செய்திகள் :

தஞ்சாவூர்: உதயநிதி கைது விவகாரத்தில் போராட்டம்; திமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது

post image

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில், கடந்த 3ம் தேதி, தஞ்சாவூரில், காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழக அரசையும், முதல்வரையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் உதயநிதி பேசியது சர்ச்சையானது. அவர் இரட்டை அர்த்தத்தில் பேசியதாகக் கடும் விமர்சனம் எழுந்தது. இந்த விவகாரத்தில் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 4ம் தேதி உதயநிதி கைது செய்யப்பட்டு தஞ்சாவூர், செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதைக் கண்டித்து, தஞ்சாவூரில் தி.மு.க-வினர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அண்ணாசிலை வரை பேரணியாகச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட திமுக கவுன்சிலர் நீலகண்டன்
கைது செய்யப்பட்ட திமுக கவுன்சிலர் நீலகண்டன்

அதே வேளையில், பெண்களை இழிவாகப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியைக் கண்டித்து, த.வெ.க மகளிரணி சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்காக, அண்ணா சிலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த த.வெ.க. கொடியை, தி.மு.க-வினர் பிடிங்கி எறிந்ததுடன் முதல்வர் விஜய் உருவப்பொம்மை எரித்து கோஷமிட்டனர்.

அப்போது அங்கிருந்த தி.மு.க-வினருக்கும், த.வெ.க-வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு இரு கட்சினரும் ஒருவருக்கு ஒருவர் செருப்பு, கற்களை வீசிக்கொண்டனர். இதில் த.வெ.க நிர்வாகிகள் சிலர் காயமடைந்தனர்.

இது குறித்து த.வெ.க தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினரான மகாலட்சுமி, கிழக்கு போலீஸில் புகார் அளித்தார். அதில் தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மேயர் சண்.இராமநாதன், மாநகராட்சி கவுன்சிலர்கள் நீலகண்டன், அண்ணா.பிரகாஷ், இளஞரணி துணை அமைப்பாளர் வயலுார் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் ராஜா, மனோகர், சதீஷ், ராஜா சீனிவாசன், உள்ளிட்டோர் கூட்டத்தில் உள்ள மகளிரைப் பார்த்து இழிவுப்படுத்தும் விதமாகப் பேசி, அசிங்கமான செய்கை செய்ததாகக் கூறப்பட்டிருந்தது.

மேலும் நீலகண்டன், கார்த்தி உள்ளிட்டோர் சிலரைத் தாக்கியதாகவும் சொல்கிறார்கள்.

வயலூர் கார்த்தி
வயலூர் கார்த்தி

இப்புகாரின் அடிப்படையில் கிழக்கு போலீஸார் முதற்கட்டமாக நீலகண்டன், வயலுார் காரத்தி இருவர் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திமுக வட்டாரத்தில் இந்தக் கைது பரபரப்பை ஏற்படுத்தியது. நீலகண்டன், இதைப் பொய் வழக்கு என்றும் இதைச் சட்டரீதியாக எதிர் கொள்வோம் எனவும் கூறினார்.

பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது; ஒருவர் தலைமறைவு

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான, ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6ஆம் தேதி ரூ. 2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக பழனி அடிவார காவல் நிலையம் சார்பில் 4... மேலும் பார்க்க

"புதுக்கோட்டை, சிவகங்கையில் கோதாவரி-காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம்" - மோடிக்கு விஜய் கடிதம்

கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில் விஜய் எழுதியுள்ளதாவ... மேலும் பார்க்க

வேளாண் பட்ஜெட்: "பழைய பட்ஜெட் புத்தகத்தையே திருப்பி வாசித்திருக்கின்றனர்" - MRK பன்னீர்செல்வம்

இன்று தங்களுடைய முதல் வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது தவெக அரசு. இந்தப் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்புகளைச் சாடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்நாடு வேளாண் துறையின் முன்னாள் ... மேலும் பார்க்க

TASMAC: `ஆன்லைனில் பேமென்ட் தான் செய்ய முடியும்; கடைகளில் தான் டெலிவரி' - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ். அவர... மேலும் பார்க்க

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையில் யாருக்கு என்னென்ன துறைகள்?

புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணியுடன்2026தேர்தலில் வெற்றிபெற்ற ரங்கசாமி,மே மாதம்13-ம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார். அன்றைய தினம் அவருடன் இரண்டு அமைச்சர்களும்,ஜூன்17-ம் தேதி மூன்று அமைச்சர்களும் பதவிய... மேலும் பார்க்க

ஆடிக்கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்த சேகர் பாபு - தடுத்து நிறுத்திய போலீஸ்

ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவையொட்டி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வந... மேலும் பார்க்க