செய்திகள் :

'லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்'- அரசு அலுவலகங்களில் `இது' கட்டாயம்; தலைமைச் செயலர் உத்தரவு!

post image

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், துறைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களில் “லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்” என்ற வாசகத்துடன் கூடிய அறிவிப்பு பலகையை பொதுமக்கள் எளிதில் காணும் இடங்களில் கட்டாயம் வைக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் டாக்டர் சாய் குமார் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே இது தொடர்பாக பலமுறை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், சில அலுவலகங்களில் அவை முறையாக பின்பற்றப்படவில்லை என்றும், அறிவிப்பு பலகைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை என்றும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

லஞ்சம்
லஞ்சம்

இதையடுத்து, அனைத்து துறைகளுக்கும் ஒருங்கிணைந்த புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் “லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்” என்ற வாசகத்துடன், ஊழல் தொடர்பான புகார்களை தெரிவிக்க லஞ்ச ஒழிப்புத்துறையின் முகவரி, தொலைபேசி எண்கள், வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் கூடிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அரசு துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தங்களது அதிகாரபூர்வ இணையதளங்களிலும் இதே தகவலை வெளியிட்டு, லஞ்ச ஒழிப்புத்துறையின் இணைய இணைப்பை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு நடைமுறையில் உள்ளதா என்பதை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆய்வுப் பிரிவுகள் மற்றும் ஆய்வுக் குழுக்கள் நேரடியாக ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும், அனைத்து துறைகளும் உத்தரவு முழுமையாக செயல்படுத்தப்பட்டதற்கான Compliance Report-ஐ மனிதவள மேலாண்மைத் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் பதவி பறிப்பு – கோவை அதிமுக-வில் முற்றும் மோதல்?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க அரசிற்கு ஆதரவு அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரின் கட்சி பதவிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற... மேலும் பார்க்க

"விஜய் என்னிடம் தொலைபேசி வாயிலாக பேசினார்"- காவிரி நீர் விவகாரம் தொடர்பாக டி.கே.சிவக்குமார்

காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரமும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை திறப்பது தொடர்பான விவகாரமும் பேசுபொருளாகி இருக்கிறது.இந்நிலையில் டெல்லியில் இன்று (ஜூலை.29) கர்ந... மேலும் பார்க்க

'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை; மாநிலங்களவையில் நிறைவேறிய மசோதா!

'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் இன்று (ஜூலை.29) நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிற... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி: டாஸ்மாக் டெண்டர், பார் ஒப்பந்தங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு! - FIR விவரங்கள்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் IAS உள்ளிட்ட 7 பேர் மீது டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும... மேலும் பார்க்க

'கொசுவை திமுகக்காரனா லாரியில கடத்திட்டு வரான்?' - திமுக கவுன்சிலர் கலகல

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடந்திருந்தது. இதில் பேசிய 181 வது வார்டு திமுக கவுன்சிலர் விஸ்வநாதன் 'எதற்கெடுத்தாலும் திமுக மீது பழி போடுகிறார்கள்!' என நகைச்சுவையாக பேச... மேலும் பார்க்க

`மேட்டூர் திறக்காததால் கடும் வறட்சி; ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும்!' - ஜி.கே.வாசன்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் த.மா.க-வின் டெல்டா மண்டல செயல்வீரர்கள் கூட்டம், அதன் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் என்.ஆர்.ரெங்கராஜன், சுரேஷ் மூப்பனார் உள்ளிட்ட பலர் கலந்துகொண... மேலும் பார்க்க