செய்திகள் :

Gold: இப்போது குறையும் தங்கம் விலை; இதற்கான 3 காரணங்கள் என்னென்ன?

post image

தங்கம் விலை தற்போது மீண்டும் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,000 டாலருக்குக் கீழ் இறங்கியுள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,100-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,04,800-க்கும் விற்பனை ஆகி வருகிறது.

தங்கம் விலை இறக்கத்திற்கான காரணங்கள்...

> ஈரான் போர் மீண்டும் தொடங்கியுள்ளது. ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், கச்சா எண்ணெயின் விலை ஏறுமுகத்தில் உள்ளது.

தங்கம்
தங்கம்

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து கச்சா எண்ணெய் விலை ஏறும்போதெல்லாம், தங்கம் விலை குறைந்தது. கச்சா எண்ணெய் விலை குறையும் போது, தங்கம் விலை ஏறியது.

அதே பேட்டர்ன் தான் தற்போதும் தொடர்கிறது.

ஈரான் போர் தொடங்கி கச்சா எண்ணெய் விலை ஏறுமுகமாக செல்லும் போது, தங்கம் விலை குறைந்துவிட்டது.

> ஈரான் போர் காரணமாக அனைவருக்கும் பணவீக்கம் மீதான கவலைகள் அதிகரித்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான தங்களது முதலீடுகளை குறைத்து வருகின்றனர். பணவீக்கத்தை ஈடுசெய்யும் விதமான முதலீடுகளுக்கு முதலீட்டாளர்கள் மடைமாறி வருகின்றனர்.

> தற்போதைய சூழலில், மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. தங்கத்தின் மூலம் வட்டி வருமானம் எதுவும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இதனால், எது வட்டிக் கொடுக்குமோ, அதை தான் முதலீட்டாளர்கள் விரும்புவார்கள்.

இந்தக் காரணங்களால் தான் தங்கம் விலை குறைந்து வருகிறது.

MCX Trading-ல் தங்கத்தை வாங்குவதா, விற்பதா - நீங்கள் முடிவு செய்வது எப்படி?

தங்கத்தை நகையாக வாங்காமல், டிரேட் செய்யுங்கள்... எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்யுங்கள் என்பது பொருளாதார நிபுணர்களின் அட்வைஸாக இருக்கிறது. தங்கம் டிரேடில் ஒரு வகை தான் - MCX தங்கம் வர்த்தகம். ஆனால், அதை ச... மேலும் பார்க்க

தங்கம் விலை Normal ஆக இருக்கிறதா, Over valued ஆக இருக்கிறதா? - நீங்களே கணக்கு போட்டு பார்க்கலாம்!

கடந்த ஆண்டு தங்கம், வெள்ளி விலை பீக்கில் இருந்தது. இப்போது சரிவில் இருக்கிறது. இப்படி தங்கம், வெள்ளி விலை ஏறும் போதும், இறங்கும் போதும், தங்கம் சரியான மதிப்பு உடன்தான் வர்த்தகமாகிறதா என்று எப்போதாவது ... மேலும் பார்க்க

Gold: தங்கம், வெள்ளியில் இப்போது சூப்பர் நேரம்! முதலீட்டாளர்களே இப்போ நீங்க என்ன செய்யணும்?

கச்சா எண்ணெய் விலை ஏறினால், தங்கம், வெள்ளி விலை குறைகிறது... கச்சா எண்ணெய் விலை சரிந்தால், தங்கம், வெள்ளி விலை ஏறுகிறது - ஈரான் போர் தொடங்கியதில் இருந்து சர்வதேச சந்தையின் பேட்டர்ன் இதுதான். இப்போதும்... மேலும் பார்க்க

Gold: மூன்று நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,800; காத்திருக்கிறது சூப்பர் வாய்ப்பு! - எப்படி?

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 3,000 டாலருக்குக் கீழ் சென்றுகொண்டிருந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் 4,100 டாலர்களைத் தாண்டி உள்ளது. இதனால், தற்போது இந்திய சந்தையிலும் தங்கம் விலை ஏறியுள்ளது. சென்... மேலும் பார்க்க

Gold: தங்கம் விலை ஏன் தொடர்ந்து சரிகிறது? - இப்போது ETF-களை விற்றுவிடலாமா?

தங்கம் விலை தற்போது நல்ல வீழ்ச்சியில் உள்ளது.இன்று சென்னையில் தங்கம் (22K) விலை ஒரு கிராமுக்கு ரூ.13,100 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.1,04,800 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது.இந்தியாவில் இந்த வீழ்ச்சிக்கு கார... மேலும் பார்க்க

ஈரோடு: ஷாஷ் ஜுவல்லரியின் ‘மங்கள கீர்த்தி’ நகை கண்காட்சி; ஆர்வம் காட்டிய வாடிக்கையாளர்கள் | Photos

ஈரோடு நகை கண்காட்சிஈரோடு நகை கண்காட்சிஈரோடு நகை கண்காட்சிஈரோடு நகை கண்காட்சிஈரோடு நகை கண்காட்சிஈரோடு நகை கண்காட்சிஈரோடு நகை கண்காட்சிஈரோடு நகை கண்காட்சிஈரோடு நகை கண்காட்சிஈரோடு நகை கண்காட்சிஈரோடு நகை ... மேலும் பார்க்க