செய்திகள் :

Vetri maaran: "அவர் என்னை நடிக்க வச்சது கொஞ்சம் வருத்தம்தான்" - வெற்றி மாறன்

post image

'பியார் பிரேமா காதல்', 'ஸ்டார்' போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் இளன் தற்போது நடிகராகக் களமிறங்குகிறார். அவர் இயக்கி நடித்திருக்கும் 'பியார் பிரேமா கல்யாணம்' படம் வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியாகிறது.

சான்வே மேக்னா, செந்தில், ராதிகா சரத்குமார் எனப் பலரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.

Vetrimaaran & Ilan
Vetrimaaran & Ilan

இந்த நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், "பொதுவாகவே நான் ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்றால் அதை மறந்துவிடுவேன். இந்த நிகழ்ச்சிக்கும் அதேபோலத்தான் மறந்துபோனேன், ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக மறந்தேன். நிகழ்ச்சி எப்போது என்று சரியாகத் தெரியவில்லை.

இளன் எனக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். அதைப் பார்த்துவிட்டேன், இடத்தையும் பார்த்துவிட்டேன். அதில் நேரம் 11:30 என்று போட்டிருந்தது. சரி என்று கிளம்பிவிட்டேன். இரண்டு நாள்களுக்கு முன்னாடியே கிளம்பிவிட்டேன்.

இளனுக்கு போன் செய்து, 'நான் வந்துகொண்டிருக்கிறேன், வரக் கொஞ்சம் லேட் ஆகும் போலிருக்கே' என்றேன். அதற்கு அவர், 'சார், எங்கே சார் இருக்கீங்க?' என்றார். அப்புறம்தான், 'இல்லை சார், நிகழ்ச்சி நாளை மறுநாள்தான்' என்று சொன்னார். 'சரி ஓகே, வருகிறேன்' என்று சொல்லிவிட்டேன்.

எனிவே, படக்குழுவினர் அனைவருக்கும், முக்கியமாக இளனுக்கும் என் வாழ்த்துகள். ஒரு இயக்குநராக இருந்துவிட்டு நடிகராக மாற நிறையத் தைரியம் வேண்டும். அந்தத் தைரியத்தோடு இந்தத் பயணத்தைத் தொடங்கியிருக்கிறீர்கள்.

உங்களுக்கும் முழு படக்குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். அவர்கள் குறிப்பிட்டிருந்தது போல இது 'ரோம்-காம்' படமா அல்லது 'மாம்-காம்' படமா என்று தெரியவில்லை, ஆனால் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. நிறையக் கொண்டாட்டமும், சில தனிப்பட்ட விஷயங்களும் இந்தப் படத்தில் இருக்கும் என்று நம்புகிறேன்.

இயக்குநர் வெற்றி மாறன்
இயக்குநர் வெற்றி மாறன்

இந்தப் படம் எல்லோருக்கும் பிடித்து வெற்றிபெற வாழ்த்துகள்" என்றவர், "எனக்கு இளன் மீது ஒரு பயங்கரமான கோபம் இருக்கிறது. என்னவென்றால், இயல்பாகவே எனக்கு திரையில் தோன்ற வேண்டும் என்றால் ரொம்பத் தயக்கமும், நிறைய சந்தேகங்களும் இருக்கும்.

ஆனால் அவர் பிடிவாதமாக, 'சார், உங்க ஆபீஸ் மாதிரியே செட் போட்டு ஷூட் பண்ணிட்டோம் சார். சும்மா ரெண்டே ரெண்டு ஷாட் மட்டும் வந்து நடிச்சு கொடுங்க' என்று சொல்லி, 'ஸ்டார்' படத்தில் என்னை இரண்டு ஷாட்டில் நடிக்க வைத்துவிட்டார்.

அதனால்தான் அவர் மீது எனக்கு கொஞ்சம் வருத்தம். ஆனால், அந்த ஷூட்டிங்கிற்குப் போனபோதே இளனைப் பற்றி நிறைய விஷயங்கள் சொன்னார்கள். ஆனால், அவர் நடிகராவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இருந்தாலும், இந்தப் புதிய முயற்சிக்கு என் வாழ்த்துகள்!" எனப் பகிர்ந்திருக்கிறார்.

Anupama : ``அந்த காதலால் மன ரீதியான கொடுமைகளுக்கு ஆளானேன்!" - மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்

மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இறுதியில் உங்கள் அமைதியைக் கண்டறிய, பயனற்ற முடிவுகளை நீங்கள் ... மேலும் பார்க்க

DC: "லோகேஷ் கனகராஜ் அண்ணனை ஏன் அப்படி ட்ரோல் செய்தார்கள் என்றே தெரியவில்லை!" - நடிகர் அவினாஷ் பேட்டி

லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கும் 'டி.சி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தில் தேவதாஸ் டீமில் ஒருவராக நடித்திருக்கும் நடிகர் அவினாஷை சந்தித்துப் பேட்டி கண்டோம். தொடர்ந்து அழுத்தமான கதாபாத... மேலும் பார்க்க

Wamiqa Gabbi: "எனக்கு ஒரு காலத்தில் தைரியம் கொடுத்த அந்த தேவதை!" - பகிரும் நடிகை ஜீவா சுப்ரமணியம்

லோகேஷ் கனகராஜ், வாமிகா கேபி நடித்திருக்கும் 'டிசி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பலரும் வாமிகா கேபி குறித்தும், அவருடைய உதவும் பண்பு பற்றியும் பகிர்ந்த... மேலும் பார்க்க

"நமக்கு அவார்டுலாம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்'னு நினைச்சுக்கிட்டேன், ஆனா..!"- விகடன் மேடையில் பிரதீப்

தமிழ் சினிமா கலைஞர்களைக் கொண்டாடும் 'ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025' விழா கடந்த மாதம் (ஜூலை.3) நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை 'டிராகன்', 'டியூட்' படங்களுக்காகப் பிரதீப் ரங்கநாதன் வென்... மேலும் பார்க்க

"டீஸர், ட்ரெய்லரைப் பார்த்தே முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்; ஆனால்..."- விமர்சனங்கள் குறித்து மாதவன்

திரைப்படங்கள் குறித்து ரசிகர்கள் தெரிவிக்கும் விமர்சனங்கள் பற்றி மாதவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'ஜிடிஎன்’ (GDN). ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வ... மேலும் பார்க்க

Mamitha: "ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகத் தன் பயணத்தைத் தொடங்கியவர் இன்று..."- மமிதாவைப் புகழ்ந்த சூர்யா

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தாரா எண்டர்டெய... மேலும் பார்க்க