செய்திகள் :

'ஷாநவாஸை நீக்குக' - திருமாவை அழுத்தும் சிறுத்தைகள் டு ஜெகதீஸை தூண்டிவிடும் கும்பல் |கழுகார்

post image

த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க பங்கேற்றிருக்கும் நிலையில், 'தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் மறைமுக ஆட்சி நடக்கிறது' எனப் பேசி வருகிறார், வி.சி.க-வின் முதன்மைச் செயலாளரான ஆளூர் ஷாநவாஸ். மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் நினைவு நாள் விழா பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறார். இதனால், வி.சி.க-வின் முன்னணி நிர்வாகிகள் பலரும், 'ஷாநவாஸை நீக்க வேண்டும்' என திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். 'அவரை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறாரே திருமா' என த.வெ.க தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன.

ஆளூர் ஷாநவாஸ்

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி நடக்கும் தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டுக்கு பிறகு, ஷாநவாஸ் விவகாரத்தில் ஒரு தீர்வு கிடைக்கும் என்கிறார்கள் வி.சி.க புள்ளிகள். 'திருமா அமைதியாக இருந்தாலும், மாநாட்டுக்கு பிறகு ஷாநவாஸ் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளார்' என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ஷாநவாஸ் வெளியேறிவிட்டால் அவர் வகிக்கும் முதன்மைச் செயலாளர் பொறுப்பை பெறுவதற்கு திருமாவை சுற்றிவர தொடங்கியிருக்கிறார்கள் முக்கிய புள்ளிகள்.

முதல்வரின் தனிச்செயலாளராகவும் த.வெ.க-வின் இணைப் பொருளாளராகவும் இருக்கிறார் ஜெகதீஷ். 'எவ்வளவு காலம்தான் முதல்வருக்கு துணையாகவே இருப்பீர்கள்... இளைஞரணியை வழிநடத்தும் பொறுப்பைக் கேளுங்கள். நீங்க கட்சியின் முக்கிய பொறுப்புக்கு வர வேண்டும்' என்று சிலர் அவரை தூண்டி விடுகிறார்களாம். இதற்கு முன்பாக, 'திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுங்கள்' என ஜெகதீஷை சிலர் தூண்டியபோது, 'முதல்வரோடு ஒட்டிக் கொண்டிருப்பது' என்று முடிவெடுத்தார் ஜெகதீஷ். இடைத்தேர்தல் போட்டியிலிருந்தும் விலகியிருந்தார்.

விஜய் - ஜெகதீஷ்

ஆனால், இப்போது தனித்த அரசியல் அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கும் வந்துவிட்டதாக சொல்கிறார்கள். 'இளைஞரணி பொறுப்பை அவர் ஏற்றால், அதற்கேற்ப தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும். முதல்வரை பார்ப்பதே அரிதாகிவிடும். முதல்வரிடமிருந்து ஜெகதீஷ் விலகிவிட்டால், அவர் இருக்கும் இடத்தில் அமர்ந்துக்கொள்ள ஒரு கும்பல் தயாராகிறது' என்கிறது விவரமறிந்த வட்டாரம். இவையெல்லாம் முதல்வரின் கவனத்துக்கு சென்றிருக்கும் நிலையில், நகர்வுகளை அமைதியாக கவனிக்கிறாராம் முதல்வர்.

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த அருண் மாற்றப்பட்ட நிலையில், வித்யா டி குல்கர்னி அந்த பொறுப்புக்கு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில், மத்திய அரசு பணியிலிருக்கும் ஆனந்த் குமார் சோமானியை நியமிக்க ஆட்சி மேலிடத்திலிருந்து க்ரீன் சிக்னல் கிடைத்திருக்கிறதாம். வித்யா டி குல்கர்னியை லஞ்ச ஒழிப்புத்துறையில் நியமிக்க, வெள்ளை மாளிகை உச்ச சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரி எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம். அவர்கள் இருவரும் சி.பி.ஐ-யில் பணியாற்றிய போது ஏற்பட்ட பணி மோதலே இந்த எதிர்ப்புக்கு காரணம் என்கிறார்கள்.

அதனால், வித்யா டி குல்கர்னியை பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி-யாக நியமித்துள்ளனர். அதேபோல, 'தி.மு.க-வுடன் நெருக்கமாக இருக்கும் உயர் அதிகாரிகள் யார்...' என லிஸ்ட்டையும் எடுக்கச் சொல்லியிருக்கிறதாம் ஆட்சி மேலிடம். 'உதயநிதி கைது' விவகாரம் சென்னை காக்கி வட்டாரத்துக்கு தெரியும் முன்பே தி.மு.க தரப்புக்கு தெரிந்திருக்கிறது. எனவே, தகவல் கசிவைத் தடுக்கும் விதமாக காவல் அதிகாரிகளை தூக்கியடிக்க திட்டமிடுகிறதாம் முதல்வர் அலுவலகம்.

