செய்திகள் :

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது.

'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்கிறது. அதில் அணுமின் நிலையத்தின் சில வரைபடங்கள், விநியோகஸ்தர்களின் விவரங்கள், ஆய்வுப் பதிவுகள், உபகரணங்களின் மதிப்பாய்வுகள் போன்றவை இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையம்
கூடங்குளம் அணுமின் நிலையம்

அணுமின் நிலையத்தின் ஆவணங்கள் கசிந்ததற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரும் இதற்கு கண்டனம் தெரிவித்து பிரதமருக்கு கடிதமும் எழுதியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ரகசிய வரைபடங்கள் மற்றும் ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Reliance நிறுவனத்தின் தரவு மையத்தில் சேமிக்கப்பட்டிருந்த ஆவணங்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் இந்த விவகாரம், நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது.

இது போன்ற முக்கியப் பொறுப்புகளை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் போது பாதுகாப்பு பலவீனமடைவதைக் காட்டும் மற்றொரு நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

​நமது நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், இந்தத் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து பிரதமர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு அவசர நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளேன்.

நாட்டின் உயரிய சைபர் பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் (NSCS) மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) ஆகியோர் இந்தத் தீவிரப் பாதுகாப்பு குறைபாட்டிற்கு உரியப் பொறுப்பேற்று, துரித விசாரணை நடத்த வேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன்!" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க

'நித்யானந்தாவின் கைலாசாவோடு தவெக அரசு ராஜாங்கரீதியான உறவா?' - விவரம் என்ன?

நிநித்யானந்தாவின் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் தவெக அரசின் அமைச்சர்களை சந்தித்து ராஜாங்கரீதியான உறவுகள் குறித்து விவாதித்ததாக நித்யானந்தா ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.நித்யானந்தாஇ... மேலும் பார்க்க

திருவான்மியூர் – உத்தண்டி ECR உயர்மட்ட சாலை திட்டம்: செலவை குறைக்க தொழில்நுட்ப குழு அமைக்க முடிவு!

சென்னை: சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) திட்டமிடப்பட்டுள்ள திருவான்மியூர்–உத்தண்டி உயர்மட்ட சாலை (Elevated Corridor) திட்டத்தின் செலவினை குறைக்கும் நோக்கில் தொழில்நுட்ப குழு அமைக்க தமிழ்நா... மேலும் பார்க்க

``அமெரிக்கா தேர்தலில் சீனா தலையிட்டிருக்கிறது" - ரகசிய ஆவணத்தை வெளியிட்ட அதிபர் ட்ரம்ப்

அமெரிக்கத் தேர்தல் பாதுகாப்பு விவகாரங்களில் சீனாவின் தலையீடு இருப்பதாகக் கூறி, அதிபர் ட்ரம்ப் சில உளவுத்துறை ஆவணங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் சீனா எந்தவொ... மேலும் பார்க்க

"ரெண்டு சீட் வெச்சிக்கிட்டு இவ்ளோ ஆட்டமானு கேட்குறாங்க, ஆனா..!” - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுகவை மறைமுகமாக சாடியிருக்கிறார். " 'இரண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு இவ்வளவு ஆட்டமானு கேக்குறாங்க'... மேலும் பார்க்க