செய்திகள் :

ஈரோடு: அரசுப் பள்ளியில் அறுந்து கிடந்த மின்கம்பி; துடிதுடிக்க உயிரிழந்த 6- ம் வகுப்பு மாணவன்!

post image

ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள குப்பிச்சிபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளியில் யோகேஷ் என்கிற 11 வயது மாணவர் 6 - ம் வகுப்பு பயின்று வந்திருக்கிறார். இன்று மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி வளாகத்திற்குள் வழக்கம்போல் நடந்து சென்றிருக்கிறார். எதிர்பாராத விதமாக பள்ளி வளாகத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை, தெரியாமல் மிதித்திருக்கிறார்.

மரணம்

யோகேஷ் உடல் மீது மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். மாணவனின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகம் மற்றும் மின்வாரியத்தின் அலட்சியம்தான் காரணம் எனக் கூறி மாணவனின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுப்பள்ளி வளாகத்திற்குள் அறுந்து கிடந்த மின்கம்பி 6- ம் வகுப்பு மாணவனின் உயிரை காவு வாங்கியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கெத்தை மலைப்பாதையில் கவிழ்ந்த கார்- நிகழ்விடத்திலேயே பறிபோன 3 உயிர்கள்!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள குந்தா பகுதியைச் சேர்ந்தவர்கள் ராதிகா, ராஜ் கண்ணன், போஜன் ஆகியோர். கோவை மாவட்டம் மத்தம்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். உறவினரின் துக்க நிகழ்வு ஒன்றில் பங்கேற... மேலும் பார்க்க

குடிநீர்க் குழாய் சரிசெய்ய சென்றவர் புலிக்கு இரையான சோகம்; கை, கால்கள் தனித்தனியாக கிடந்த அதிர்ச்சி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள ஓவேலி லாரஸ்டன் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி பாலகிருஷ்ணன். வீட்டின் அருகில் உள்ள குடிநீர்க் குழாயில் தண்ணீர் வராத காரணத்தால் அதனைச் சீரமைப்பதற்காக தனியார் காபி தோ... மேலும் பார்க்க

மைதானத்தில் திடீரென தாக்கிய மின்னல்; சுருண்டு விழுந்த வீரர் மரணம்... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

தாய்லாந்தில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின்போது நடந்த துயர சம்பவம் உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்... மேலும் பார்க்க

தஞ்சை: வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது காஸ் வெடித்த விபத்து - 3 பேர் உயிரிழப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள சின்னஅம்மன்குடி, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையன் (51) விவசாயி. இவரது மனைவி செல்வி (41) இவர்களது மகள் அபிநயா 10ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டி... மேலும் பார்க்க

மழை வெள்ளத்தில் சென்ற கார்: மரத்தை பிடித்து உயிர் தப்பிய கணவர், இழுத்துச்செல்லப்பட்ட மனைவி, மகள்கள்

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. அஹில்யாநகர் மாவட்டத்தின் லோனி என்ற இடத்திற்கு அவினாஷ் என்பவர் தனது மனைவி ... மேலும் பார்க்க

மும்பை: 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; 9 பேர் உள்ளே சிக்கி உயிரிழந்த சோகம்!

மும்பை அருகில் உள்ள பீவாண்டி என்ற இடத்தில் 4 மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. ஏற்கெனவே பீவாண்டி மாநகராட்சியால் ஆபாயகரமான கட்டடம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் ... மேலும் பார்க்க