செய்திகள் :

`சொந்த மருமகளை கூட வாய் நிறைய அப்படி கூப்பிட்டாரா தெரியல‌..' - மறைந்த ஜெயமணி குறித்து நடிகை அபிதா

post image

திருமதி செல்வம், மெட்டி ஒலி, சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகர் ஜெயமணி நேற்று சென்னையில் காலமானார். சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் வந்து இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜெயமணியின் மருமகளாக 'திருமதி செல்வம்' சீரியலில் நடித்த நடிகை அபிதாவிடம் நாம் பேசினோம். தற்சமயம் கேரளாவில் இருப்பதால் அவருக்கு ஜெயமணி மறைந்தது குறித்து தெரியாத சூழலில், தகவல் கேள்விப்பட்டதும் அதிச்சியடைந்தவர், சில நிமிடம் ஆசுவாசப்படுத்திக கொண்டு பேசத் தொடங்கினார்.

'ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னாடி கூடப் பேசினார். போனை அட்டென்ட் செய்ததுமே, 'மருமகளே'ங்கிற அவர் குரலைக் கேட்டா அப்படியொரு சந்தோஷம் எனக்கு உண்டாகும்.

'திருமதி செல்வம்' தொடரில் எனக்கு மாமனார் கேரக்டர் பண்ணும் போது அப்படிக் கூப்பிடத் தொடங்கினார். நாளடைவுல என்னைக் கூப்பிடணும்னாலே அந்த வார்த்தையிலதான் கூப்பிடுவார்.

Abitha

'வாய் நிறைய மருமகளே'னு தன்னுடைய சொந்த மருமகளைக் கூட அந்தளவு கூப்பபிட்டிருப்பாரானு தெரியலை.

காமெடி சீன்ல எந்தளவு வயிறு வலிக்கச் சிரிக்க வைப்பாரோ அதே அளவு எமோஷனல் காட்சிகளில் மனுஷன் நடிப்புல பின்னிடுவார். சீனியர் ஆர்ட்டிஸ்ட்னு யாராவது பேசத் தயங்கினா அவங்ககிட்ட வலுக்கட்டாயமாப் போய் வம்பிழுத்துப் பேசுவார்.

நடிக்க வந்த பிறகு கூச்சம், தயக்கமெல்லாம் தூக்கி எறிஞ்சுடணும். விருதெல்லாம் வேண்டாமா'னு ஜாலியாப் பேசியே அவங்களை மிங்கிள் ஆக வச்சிடுவார்.

திருமதி செல்வம் சீரியல்ல நடிச்சு முடிச்ச பிறகும் தொடர்புலயேதான் இருந்தோம். அப்பப்ப பேசுவார். 'கேரளாவுலயே இருந்தன்னா என் மருமகளை நான் பார்க்கணும்னா என்ன செய்யறது? நு கேப்பார். அவசியமில்லாம நடிப்புக்கு பிரேக் விடக்கூடாதுனு அட்வைஸ் பண்ணுவார். கடைசியா ஒரு தடவை அவர் முகத்தைப் பார்க்க முடியாம போனது என்னுடைய துரதிர்ஷ்டம். உடனே எனக்கு தகவல் தெரிஞ்சிருந்தாக் கூட சென்னை கிளம்பி வந்திருப்பேன்.

இனி 'மருமகளே'ன்னு ஒரு போன் கால் சென்னையிலிருந்து வராதுங்கிறதை நினைச்சாலே மனசு பாரமாகுது' என குரல் உடைய முடித்தார் அபிதா.

"'மெட்டி ஒலி 2' சீக்கிரமே நடக்க வாய்ப்பு இருக்கு!" - விஷ்வா கம்பேக் பேட்டி | Samanthi

'மெட்டி ஒலி' சீரியல் மூலம் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் விஷ்வா. சீரியலில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தவர், தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவரும் 'சாமந்தி' சீரியல் மூலம் கம்பேக் கொடுத்திரு... மேலும் பார்க்க

`டி.ஆர்.பி ரேட்டிங் இனி கிடையாதா?' - சீரியல் ஆடியன்ஸ் கணக்கீட்டில் என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?

டி.ஆர்.பி ரேட்டிங் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? டிவியில் எந்த சீரியலை அதிகம் பேர் பார்க்கின்றனர், எந்த மொழியில் எந்த சேனலை அதிக மக்கள் பார்க்கின்றனர் என்பன போன்ற விபரங்களைத் தரும் டெலிவிஷன் ரேட்டிங் பா... மேலும் பார்க்க

Sreekumar: "ட்ரோல்ஸ் விஷயங்களுக்கு நான் என் ஹஸ்பண்ட்கிட்ட சொல்றது..." - ஷமிதா ஷேரிங்ஸ்

சின்னத்திரையில் 'சிவசக்தி', 'மௌன ராகம்', 'பேரன்பு' எனப் பல்வேறு வெற்றித் தொடர்கள் மூலம் குடும்பங்களுக்கு பேவரிட்டானவர் நடிகை ஷமிதா. தற்போது இவர் மீண்டும் வில்லியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சாமந்த... மேலும் பார்க்க

Samanthi: "சீரியலின் கதை பிடிக்கலைனா சம்பளத்தை அதிகமாகச் சொல்லிடுவேன்!" - சுர்ஜீத் பேட்டி

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சந்தியாராகம்' தொடர் மூலம் மக்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் சுர்ஜித். அந்த சீரியலிலிருந்து விலகியவர் இப்போது 'சாமந்தி' தொடரின் மூலம் மீண்டும் 'ஜீ தமிழ்' சேனலுக்கு வந்திருக... மேலும் பார்க்க

Bigg Boss: மூன்று நேர்காணல், பரபரக்கும் போட்டியாளர் தேர்வு - இன்டர்வியூவில் என்ன கேள்விகள் தெரியுமா?

விஜய் டிவியில் செப்டம்பர் முதல் வாரத்தில் ஒளிபரப்பு தொடங்கவிருக்கிற பிக்பாஸ் சீசன் 10 க்கு போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகள் ஆரம்பமாகி இருக்கின்றன.இதுவரை சுமார் அறுபது பேரிடம் நிகழ்ச்சித் தயார... மேலும் பார்க்க

முன்கூட்டியே வருகிறது பிக் பாஸ் சீசன் 10 ; தேதி விவரம்? - Bigg Boss Updates

விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கு இது பத்தாவது ஆண்டு.முதல் மூன்று சீசன்கள் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பரில் நிறைவடைந்து வந்த‌ன.... மேலும் பார்க்க