செய்திகள் :

'கிராம மயானத்தை வேறு உள்ளாட்சியைச் சேர்ந்தவர்கள் உரிமை கோர முடியாது' - உயர்நீதிமன்றம் உத்தரவு

post image

தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த அன்பழகன், தவராஜா, ரகுநாதன் ஆகியோர், மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

அதில். “எங்கள் கிராமத்தில் இறந்து போனவர்களின் உடல்களை சுக்குவாடன்பட்டி மயானத்தில் தகனம் செய்து வந்தோம். இப்போது அந்தக் கிராமத்தினர் எங்கள் கிராம உடல்களை எரிக்க அனுமதிக்க மறுக்கின்றனர். இதுகுறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகிய நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த வழக்கின் மனுதாரர்கள் பொம்மையகவுண்டன்பட்டி கிராமம், தேனி அல்லிநகரம் நகராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது. பொம்மையகவுண்டன்பட்டி அருகிலேயே சுக்குவாடன் பட்டி அமைந்துள்ளதால் அந்தக் கிராமத்தின் மயானத்தைப் பயன்படுத்துவது வசதியாக இருக்கும் என்று மனுதாரர்கள் கூறுகின்றனர்.

இதனை சுக்குவாடன் பட்டி கிராம மக்கள் எதிர்க்கின்றனர். சுக்குவாடன்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து நிலம் ஒன்றை வாங்கி மயானம் அமைத்து அதை தங்களுடைய ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து உள்ளனர்.

உடல் தகனம்
உடல் தகனம்

தற்போது அது ஊஞ்சாம்பட்டி ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த மயானத்தை பொம்மையகவுண்டன்பட்டி கிராம மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று உரிமை கோர முடியுமா என்பதுதான் கேள்வி

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒருவர் உயிருடன் இருக்கும்போது எவ்வாறு நடத்தப்படுகிறாரோ, அவர் இறந்தபின் அவரது உடலையும் அதே போல நடத்த வேண்டும். ஆனால் ஒரு உள்ளாட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான மயானத்தை மற்றொரு உள்ளாட்சியினர் பயன்படுத்த சட்டத்தில் இடம் இல்லை.

தேனி அல்லிநகரம் நகராட்சியில் எரிவாயு மூலம் இயங்கும் மயானம் உள்ளது. பொம்மையகவுண்டன்பட்டியினர், நகராட்சி மயானத்தை மட்டுமே பயன்படுத்த சட்டப்படி உரிமை உள்ளது. வேறொரு உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், அந்த ஊராட்சியில் வசிக்காத ஒருவர் சடலத்தைப் புதைக்கவோ அல்லது தகனம் செய்யவோ உரிமையுள்ளது என்பதற்கு எந்தச் சட்டப்பூர்வமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை.

நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவு

எனவே ஒரு உள்ளாட்சி அமைப்பின் எல்லைக்குள் வசிப்பவர்கள் மற்றொரு உள்ளாட்சி அமைப்பின் கட்டுபாட்டில் உள்ள மயானத்தில் உடல்களை அடக்கம் செய்வதோ, தகனம் செய்யவோ முடியாது. அதன் அடிப்படையில் மனுதாரர்கள் சுக்குவாடன்பட்டி கிராமத்தின் மயானத்தைப் பயன்படுத்துவதற்கு உரிமை கோர முடியாது.

இந்த உத்தரவு இரு கிராமங்களுக்கும் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வரும் என நம்புகிறோம்" எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்: `புதிய அரசின் நிலைப்பாடு என்ன?' - உச்ச நீதிமன்றம் | விசாரணை முழு விவரம்

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி குமாரி மகா சபா என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்து சென்னை உயர் நீதிமன்றம், ஒவ்வொரு மாவட்டத்... மேலும் பார்க்க

எ.வ.வேலு விவகாரம் : `நீங்க ஆளுங்கட்சியாக இருந்தபோதும் இதை தானே.!' - நீதிபதிகள் சுவாரஸ்ய கமெண்ட்

தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 5,000 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகளை மேம்படுத்தும் பணிகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில்,... மேலும் பார்க்க

தமிழகப் பசு வதைத் தடை விவகாரம் – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

தமிழகத்தில் பெரும் அரசியல் மற்றும் சமூக விவாதங்களை ஏற்படுத்தியிருந்த பசு வதைத் தடை விவகாரத்தில், தற்பொழுது உச்ச நீதிமன்றம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நா... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தில் அநாகரிக நடத்தை : நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசியெறிந்த மனுதாரர்! - நடந்தது என்ன?

இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மனுதாரர் ஒருவர் நீதிபதிகள் அமர்வை நோக்கி ஆவணங்களை வீசி எறிந்த விபரீதச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ காவல்துறை அதிகாரிக்கு எதிராக ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி: `ஆட்சியை கவிழ்க்க சதி; ஹவாலா பணம்' - அனல் பறக்கும் வாதம் | முன்ஜாமீன் கிடைக்குமா?

தமிழக வெற்றிக் கழக (TVK) எம்.எல்.ஏ இளையராஜா என்பவருக்கு 35 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: காதலிக்கச் சொல்லி வற்புறுத்திய சமையல்காரர்; கைது செய்த சிங்கப்பெண் அதிரடிப்படை

தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். சமையல் மாஸ்டராக வேலை செய்து வரும் இவருக்குத் திருமணமாகி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுத் தனியாக ... மேலும் பார்க்க