள்கள்

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. அஹில்யாநகர் மாவட்டத்தின் லோனி என்ற இடத்திற்கு அவினாஷ் என்பவர் தனது மனைவி ... மேலும் பார்க்க

மும்பை: 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; 9 பேர் உள்ளே சிக்கி உயிரிழந்த சோகம்!

மும்பை அருகில் உள்ள பீவாண்டி என்ற இடத்தில் 4 மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. ஏற்கெனவே பீவாண்டி மாநகராட்சியால் ஆபாயகரமான கட்டடம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் ... மேலும் பார்க்க

நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து; சிலிண்டர் வெடித்ததில் தீயை அணைத்தவர்கள் உட்பட 10 பேர் காயம்!

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள சின்னஅம்மன்குடி, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையன் (51) விவசாயி. இவர் மனைவி செல்வி (41), இவர்களது மகள் அபிநயா 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள... மேலும் பார்க்க

உத்தரகாண்ட்: ரூ.16 கோடியில் கட்டப்பட்ட பாலம்; திறக்கப்பட்ட 16 நாள்களில் சேதம்; அதிர்ச்சியில் மக்கள்

வடமாநிலங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது அல்லது கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களில் இடிந்துவிழுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அது போன்ற ஒரு சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந... மேலும் பார்க்க

சிக்கிம் சுரங்கப்பாதை நிலச்சரிவு: சுரங்கத்தில் சிக்கிய 25 பேர்; 10 பேர் பலி? - தலைவர்கள் இரங்கல்

சிக்கிம் மாநிலத்தின் நாமச்சி மாவட்டத்தில் உள்ள சமர்துங் பகுதியில், 'என்ஹெச்பிசி டீஸ்டா கட்டம் VI' நீர்மின் திட்டத்திற்காக 'ADIT-3' என்ற சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நிலச்ச... மேலும் பார்க்க