திருத்தணி முருகன் கோயிலில், ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு குடிநீர் டேங்குகளை ஏற்பாடு செய்திருந்தனர் நகராட்சி அதிகாரிகள். அதில் ஓட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களில் முதல்வர் விஜய் படத்துடன், 'கலைஞர் 100' என்ற வாசகம் இடம்பெற்றிருந்ததால் கொதித்துவிட்டார்களாம் த.வெ.க புள்ளிகள். நகராட்சி அதிகாரிகளிடம் அந்த நிர்வாகிகள் கேள்வி எழுப்பியபோது உரிய பதிலை தர மறுத்திருக்கிறார்கள் அதிகாரிகள். அதைத் தொடர்ந்து, இந்த ஸ்டிக்கர் விவகாரம் மாவட்ட கலெக்டர் கவிதாவின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு, நகராட்சி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது.

'ஏற்கெனவே, திருத்தணி முருகன் கோயிலில் முடி, பிரசாத கடைகளுக்கான புதிய டெண்டர்களை தி.மு.க பினாமி புள்ளிகளுக்கு சாதகமாக்கியிருக்கிறார்கள் அதிகாரிகள். ஆளும்தரப்பினரை உஷ்ணமாக்கும் விதமாகவே அதிகாரிகள் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார்கள். தி.மு.க புள்ளிகளுடன் இணைந்து கொண்டு அதிகாரிகள் செயல்படுகிறார்கள்' என கொதிக்கிறார்கள் த.வெ.க-வினர். இந்தப் பிரச்னையால் திருத்தணி பகுதியிலுள்ள அதிகாரிகள் விரைவிலேயே ட்ரான்ஸ்பர் செய்யப்படலாம் என்கிறது ஆளுங்கட்சி வட்டாரம்.

த.வெ.க-வில் இணையும்போது முதல்வர் விஜய் முன்னிலைதான் இணைவேன் என தவம் கிடந்தனர் அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கரும் எம்.ஆர் விஜயபாஸ்கரும். ஆனால், முதல்வரின் அப்பாயின்மெண்ட் கிடைக்கவில்லை. கடைசியில், அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் முன்னிலையில் த.வெ.க-வில் இணைந்தனர். ஒருவாரம் கழித்துதான் முதல்வருடன் ஃபோட்டோ எடுத்துக்கொள்ளவே வாய்ப்பு வழங்கப்பட்டது.

சிங்கை ராமசந்திரன் - விஜய்

ஆனால், அ.தி.மு.க-வில் இருந்து விலகிய சிங்கை ராமசந்திரன் மட்டும் முதல்வரை சந்தித்து த.வெ.க-வில் இணைந்திருக்கிறார். இந்தளவுக்கு சிங்கைக்கு முக்கியத்துவம் கிடைப்பதற்குக் காரணம், முன்னாள் அமைச்சர் வேலுமணி என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இதைத்தொடர்ந்து, 'சிங்கை ராமசந்திரனை வேலுமணி அனுப்புகிறார் என்றால், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணையும் மனநிலைக்கு வந்துவிட்டாரா வேலுமணி...' என்ற கேள்வி அ.தி.மு.க முகாமில் வெடித்திருக்கிறது. சிங்கை ராமசந்திரனுக்கு மட்டும் கிடைத்த முக்கியத்துவத்தால், கடும் அப்செட்டாகிவிட்டனராம் த.வெ.க-வின் ஐக்கியமான அ.தி.மு.க சீனியர்கள்.

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026: ரூ.1 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து

‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ சென்னையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நோக்கில... மேலும் பார்க்க

FCRA மசோதா: மீண்டும் கையில் எடுத்த மத்திய அரசு! எதிர்ப்பு எழுவது ஏன்?

ஆகஸ்ட் 12 ஆம் நாள் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ளும் வகையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களையும் உள்ளடக்கிய 'கூட்டு நாடாளுமன்றக் குழுவிடம்' FCRA சோதாவை ஒப்படைப்பதற்கான தீர்மானத்தை உள்துறை இ... மேலும் பார்க்க

'சிங்கப்பூர் பயணத்துக்க அப்புறம்தான்..!' அவையில் பம்மும் எ.வ.வேலு; அதிருப்தியில் திமுக MLA க்கள்?

சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. செப்டம்பர் 8 வரை அவை நடக்கவிருக்கிறது. பட்ஜெட் மீதான விவாதம் முடிந்திருக்கும் நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் அக்கட்சியின் சீனியரும் கொறடாவுமான எ.வ.வ... மேலும் பார்க்க

₹ 1.5 லட்சம் லஞ்சமா? முதல்வர் முன் அழுத தேக்வாண்டோ மாணவி; பின்னர் வீடியோவில் வேறு விளக்கமா?

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் நடைபெற்ற மாணவர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற டேக்வாண்டோ (Taekwondo) வீராங்கனை ஒருவர், சர்வதேசப் போட்டியில் பங்கேற்க ரூ.1.5 ... மேலும் பார்க்க

"அம்மாவின் வழியில் தொடர்ந்து மக்களுடன் நிற்பேன்" - அதிமுகவிலிருந்து விலகிய அப்சரா ரெட்டி

கனத்த உணர்வுடன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான அப்சரா ரெட்டிஅறிவித்திருக்கிறார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக-வில் இருந்த... மேலும் பார்க்க

`புதுச்சேரி காவல்துறை என் குடும்பத்தினரை மிரட்டுகிறது!’ – CJP சௌரவ் தாஸ் குற்றச்சாட்டு

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார். அதில், ``இரண்டு மணி நேரத்திற்கு முன்பு புதுச்சேரி போலீஸார் எனது கு... மேலும் பார்க்க