செய்திகள் :

ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசை கூட்டம்; பூட்டிக் கிடந்த கழிப்பறைகள்; அவதிக்குள்ளான பக்தர்கள்

post image

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கல்யாண திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினந்தோறும் ஶ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலாவுடன் முக்கிய நாட்களில் அமாவாசை, தேரோட்டம், மாலை மாற்றும் தபசு திருவிழாவுடன் 16-ம் தேதி சுவாமி - அம்பாள் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இதையொட்டி நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

அக்னி தீர்த்ததில் நீராடிய பக்தர்கள்
அக்னி தீர்த்ததில் நீராடிய பக்தர்கள்

இந்நிலையில் நாடு முழுவதும் இன்று ஆடி அமாவாசை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நீர் நிலைகளில் நீராடி மறைந்த முன்னோர்கள் நினைவாக சிறப்புப் பூஜைகள் நடத்துவது இந்துக்களின் வழக்கம்.

ஆடி அமாவாசை தினத்தில் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னிதீர்த்தம் மற்றும் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்ய ஒரு லட்சத்திற்கும் மேலான யாத்திரைவாசிகள் வந்திருந்தனர்.

தீர்த்தமாடி முன்னோர்களுக்குத் திதி கொடுப்பதற்காக நேற்று மாலை முதலே யாத்திரீகர்கள் ராமேஸ்வரம் வரத் துவங்கினர். இதற்கென மாநிலம் முழுவதிலும் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தர்ப்பணம் கொடுத்த யாத்திரைவாசிகள்
தர்ப்பணம் கொடுத்த யாத்திரைவாசிகள்

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் அக்னிதீர்த்த கடற்கரையில் நீராட பக்தர்கள் குவிந்தனர். அவ்வாறு திரண்ட பக்தர்கள் தங்களின் அத்தியாவசிய தேவையான காலை கடன்களை முடிக்க கோயில் நிர்வாகத்தினால் கட்டப்பட்ட மற்றும் நகராட்சி கழிப்பறைகளைத் தேடி சென்றனர்.

ஆனால் அந்தக் கழிப்பறைகள் திறக்கப்படாமல் பூட்டப்பட்டு கிடந்ததால் யாத்திரைவாசிகள் சிரமத்திற்குள்ளாகினர். இதனால் தனியார் கழிப்பறைகளை  நாடி சென்றதுடன், திறந்த வெளிகளையும் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

தேவஸ்தானம் மற்றும் நகராட்சி கழிப்றைகளில் தண்ணீர் இல்லாததால் மூடப்பட்டிருந்ததாகக் காரணம் கூறப்பட்டது. இதனால் பெண்கள், குழந்தைகளுடன் யாத்திரைவாசிகள் கழிப்பிடங்களைத் தேடி அலைந்தனர்.

`சட்டமன்றத்தில் அதிமுகவை விழுங்க நினைக்கும் தவெக?' - எடுபடுமா விஜய்யின் மாஸ்டர் ப்ளான்?

தவெகவுக்கு கைகொடுக்குமா?மாஸ்டர் ப்ளான்தேர்தலுக்கு முன்பாக பொதுக்கூட்ட மேடைகளிலும் பிரசாரங்களிலும் அதிமுகவை விமர்சிக்காமல், அதிமுகவின் அடையாளமாக திகழும் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசிக் க... மேலும் பார்க்க

அமளி ஒருபக்கம், ஆனாலும் நிறைவேறும் மசோதாக்கள் - நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேறும் மசோதாக்கள்!

ஜூலை 20-ம் தேதி தொடங்கி, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளையோடு (ஆகஸ்ட் 13) முடிவடைகிறது. 25 நாள்கள் கொண்ட இந்தக் கூட்டத்தொடரில் விடுமுறைகள் போக, 19 நாள்கள் அவை கூடியது... கூடுகிறது. நீட் வ... மேலும் பார்க்க

கோவை அருகே கொசு மருந்து அடித்ததால் இருவர் உயிரிழந்ததாக புகார் – நடந்தது என்ன?

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சி ஏழாவது வார்டுக்கு உட்பட்ட உப்புத்தோட்டம் பகுதியில் அடுத்தடுத்து 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நேற்று காலை அப்பகுதியில் கொசு மருந்து அடிக்க... மேலும் பார்க்க

‘மதத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளலாமா? அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்’ – வானதி காட்டம்

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், “தமிழ் படித்தவர்களுக்கு 'அன்பின் மொழி, அமைதியின் மொழி, இரக்கத்தின் மொழி' தெரியாது என்ற அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ்நாடு சட்டமன்ற... மேலும் பார்க்க

``ரஷ்யாவில் விரைவில் தேர்தல்; புதின் போடும் போர் பிளான் இது" - என்ன சொல்கிறார் ஜெலன்ஸ்கி?

ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. அடுத்த மாதத்தில் ரஷ்யாவில் தேர்தல் வேறு வர இருக்கிறது. இந்தப் போரை வைத்து உள்நாட்டில் ரஷ்ய அதிபர் ட்ரம்ப் 'கேம்' ஆடுவதாக தனது எக்ஸ் பக்கத்தில் சாடி... மேலும் பார்க்க