செய்திகள் :

`புதுச்சேரி காவல்துறை என் குடும்பத்தினரை மிரட்டுகிறது!’ – CJP சௌரவ் தாஸ் குற்றச்சாட்டு

post image

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார். அதில், ``இரண்டு மணி நேரத்திற்கு முன்பு புதுச்சேரி போலீஸார் எனது குடும்பத்தினர் வசிக்கும் வீட்டிற்குச் சென்று, பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர்.

ஏன் அந்தத் தொந்தரவு? அதற்கு உத்தரவிட்டது யார்? எதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது? அது சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டதா ? புதுச்சேரியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க என்னுடைய குடும்பத்தினரை மிரட்டுகிறது. மத்திய பா.ஜ.க அரசின் தூண்டுதலாலேயே, புதுச்சேரி பா.ஜ.க இதை அரங்கேற்றுகிறது.

cjp protest in delhi
cjp protest in delhi | file photo

அது புதுச்சேரி அரசின் குணாதிசயமாக இருக்க முடியாது. மத்திய அரசின் தூண்டுதலின் பேரிலேயே அது நடைபெறுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் அமித்ஷா புதுச்சேரிக்கு சென்றிருந்தார். அப்போது அவர் புதுச்சேரி உள்துறை அமைச்சரையும், துணைநிலை ஆளுநரையும் சந்தித்தார்.

அப்படி என்றால் அந்த சந்திப்புக்கும், எனது குடும்பத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கும் தொடர்பிருக்கிறதா? இப்போது புதுச்சேரி ஆளுநரான கைலாஷ்நாதன், குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்த காலகட்டத்தில் அவருடைய கண்கள் மற்றும் காதுகளாக இருந்தவர்.

அமித்ஷா மற்றும் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பின்போதே என்னை அச்சுறுத்தும் நடவடிக்கை குறித்து திட்டமிடப்பட்டதா? என்னை அச்சுறுத்தி மௌனமாக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால், அது ஒருபோதும் பலனளிக்காது.

என்னை மிரட்டி அமைதியாக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால், அது என்னை ஒருபோதும் அச்சப்படுத்தாது. மாறாக, இது சிறந்த நிர்வாக அமைப்பை உருவாக்குவதற்கான எங்களது உறுதியை மேலும் வலுப்படுத்தும்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் கைலாஷ்நாதன்

காவல்துறை சட்டத்தை நிலைநாட்டும் அமைப்பாக செயல்பட வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் செயல்படுவதற்குப் பதிலாக ரவுடிகளைப் போன்று செயல்படக் கூடாது" என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து புதுச்சேரி காவல்துறை, அவருக்கு விளக்கம் அளித்திருக்கிறது.

அதில், `சுதந்திர தினத்தை முன்னிட்டு விஐபி-க்கள் வருகை தரும் பகுதிகளில் உள்ள வீடுகளில் வழக்கமான பாதுகாப்பு விசாரணை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யாரையும் அவர்கள் வீட்டிற்குள் சென்று போலீஸார் விசாரணை செய்யவில்லை. பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அப்பகுதியில் வசிப்பவர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அதை அச்சுறுத்தல் என்று கூறுவது தவறானது' என்று குறிப்பிட்டிருக்கிறது.

"அம்மாவின் வழியில் தொடர்ந்து மக்களுடன் நிற்பேன்" - அதிமுகவிலிருந்து விலகிய அப்சரா ரெட்டி

கனத்த உணர்வுடன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான அப்சரா ரெட்டிஅறிவித்திருக்கிறார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக-வில் இருந்த... மேலும் பார்க்க

CJP: ``'ஜந்தர் மந்தர் சீசன் 2' மிக விரைவில்..." - அபிஜித் தீப்கே பேட்டி

ஜந்தர் மந்தர் சீசன் 2 விரைவில் தொடங்கக்கூடும் என காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்திருக்கிறார்.கடந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய பெரிய அளவிலான போராட்டம் அரச... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: ``மோடியும், அமித்ஷாவும், RSS அமைப்பும் போடும் கணக்கு" - அமைச்சர் விஸ்வநாதன்

தொகுதி மறுவரையறைத் திட்டத்தின் ஆபத்தை மக்களுக்கு எடுத்துரைக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நேற்று (12-ம் தேதி) வடசென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் பேரணி நடத்தப்பட்டது. அந்தப... மேலும் பார்க்க

"தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது"- நயினார் நாகேந்திரன்

அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் விஜய் கொண்டுவந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டம... மேலும் பார்க்க