செய்திகள் :

Shakila: 'பல மணிநேரம் ரீல்ஸ் பார்ப்பேன்' - கழுத்தில் அறுவை சிகிச்சை ஏன்? ஷகீலா விளக்கம்

post image

நடிகை ஷகீலாவுக்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்த நிலையில் அவருக்கு என்ன ஆயிற்று என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

அதற்கு ஷகீலாவே தனது யூடியூப் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார். வீடியோவில் பேசியிருக்கும் அவர், “ஒரே இடத்தில் படுத்துக்கொண்டே தொடர்ந்து நான்கு மணி நேரம் வரை என் மொபைலில் கேம் விளையாடுவேன்.

ஷகீலா
ஷகீலா

டீ குடிக்க வேண்டும் என்றால் மட்டுமே எழுந்திருப்பேன். டீ குடித்துவிட்டு மீண்டும் வந்து அதே கேம் விளையாடுவேன். கேம் மட்டுமல்ல யூடியூப், இன்ஸ்டாகிராமில் பல மணிநேரம் ரீல்ஸ் பார்ப்பேன்.

இப்படி மொபைல் போனை அதிகமாகப் பயன்படுத்தியதன் காரணமாக என் கழுத்தில் உள்ள முக்கிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு இப்போது அது அறுவை சிகிச்சை வரை வந்துவிட்டது. இது எனக்கு தேவையில்லாத செலவு.

செலவு என்பதை விட வலி மற்றும் வேதனையாக இருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். குழந்தைகள் கையில் மொபையில் கொடுப்பதை நிறுத்துங்கள். அதேபோல நீங்களும் எந்த அளவிற்கு மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியுமோ அந்த அளவிற்குத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

ஷகீலா
ஷகீலா

எனக்கு இப்போது இந்தச் சிகிச்சைக்காக மட்டும் 3 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது. அதனால் ஃபோனை தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தாதீர்கள். உடம்பைப் பார்த்துகொள்ளுங்கள்” என்று ஷகீலா அறிவுறுத்திருக்கிறார்.

`கயல் சீரியலில் இனி சஞ்சீவ் வரமாட்டாரா?' - ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?

கயல் சீரியலில் இருந்து ஹீரோ சஞ்சீவ் வெளியேறி விட்டதாகத் தெரிய வருகிறது. கதைப்படி சீரியலில் அவர் கோமா நிலையிலிருப்பதாகக் காட்டப்பட்டாலும், இனி அவர் சீரியலில் தொடர வாய்ப்பில்லை என்றே கூறுகிறார்கள் சீரிய... மேலும் பார்க்க

Bigg Boss: "எனக்குக் கிடைத்த அந்த ஆழமான அன்பை..." - பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி பற்றி ஓவியா

பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி வருகிற 16-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டிருந்தார்கள். இந்த காமன் மேன் நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் பலரும் கலந்... மேலும் பார்க்க

`சொந்த மருமகளை கூட வாய் நிறைய அப்படி கூப்பிட்டாரா தெரியல‌..' - மறைந்த ஜெயமணி குறித்து நடிகை அபிதா

திருமதி செல்வம், மெட்டி ஒலி, சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகர் ஜெயமணி நேற்று சென்னையில் காலமானார். சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் வந்து இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு இன்று மாலை அவ... மேலும் பார்க்க

"'மெட்டி ஒலி 2' சீக்கிரமே நடக்க வாய்ப்பு இருக்கு!" - விஷ்வா கம்பேக் பேட்டி | Samanthi

'மெட்டி ஒலி' சீரியல் மூலம் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் விஷ்வா. சீரியலில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தவர், தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவரும் 'சாமந்தி' சீரியல் மூலம் கம்பேக் கொடுத்திரு... மேலும் பார்க்க

`டி.ஆர்.பி ரேட்டிங் இனி கிடையாதா?' - சீரியல் ஆடியன்ஸ் கணக்கீட்டில் என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?

டி.ஆர்.பி ரேட்டிங் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? டிவியில் எந்த சீரியலை அதிகம் பேர் பார்க்கின்றனர், எந்த மொழியில் எந்த சேனலை அதிக மக்கள் பார்க்கின்றனர் என்பன போன்ற விபரங்களைத் தரும் டெலிவிஷன் ரேட்டிங் பா... மேலும் பார்க்க

Sreekumar: "ட்ரோல்ஸ் விஷயங்களுக்கு நான் என் ஹஸ்பண்ட்கிட்ட சொல்றது..." - ஷமிதா ஷேரிங்ஸ்

சின்னத்திரையில் 'சிவசக்தி', 'மௌன ராகம்', 'பேரன்பு' எனப் பல்வேறு வெற்றித் தொடர்கள் மூலம் குடும்பங்களுக்கு பேவரிட்டானவர் நடிகை ஷமிதா. தற்போது இவர் மீண்டும் வில்லியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சாமந்த... மேலும் பார்க்க