செய்திகள் :

மும்பை நிலச்சரிவு: பாறை உருண்டு வீடுகளில் விழுந்ததால் 5 பேர் பலி; நள்ளிரவில் என்ன நடந்தது?

post image

மும்பை காட்கோபரில் உள்ள சிராக் நகரில் கெளஷியா சால் பகுதியில் இன்று அதிகாலையில் மலைப்பகுதியிலிருந்து மிகப்பெரிய கல் ஒன்று உருண்டு வந்து கீழே இருந்த 3 வீட்டில் விழுந்தது.

இதனால் வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது வீடு இடிந்து விழுந்து உள்ளே சிக்கிக்கொண்டனர். இது குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்து விரைந்து வந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.

இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் சிக்கிக்கொண்டுள்ளனர். சம்பவ இடத்தை மாநகராட்சி மேயர் ரிது தாவ்டேயும், மாநகராட்சி அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டனர்.

இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று மேயர் அறிவித்துள்ளார். இடிபாடுகளில் இன்னும் 3 முதல் 4 பேர் சிக்கி இருக்கவேண்டும் என்று மாநகராட்சி துணை கமிஷனர் அவினாஷ் தெரிவித்தார்.

இடிபாடுகள்
இடிபாடுகள்

இடிபாடுகளுக்கு அடியில் யாராவது உயிரோடு இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய, பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் கேமராக்களைப் பயன்படுத்தி, தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

இது குறித்து பேசிய மும்பை போலீஸ் துணை கமிஷனர் கணேஷ் ஷிண்டே, "மழையின் காரணமாக, காட்கோபர் அசோக்நகர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 2 உடல்கள் மீட்கப்பட்டு, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவசரகால மீட்புக் குழுக்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நேரத்தில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்து சரியான எண்ணிக்கையை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், இடிபாடுகளுக்குள் இன்னும் 3 முதல் 4 பேர் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது" என்றார்.

இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விமானத்திற்குள் கஞ்சா புகைத்த பைலட்; கீழ்நோக்கி பறந்த விமானத்திற்குள் மிதந்த பயணிகள்; நடந்தது என்ன?

கடந்த சில நாள்களுக்கு முன்பு புக்கெட் என்ற இடத்திலிருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் திடீரென 300 அடி உயரம் குறைந்தது. இதனால் விமானம் ஆடியதில் அதில் பயணம் செய்த 137 பயணிகளில் ... மேலும் பார்க்க

அரசுப்பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி பலி: `இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது' - HM சஸ்பெண்டு

ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், அறுந்து கிடந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் 6-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் யோகேஷ் துடிதுடிக்க பரித... மேலும் பார்க்க

ஈரோடு: அரசுப் பள்ளியில் அறுந்து கிடந்த மின்கம்பி; துடிதுடிக்க உயிரிழந்த 6- ம் வகுப்பு மாணவன்!

ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள குப்பிச்சிபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளியில் யோகேஷ் என்கிற 11 வயது மாணவர் 6 - ம் வகுப்பு பயின... மேலும் பார்க்க

கெத்தை மலைப்பாதையில் கவிழ்ந்த கார்- நிகழ்விடத்திலேயே பறிபோன 3 உயிர்கள்!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள குந்தா பகுதியைச் சேர்ந்தவர்கள் ராதிகா, ராஜ் கண்ணன், போஜன் ஆகியோர். கோவை மாவட்டம் மத்தம்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். உறவினரின் துக்க நிகழ்வு ஒன்றில் பங்கேற... மேலும் பார்க்க

குடிநீர்க் குழாய் சரிசெய்ய சென்றவர் புலிக்கு இரையான சோகம்; கை, கால்கள் தனித்தனியாக கிடந்த அதிர்ச்சி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள ஓவேலி லாரஸ்டன் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி பாலகிருஷ்ணன். வீட்டின் அருகில் உள்ள குடிநீர்க் குழாயில் தண்ணீர் வராத காரணத்தால் அதனைச் சீரமைப்பதற்காக தனியார் காபி தோ... மேலும் பார்க்க

மைதானத்தில் திடீரென தாக்கிய மின்னல்; சுருண்டு விழுந்த வீரர் மரணம்... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

தாய்லாந்தில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின்போது நடந்த துயர சம்பவம் உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்... மேலும் பார்க்க